மறைவும் ராகுவும்..!

 


மறைவும் ராகுவும்..!

எதை மறைத்தாலும் ராகு, ஒரு வாகனத்தை பாதுகாப்பு கருதி கவர் செய்வோம், அதே கவர் வாகனத்தின் வண்ணத்தை பாழாக்கிய கதைகள் ஏராளம், உடலை மறைக்க துணி இல்லாதவரை மனிதன் அதன் மீது கவர்ச்சியற்று இருந்தான், உடலை மறைக்க மறைக்க அதன் மீது கொண்ட கவர்ச்சியால் மனிதன் பித்துப்பிடித்து அலைகிறான் இதனை மருப்பவர் யாருமில்லை, மறைக்கும் பொருள்கள் அனைத்தும் ராகுவே, வெளியில் மிகுந்த கவர்ச்சியை காண்பித்து ஈர்க்கும் ராகு, இதனால் ஈர்க்கப்பட்டு சென்றால் அதில் இழப்பில்லாமல் மீண்டவரில்லை, விளம்பரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறது சாதாரண 2 ரூபாய் சோப்புக்கு 2 லட்சம் செலவு செய்து அதனை கவர் செய்வார்கள், நாம் என்ன செய்வோம் அது தரும் ஈர்ப்பால் அதனை நாடியே செல்வோம் இப்படி தான் ராகு அனைத்தையும் மறைகிறார், மேகங்களை எடுத்து கொள்ளுங்கள் எத்தனை தடவை மழை பெய்வதைப்போல பாவ்லா காட்டியிருக்கும் இப்படி தான் ராகு செயல்படும், ஒரு பிறந்தநாள் பரிசை அதற்கு உரிய அலங்காரம் செய்து தரும் போது கிடைக்கும் வரவேற்பு, அப்படியே கையில் கொடுக்கும் போது இருக்காது, மனிதனை இந்த ராகு எப்படி எல்லாம் ஆக்கிரமித்து உள்ளார் என்பதை எண்ணி வியக்கிறேன், ராகு மறைப்பதினால் ஏற்படும் தாக்கங்களை பற்றி மீண்டும் பேசுவேன்..!

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.