யானையை பற்றிய மிரள வைக்கும் தகவல்

 

Sulthan Ibrahim : யானையை பற்றிய மிரள வைக்கும் தகவல்

யானை 22 மாதங்கள் கருவை சுமக்கும் . யானை 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும். இதனால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.

சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும். ஒரு யானை ஒரு காட்டேயே உருவாக்கும். ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் .

ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 250 கிலோ உணவில் 10% விதைகள் மற்றும் குச்சிகள் இருக்கும்.

 சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகளும், குச்சி களும் விதைக்கப்படும்.

ஒரு யானை ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும். ஒரு யானை  ஒரு மாதத்திற்கு 3000 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது.

 ஒரு யானை  தன் வாழ்நாளில் 18 லட்சத்து 25 அயிரம் மரம் வளர காரணமாகிறது .

அடுத்த முறை நீங்களும் ,நானும் யானையை சந்திக்கும் பொழுது நம் மனதில் தோன்றக் கூடிய ஒரே காட்சி நாம் பார்க்கும் இந்த காடுகள் மற்றும் அக்சிஜன் இந்த ஜீவனால் இறைவனால் அனுப்பபட்டது என்பதே நம் மனதில் தோன்ற வேண்டும்.

 

 

யானையை  பற்றிய இன்னும் சுவாரஜ்யமான தகவல்

தூய தமிழில் யானைக்கு  60 பெயர்கள் உள்ளது.

யானையின் இரண்டு தந்தங்களும் சம அளவில் இருக்காது. யானையின்  துதிக்கை 40,000 தசைகளால் ஆனது. இந்தியாவில் ஒரு லட்சம் யானைகள் இருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்ட நிலையில் இப்போது இருப்பது 27312 யானைகள் மட்டுமே !

யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை. நோயுற்ற யானைகளுக்கு உணவையும், நீரையும் மற்ற யானைகள் ஊட்டும்.

 நோயுற்ற யானைக்கு மற்ற யானைகள் தடவிக் கொடுத்து அறுதல் படுத்தும். யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை.

5 கி.மிட்டர் தூரத்தில் தண்ணீர் இருந்தால் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை.

யானையின் தும்பிக்கை 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.

இந்தியாவில் உள்ள பெண் யானைகளுக்கு தந்தம் இடையாது. ஆப்ரிக்காவில் உள்ள பெண் யானைகளுக்கு தந்தம் உண்டு.

 பொதுவாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பது இடையாது.கூட்டத்தில் இருக்கும் முதுமை அடைந்த யானை தான் இறப்பது ஊறுதி என்று தெரிந்தால் கூட்டத்தில் இருந்து பிரிந்து உண்ணா நோன்பு இருந்து தன் சாவை தானே தேடிக் கொள்ளும்

  இப்போது நடந்த பாலக்காடு பெண் யானை சம்பவம் மாதிரி.

 இயற்கையை சமநிலை படுத்துவதில் யானையின் பங்கு மிகப் பெரியது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.