வைகாசி விசாகம் சிறப்பு:

 


ஸ்ரீ குருப்யோ நம!!!

வைகாசி விசாகம்  சிறப்பு:

சந்திரமான முறையில் 'விசாகம்' நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமியால்,  இந்த மாதத்தை  'வைகாசி' மாதம் என்றழைக்கப்படுகிறது.

விசாகம்

----------------

 'வி' - மேலான , பட்சி

' சாகம்' -  இரண்டாக பிரிப்பது அல்லது  சஞ்சரிப்பது என்று பொருள்.

பட்சி(மயில்) மீது சஞ்சரிப்பதால் முருகனுக்கு விசாகன் என்ற பெயரும் உண்டு

விசாகம் நட்சத்திரம் வானில் ஐந்து நட்சத்திர கூட்டமைப்பு கொண்ட தோரணம் போல் காட்சி அளிக்கக்கூடியது.  முறம் , பானை செய்யும் சக்கரம் போன்ற அமைப்பையும் ஒத்தது விசாகம் நட்சத்திரம்.

விசாக நட்சத்திரத்தின் அதிபதி குரு. துலாம் ராசியில் 3 பாதமும்,  விருச்சிக ராசியில் ஒரு பாதமும் கொண்டது. இதன் விருட்சம் விளாமரம்.

முருகரின் பிறப்பு:

--------------------------------

சிவப்பெருமான் தன் நெற்றிகண்ணால்  தீப்பொறிகளை தோன்றச் செய்து, அந்த தீப்பொறிகளை வாயுபகவானிடமும், அக்னிபகவானிடமும் தந்து,  கங்கையாற்றில் விடும் படி உத்தரவிட்டார் .

நெற்றிகண் என்பது பரணி நட்சத்திரத்தின் வடிவம். இங்கு சூரியன் உச்சம். இங்கு தோன்றிய தீப்பொறியானது, இதன் நேர் எதிர் ராசியான  ,  துலாமில்-சுவாதியில்  விழுகிறது.

சுவாதியின் அதிபதி வாயு, விசாகத்தின் அதிபதி அக்னி , இருவரும் நெற்றிகண்ணில் தோன்றிய தீப்பொறியை  எடுத்து சென்று கங்கையின் உதவியொடு சரவணப்பொய்கையில் விடுகினறனர். தீப்பொறி ஆறு பிரிவுகளாக - தாமரை மலர்களாக உருமாறி அதில் சரவணன் எனும் ஷன்(ஆறு)முகன் தோன்றினார்.

வைகாசி விசாகத்தின் மற்றொரு சிறப்பு:

 இந்த நாளில் தான் புத்தர் தோன்றினார், ஞானம் பெற்றார்.எனவேதான் வைகாசி விசாகத்தை 'புத்த பூர்ணிமா'  என்று போற்றி வணங்குகின்றனர்.

இந்நாளில் முருகப்பெருமானை நாம் வழிபட்டால் ஞானமும்,  வீரமும் கிடைக்கும்.  வாழ்வில் பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு நலம் பயக்கும்.

நன்றி

பத்மப்பிரியா பிரசாத்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.