புதனும் துரோகமும்..!


 புதனும் துரோகமும்..!

புதன் கன்னி/மீனம்/விருச்சிகம் இவைகளில் நின்றால் ஜாதகர் வாழ்க்கையில் நம்பிக்கை துரோகங்களை அதிகம் சந்தித்து இருப்பார், இதில் சனி/ராகு/கேது தொடர்பு பெற இந்த நம்பிக்கை துரோகங்கள் ஜாதகரின் பிராப்த/சஞ்சித கர்மத்தில் சேரும், கன்னி/மீனம்/விருச்சிகம் இந்த மூன்று ராசிகள் ஒருவரது லக்னம்/ராசிக்கு எந்த வீடோ அந்த வீட்டின் காரக பலனில் நம்பிக்கை துரோகத்தை சந்தித்து இருப்பார், உதாரணமாக: மேஷ லக்னம் என்றாகி புதன் கன்னியில் நின்றால் 6 க்கு உரியவர் என்பதனால் ஜாதகரின் உறவினர்கள் மற்றும் தாய்மாமன்/கடன் இவைகளில் அதிக நம்பிக்கை துரோகம் அவமானம் இவைகளை பெற்று இருப்பார், பலருக்கு நண்பர்களே துரோகம் செய்வார்கள், இவர்கள் எதிர்கொண்ட நம்பிக்கை துரோகமே யாரையும் நம்பாத சந்தேக குணத்தை கொடுத்துவிடும், இதுவே இவர்களுக்கு சில சமயங்களில் பாதகம் செய்யும்..!
இதில் புதனுடன் ராகு/சனி/கேது சாரம்/சேர்க்கை/பார்வை/கோணங்களில் தொடர்பு பெற, ஜாதகருக்கு இந்த நிகழ்வுகள் குறிப்பட்ட வயதுவரை தொடர் கதையாக இருக்கும், அதாவது இவ்வாறான துரோகங்களை சந்தித்தாலும் விழிப்புணர்வு பெறாமல் மீண்டும் மீண்டும் நம்பி ஏமாறுவார், சிலருக்கு வாழ்க்கை முழுவதும் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும், சிலருக்கு புதன் அல்லது அவரின் தொடர்பு பெற்ற தசை வரும் வரை இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்கும், காலம் வரும்போது இவ்வாறான ஏமாற்றங்களை எதிர்கொள்வார், இதே தொடர்பு சிலரை நம்பிக்கை துரோகம் செய்யவும் வைக்கும் இதன் வழியே கர்மம் சேர்ப்பார், இவர்களால் மனதார நம்பிக்கை துரோகம் செய்ய கூடாது என்று நினைத்தாலும் அவ்வாறு இருக்க இயலாமல் போகும், இதில் லக்ன/ராசிகக்கு சுபர் தொடர்பு பெரும்போது தாக்கம் குறையும், மீண்டும் சந்திப்போம்..!
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.