ஆக்கம்/காத்தல்/அழிதல் நட்சத்திரங்கள்..!

 


ஆக்கம்/காத்தல்/அழிதல் நட்சத்திரங்கள்..!

சோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் அதனை ஆக்கம், காத்தல், அழித்தல் என்று மூன்று வகைபடுத்தி உள்ளனர், ஆக்கம் ஒரு பொருள்/உயிரினத்தின் ஆக்கத்தை குறிக்கிறது, அதாவது ஆரம்பநிலையை குறிக்கும், காத்தல் பொருள்/உயிரினத்தை காப்பது, அதாவது ஆக்கத்தால் ஆம்பநிலை அடைந்த காரகத்தை பாதுகாப்பது, அழித்தல் என்பது பொருளாகட்டும்/உயிராகட்டும் ஒருநாள் அழிவை சந்திக்கவே செய்யும் அதனை குறிப்பதே அழித்தல், இந்த மூன்றுவகையை ஜாதகத்தில் எவ்வாறு பொருத்தி  என்பலன் காண்பது என்றால், ஆக்கம் கர்ம சேர்க்கை, காத்தல் கர்மத்தை கழிக்கும் உபாயம், அழிதல் கர்மத்தை அனுபவித்து கழிப்பது, இதனை ஜனன ஜாதகத்தில் சனி/ராகு/கேது நின்ற நட்சத்திரங்களுடன் பொருத்திபார்த்தால் அந்த ஜாதகர் கர்மத்தை எவ்வாறு அனுபவிக்க/கழிக்க இருக்கிறார் என்பதை கணிக்கலாம், மூன்று வகை நட்சத்திர அட்டவணை கீழே தருகிறேன், மீண்டும் சந்திப்போம்..!

ஆக்கம்..!

அஸ்வினி, ரோகிணி, புனர்பூசம், மகம், ஹஸ்தம், விசாகம், மூலம், திருவோணம், பூரட்டாதி..!

காத்தல்..!

பரணி, மிருகசிரீஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி..!

அழித்தல்..!

கார்த்திகை, திருவாதிரை, ஆயில்யம், உத்திராடம், ஸ்வாதி, கேட்டை, உத்திரம், சதயம், ரேவதி..!

குறிப்பு: இந்த நட்சத்திர அட்டவணையை கர்ம கிரகங்களை தவிர மற்ற கிரகம் நின்ற நட்சத்திரத்துடனும் பொருத்தி பலன் காணலாம், அதன் வழியே அந்த கிரகங்களின் நோக்கத்தை அறியலாம்..!

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.