புதன் !

 


புதன் !

சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் மிக சிறியகிரகம் புதன் . சூரியனை சுற்றி வர புதன் 88 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. புதனுக்குரிய வேறு பெயர்கள் மதிமகன் ,பண்டிதன் ,சௌமியன், கணக்கன் , அறிவன், புலவன் .

 'வித்யாகாரகன்' என்று அழைக்கப்படும் புதன், ஜாதகரின் அறிவு, மதிநுட்பம் ,  புத்திக்கூர்மை நன்கு அமைய  காரணமாகிறார்.

மேலும், வியாபாரம்,  பேச்சாற்றல் , ஜோதிட துறை ,கணினித்துறை, சிற்பம், சித்திரம் ,நுண்கலைகள்,  வணிகம்,சிறுபிள்ளைகள், மாணவர்கள்,தாய்மாமன் , நண்பர் ஆகிவற்றை குறிப்பவர் புதனே.

 விஷ்ணுவை அதிதேவதையாக கொண்ட புதன் , மிதுனம் மற்றும் கன்னியில் (உச்சம்) ஆட்சி பெறுகிறது, மீனத்தில் நீசம் அடைகிறது . இரட்டை தன்மை கொண்ட கிரகமாக கருதப்படுகிறது.

 அரச சபையில் அரசருக்கு ஆலோசனை  வழங்கும் மந்திரிகளை குறிக்கும் கிரகம் புதன். ஒருவருக்கு  குழந்தை தனம் , துடுக்குத் தனத்தை கொடுப்பது புதன்.  வான சாஸ்திரம், கணித சாஸ்திரத்திற்கும் இவரே காரகம் . மிக அழகிய கவி பாடும்/எழுதும் வல்லமை புதன் நல்ல நிலை கொண்ட ஜாதகருக்கு இயல்பாகவே அமையும்.

அதேபோல்  பேச்சு,  தொலைத் தொடர்புத் துறைக்கு புதனே காரணமாவார்.  நம் உடம்பில் கை,தோள்,  தோல் , நெற்றி ,  தொண்டை ,  பச்சை நரம்பு ஆகியவற்றிற்கு காரகத்துவம் புதன் ஆகும்.

சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதன் கிரகம் பலருக்கும் அஸ்தங்கதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஒருவர் ஜாதகத்தில் சூரியனிலிருந்து முன்னே/ பின்னே  புதன் 12° க்கும் குறைவாக இருந்தால் அஸ்தங்கதம் அடைந்திருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், புதன் நீசம், வக்கிரம், புதனுக்கு1,2,5,9 ல் கேது இருந்தால் மேற்சொன்ன காரகத்துவங்கள் பாதிப்படையும்.  தோல் பிரச்சனைகள்,  பேச்சு தடை, தான் சொல்ல வந்ததை சரளமாக சொல்ல முடியாதது,  நண்பர்களால் பிரச்சனை, தாய் மாமனிடம் கருத்து வேறுபாடு, கூட்டுத் தொழிலில் சிக்கல், வணிகத்தில்  தடை, போன்றவறை ஏற்படக்கூடும்.

புதன் சிறக்க:

மேற்கூறிய அமைப்பு ஜாதகத்தில் இருக்கப் பெற்றவர்கள்  புதன் வலுப்பெற புதன்கிழமையன்று  விஷ்ணுவை வணங்கி வரவேண்டும். விஷ்ணுசஹஸ்ரநாமம் தினமும் கேட்டு /சொல்லி வந்தால் மிக நன்று.

 ஏழை மாணவர்களின் கல்விக்கு  உதவி செய்தால் மிகவும் நல்லது.

பச்சை நிறம்  அதிகம் உபயோகப் படுத்துவது சிறந்தது.

நன்றி

 பத்மபிரியா பிரசாத்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.