சிவசங்கர் பாபா பள்ளிக்குள் சொகுசு பங்களா... கண்ணில் படும் மாணவிகள் பலாத்காரம்... தமிழ்நாடு கண்டிராத கொடூரம்!

 

Divakar M | Samayam Tamil : பிரபல தனியார் பள்ளி நிர்வாக இயக்குனர் சிவ சங்கர் பாபா மீது பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் கொடுத்த பாலியல் புகார் சம்பவம் தீயென பற்றி வரும் நிலையில்

தமிழ்நாடு  இதுவரை பாத்திராத ஒரு பள்ளியின் பாலியல் கொடுமைகள் பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நமக்கெல்லாம் தெரிந்த ஒரு முகம்தான் அது. ஆன்மிகத்தின் போர்வையில் சல்லாபத்தில் ஈடுபட்ட எத்தனையோ காமுக சாமியார்களுக்கெல்லாம் சாமியாராக பாலியல் புகாரில் சிக்கியுள்ளார் சிவ சங்கர் பாபா.

 

 

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனை அருகே சுமார் 60 ஏக்கரில் அமைந்துள்ளது சுஷில் ஹரி பள்ளி. இது வெறும் பள்ளி மட்டுமில்லை. ஆன்மிக செயல்பாடுகள் கொண்ட கட்டமைப்பாகவும் உள்ளது. இந்த பள்ளியில் நிர்வாக தலைவர்தான் சிவசங்கர் பாபா. ''கடவுளுக்காக வந்தேன் என்றும் கடவுளாக வந்தேன்'' என்றும் கூறிக்கொள்ளும் இவர் மீது முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் பலர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பாலியல் புகார் பெரும் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

அதில் பிரைமரி பெண் குழந்தைகளும் அடக்கம். பள்ளி வளாகத்திலேயே இவருக்கென்று ஒரு சொகுசு பங்களா உள்ளது. ஆசைப்படும் பள்ளி மாணவிகளை அந்த பங்களாக்குள் அழைத்து வந்து விலையுயர்ந்த சாக்லேட்டுகள், மது பானங்களை காட்டி ஆசையை தூண்டும் இவர் சம்மதிக்கும் மாணவிகள், தப்ப நினைக்கும் மாணவிகள் என அனைவரையும் சிறை பிடித்து க்ரூப் செக்சில் ஈடுபடுவார் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மாணவிகள்.

 

சிவ சங்கர் பாபா

 

இப்படி மாணவிகளை கொண்டு வந்துவிடும் செயல்களில் அந்த பள்ளியில் சில ஆசிரியர்களே ஈடுபட்டுள்ளனர். அப்படி ஒருநாள் பள்ளி மாணவியை சிவ சங்கர் கட்டாயப்படுத்தி பங்களாக்குள் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். அந்த மாணவி அழுதுகொண்டே வெளியே வருவதை சக மாணவர் பார்த்துள்ளார். அந்த விவகாரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வரவே பள்ளியை இரண்டு மாதம் இழுத்து மூடியுள்ளனர். அந்த மாணவன் விஷயத்தை வெளியே சொல்லி விடுவானோ என்று பயந்த பள்ளி நிர்வாகம் மாணவனை ஒரு வழி ஆக்கியுள்ளது. தேர்வு எழுதவிடாமல், மாணவன் மீது பொய்யான புகாரை கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றி விடலாம் என்றும் திட்டமிட்டுள்ளது.

 

இந்நிலையில் மாணவனின் தாயார் இதுகுறித்து கேட்க வந்த போது, அந்த பெண்ணை தனது பங்களாவுக்கு வர வழைத்துள்ளார் சிவ சங்கர் பாபா. அப்போது மாணவனை குறித்து பேசாமல், பங்களாவில் உள்ள ஆடம்பர பொருட்களை காட்டி அந்த பெண்ணின் ஆசையை தூண்டியுள்ளார். இதுவரை பள்ளி மாணவிகளை சீரழித்து வந்தவர் மாணவனின் தாய் மீது ஆசை பட்டு அவரை உறவுக்கு இணங்க முயற்சித்துள்ளார். இதுபோல பல புகார்கள் சிவசங்கர் பாபா மீது குவிந்து வருகின்றன. இந்த பிரச்சினையை குறித்து தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டால் பல ஆதாரங்களை தர தயார் என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவிக்கின்றனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.