சனி- சந்திரன்(தாமத திருமணம்)

 


சனி- சந்திரன்(தாமத திருமணம்)

கால தாமத திருமணம் / நிச்சயித்த திருமணம் சில காரணங்களால் தடைபடுவது போன்றவற்றிற்கு முக்கியமான காரணம் சனி- சந்திரன் சேர்க்கை எனும் 'புனர்பூ தோஷம்'.

ஜாதக அமைப்பு:

ஒருவருடைய ஜாதகத்தில் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒரு அமைப்பு இருந்தால்,

 சந்திரன் வீட்டில் சனி , சனி வீட்டில் சந்திரன் அல்லது இரு கிரகங்களும் பரிவர்த்தனை பெறும்போதும் , சனிக்கு திரிகோணங்களில்(சனிக்கு 1,5, 9 சந்திரன்),மற்றும் சனிக்கு சம சப்தமமாக அல்லது இரண்டில் சந்திரன் அமைவது

 சனி-சந்திரன் சேர்க்கை ஏற்படுகிறது.  இரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று பகை கிரகங்கள்.   பகை கிரகங்கள் இணையும்  சேர்க்கைகள் தாக்கங்கள் உண்டாகக்கூடும்.

  இந்த அமைப்பு கொண்டவர்களுக்கு காலதாமத திருமணம் நிகழும்,  அல்லது பெண் /மாப்பிள்ளை அமைவது மிகவும் கடினம். அல்லது திருமணம் நிச்சயித்து கடைசி நிமிடத்தில்  சிக்கலோ அல்லது தடை ஏற்படக் கூடும் . ஒரு சிலருக்கு திருமணமாகி திருமண வாழ்க்கையில் சில மனகசப்பு ஏற்படக்கூடும்.

 மேற்கண்ட ஜாதக அமைப்பு கொண்டவர்கள்:

1. திங்கட்கிழமைகளில்  வயதானவர்களுக்கு, செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், கடின உழைப்பாளிகளுக்கு  தேடிச்சென்று  அன்னதானம்(தயிர் சாதம்), நீர் மோர்,  நீர்  தானம்  தொடர்ந்து செய்து வாருங்கள்.

 2. பௌர்ணமியன்று சத்ய நாராயண பூஜை செய்து வாருங்கள். சனிக்கிழமை அன்று வரும் பௌர்ணமி இன்னும் சிறப்பு.

3. வளர்பிறை சனிக்கிழமைகளில் அன்னை பராசக்தியை வணங்கி வாருங்கள்.

குறிப்பு:

சனி வக்கிரம் பெற்றிருந்தால் மேற்கண்ட அமைப்பு குறிப்பிட்ட வயதிற்கு  பிறகு மாறும். எனவே இந்த தோஷமும் விலகும். மேலும் குரு பார்வை பெற்றிருக்கும் இந்த அமைப்பு தோஷத்தின் தாக்கத்தை குறைக்கச் செய்யும்.

இதை 'சன்யாச யோகம்' என்றும் கூறுவர் . பெரிய மகான்கள் மற்றும் பல சந்நியாசிகளின் ஜாதகங்களில் இந்த அமைப்பு காணப்படும்.

நன்றி

பத்மபிரியா பிரசாத்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.