வீட்டில் சமையலறையை குறிக்கும் கிரகம் - சுக்கிரன்


ஸ்ரீ குருப்யோ நமஹ!!!

சமையலறை!!

வீட்டில் சமையலறையை குறிக்கும் கிரகம் - சுக்கிரன்

சுக்கிரன் - ராகு

-----------------------------

 சமையலறை மிகவும் பெரியதாக இருந்ததால் அது ராகுவின் அம்சமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சுக்கிரன் - ராகு சேர்க்கை  வீட்டில வீட்டில் வசிக்கும் பெண்களுக்கு ( மனைவி, மகள்)  உடல் நலக்கோளாறு முக்கியமாக கர்ப்பப்பை கோளாறு ஏற்படக்கூடும்.

சுக்கிரன்- சனி

---------------------------

 பொருட்கள் சேமிக்கும்  இடம் சனியின் ஆதிக்கம் கொண்டதாகும். சமையலறையிலே பொருட்களை சேமிக்கும் பகுதி இருந்தால் அது சுக்கிரன்- சனி சேர்க்கையாக எடுத்துக் கொள்ளலாம்.

உணவு அருந்தும் இடமும் சனி ஆதிக்கம் உள்ளது. சமையலறையிலே உணவருந்தும் பகுதி அமைந்து இருந்தால் , சுக்கிரன்- சனி சேர்க்கையாகிறது.

 மேற்கண்ட சேர்க்கை  லக்ஷ்மி  யோகத்தை கொடுக்ககூடியது.  இவ்வாறு அமைப்பு இருக்கும் வீட்டில் நல்ல பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

சுக்கிரன் - செவ்வாய்

---------------------------------------

  சமையலறையை  ஒட்டி படுக்கையறை இருந்தால் சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கை என எடுத்துக்கொள்ள வேண்டும்.    மனைவி - கணவன் ஒற்றுமை ஓங்கும் .

சுக்கிரன்- சந்திரன்

-----------------------------------

 சமையலறையில் தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருப்பதை தவிர்க்க வேண்டும் .  இது சுக்கிரன்-சந்திரன் சேர்க்கையை கொடுக்கக்கூடியது. பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சினைகள் வரக்கூடும். பணம் தண்ணீர் போல் கரையும்.

சுக்கிரன்-கேது

---------------------------

சமையலறையில் தலைமுடி  உதிர்ந்தால் உடனே அப்புறப்படுத்துங்கள். தலைமுடி என்பது கேதுவை குறிக்கும்.

 சுக்கிரன்- கேது சேர்க்கை அவ்வீட்டு பெண்களுக்கு மன விரக்தி ஏற்படும். காரணமாகும். பண சுழற்சி தடை செய்யும்.

சுக்கிரன் - குரு

----------------------------

சமையலறையில் பூஜை அறை அமைந்தால், சமையல் அறையை ஒட்டி பூஜை அறை இருந்தாலும் சுக்கிரன் - குரு சேர்க்கையை கொடுக்கும்.  இந்த அமையும் உள்ள வீட்டில் பொன் - பொருள் சேமிப்பு இருக்கும்.   கணவன் மனைவி ஒற்றுமை நன்கு அமையும்.

நன்றி

பத்மப்ரியா பிரசாத்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.