மூலம் நட்சத்திரம் !!!

 


மூலம் நட்சத்திரம் !!!

மூலம் - 27 நட்சத்திர வரிசையில் 19 ஆவது  நட்சத்திரம். கால புருஷ தத்துவத்தில் ஒன்பதாவது ராசியான (பூர்வ புண்ணியம் ஸ்தானம் ) தனுசு ராசியில் இடம் பெற்றிருக்கும் மூலம் நட்சத்திரம் கேதுவை அதிபதியாகக் கொண்டது. குருவின் ஆட்சி வீடான தனுசில் இடம் பெற்றிருக்கும்  முழுமையான நட்சத்திரம். மூலம் நட்சத்திரத்திற்கு ஆனி, அன்றில் குருகு,  கொக்கு, வேர் என்ற பெயர்களும் உண்டு.

மூலம் நட்சத்திரம வானில் 6 நட்சத்திரங்களின் கூட்டமைப்பை கொண்டு சிங்கத்தின் வால், யானை துதிக்கை, அங்குசம் போல் காட்சியளிக்கும்.

மூலம் நட்சத்திரத்தின் தேவதை - நைருதி, தெய்வம் - ஸ்ரீ ஆஞ்சநேயர்

"ஆனி மூலம் அரசாளும், பெண்(கன்னி)மூலம் நிர்மூலம்"

ஆனி மாதத்தில் பௌர்ணமி , மூலம் நட்சத்திரத்தன்று வரும்.  மூலம் நட்சத்திரத்திற்கு ஆனி என்ற பெயரும் உண்டு என்பதை பார்த்தோம். எனவே 'ஆனி மூலம் அரசாளும்' என்பது மூலம் நட்சத்திரத்திரமும் பௌர்ணமி திதியும் இனைந்த நாளில் பிறந்தவர்கள் அரசனுக்கு நிகரான யோகத்தை பெற்றிருப்பார்கள். ' பெண்(கன்னி) மூலம் நிர்மூலம்' என்றால்  கன்னியா மாதமான புரட்டாசி மாதத்தில்  மூலம் நட்சத்திரம்  நவராத்திரி  நாட்களில் வரும். அன்னை துர்க்கை மகிஷாசுரனை  புரட்டாசி நவராத்திரியில் வதம்(நிர்மூலம்) செய்தாள்.  பெண் மூலம்  எனப்படும்  புரட்டாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் தீயவற்றை அழித்து நிர்மூலமாக்கி விடுவாள் என்பது இதனுடைய உட்பொருள்.

கேதுவின் காரகத்துவம் - ஞானம், விரக்தி/ பற்றற்ற மனநிலை, ஆன்மீக உணர்வு, திட சித்தம் .

 குருவின் காரகத்துவம் - ஒழுக்கம் நேர்மை, நீதி, மரியாதை, கவுரவம், பக்தி, நிர்வாகம், பொறுமை.

ஒருவருடைய ஜாதகத்தில் மூலம் நட்சத்திரத்தில் ஏதேனும் ஒரு கிரகம் இருந்தால் அந்த கிரகத்தின் உறவு காரகத்துவம் மேற்கண்ட பண்பினை ஒத்திருக்கும்.

உதாரணத்திற்கு ஒருவருடைய ஜாதகத்தில் குரு மூலம் நட்சத்திரத்தில் இருந்தால் , அந்த ஜாதகர் மேற்கண்ட  குணாதிசயங்களை கொண்டிருப்பார். அதுவே சுக்கிரன் மூலம் நட்சத்திர சாரம் வாங்கி இருந்தால்  ஜாதகி /மகள் /மனைவி மேற்கொண்ட பண்பினை கொண்டிருப்பார்.

நன்றி

பத்மபிரியா பிரசாத்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.