பூரம் நட்சத்திரம் பற்றி அறியலாம் !!!

பூரம் நட்சத்திரம் பற்றி அறியலாம் !!!


பூரம் நட்சத்திரம், வானில் வெண்மை நிறத்திலான இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட கூட்டமைப்பாகும். சமஸ்கிருதத்தில் பூரம் நட்சத்திரத்தை பூர்வ பல்குனி என்றும் வழங்கப்படுகிறது. பூர்வ பல்குனி என்றால் பாராட்டுக்குரியது அல்லது சிறப்புடையது என்று பொருள் . பூரம் நட்சத்திரத்திற்கு தமிழில் வேறு பெயர்கள்- கணைஎலி, பகவதி. பூரம் நட்சத்திரத்தின் வடிவங்கள் கண்கள், கட்டில் கால் , சதுரம்.

காலபுருஷ தத்துவத்தில்  ஐந்தாவதாக  ராசியான சிம்மத்தில் பூரம் நட்சத்திரம் முழு நட்சத்திரமாக இருக்கிறது. சுக்கிரன் இதன் அதிபதி. இது ஒரு பெண் நட்சத்திரம்.

நட்சத்திர தேவதை: அர்யமான் ( புகை நிற மேனியை உடையவர் ,சக்தி ஆயுதத்தை ஏந்தியவர்). இதன் விருட்சம் புரசு எனும் பலாச மரம்.

தெய்வம் - அன்னை பார்வதி , ஸ்ரீஆண்டாள் .

ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கிரகம் பூரம் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் அந்த கிரகம் குறிக்கும் உறவிற்கு கீழ்க்கண்ட   குணாதிசயம் / பண்புகள் இருக்கும்.

சூரியன் வீட்டில் அமர்ந்து உள்ளதால் இவர்களுக்கு தலைமைப்பண்பு ஒரு கம்பீரம் , அனைவரையும் கவரும் தோற்றம், சுக போகத்துடன் வாழ்வு செல்வம்-வீடு , வாகனம், ஆபரணங்கள் , பணம் சேர்க்கை , இசை பாடுவதில் வல்லமை, தன்னை அழகாக அலங்கரித்துக் கொள்வார்.

ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் பூர நட்சத்திரத்தில் இருந்தால்…  மனைவி, மகள் மேற்கண்ட குணாதிசயங்களை கொண்டிருப்பர். பெண் எனில் ஜாதகிக்கு மேற்கண்ட குணாதிசயங்கள்  இருக்கும்.

நன்றி

பத்மபிரியா பிரசாத் 

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.