தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு

 

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள ஆய்வுத் துறையில், பணியாற்றுவதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

நிறுவனம் - TMB Bank

பணியின் பெயர் - Assistant Manager, Manager, Senior Manager

பணியிடங்கள் - Various

விண்ணப்பிக்க கடைசி தேதி - 09.07.2021

விண்ணப்பிக்கும் முறை – Online

வங்கியின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஓய்வு பெற்ற நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் விண்ணப்பிக்கலாம். பதவிக்கு தகுதியானவர்கள் பிற வங்கியில் இருந்து ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆய்வுத் துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், விண்ணப்பதாரர்கள் 62 வயதுக்கு மிகாமல் உள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

 

Assistant Manager ரூ.22,000/-, Manager ரூ.25,000/-, Senior Manager ரூ.30,000/- மாத ஊதியம் வழங்கப்பட இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தார்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கான இடம், தேதி மற்றும் நேரம் தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/ இந்த லிங்கில் தெரிந்து கொள்ளலாம்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.