செவ்வாய்!!!

 


செவ்வாய்!!!

மங்களன் ,‌ குஜன், குமாரன்,‌ சக்திதரன்,  என்று அழைக்கப்படும் செவ்வாய் சூரிய குடும்பத்தில் நான்காவதாக உள்ள கிரகம், சிவப்பு நிறத்தில் இருக்கும். இதிகாசத்தில் செவ்வாயை பூமாதேவியின் புதல்வனாக  வர்ணிக்கிறது.  காலபுருஷ தத்துவத்தில் ஒன்றாம் (உயிர் )மற்றும் எட்டாம்(ஆயுள்) ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் விளங்குகிறது .

பிருகு நந்தி நாடியில் - செவ்வாய் ஜாதகியின் கணவரையும், இருபாலருக்கும் இளைய சகோதரத்தைக் குறிக்கும் கிரகம்.

வீரம், முன்கோபம், ஆற்றல் ,கடின உழைப்பு, ரத்த அணுக்கள் , பல், மண்டையோடு, எலும்பு மஜ்ஜை, ராணுவம்,  காவல்துறை, விவசாய நிலம் ஆகியவற்றிற்கு  செவ்வாயே காரகத்துவம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் அல்லது நட்பு கிரகங்களோடு இணையும்பொழுது செவ்வாய் பலம் பெறுகிறது.  இவ்வாறு  செவ்வாய் பலம் பெற்ற ஜாதகர், நல்ல துணிச்சல், ஆற்றல்,  வீரம் மிக்கவராக சற்று முன்கோபம் கொண்டவராக , நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவராக இருப்பார்கள்.

வலுவிழந்த செவ்வாய்:

செவ்வாயுடன் ராகு /கேது இணையும் போது  - செவ்வாய்க்கு (வக்கிரம் இல்லாத) 1,2,5,9 ல் ராகு / கேது  இருந்தாலும் ,  செவ்வாய் நீச்சம் ஆகி இருந்தாலும் , சூரியனுக்கு முன்-பின் 17  பாகைக்குள்  இருந்தால் செவ்வாய் அஸ்தங்கதம் அடையும். இந்த அமைப்பு கொண்டவர்களுக்கு செவ்வாய் காரகத்துவம்  பாதிப்படையும்.

மேற்கண்ட அமைப்பில் இருக்கும் ஜாதகர்கள் செவ்வாய் வலுப்பெற்று வதற்கு, செவ்வாயின் அதிதேவதையான முருக பெருமானை  செவ்வாய்தோறும் வழிபடவேண்டும். சிவப்பு நிற ஆடைகளை அடிக்கடி அணியலாம். சமையலுக்கு மண் பாத்திரங்கள் உபயோகப்படுத்தலாம், செம்பு பாத்திரத்தில் நீர் அருந்தலாம்,  செவ்வாய்க்குரிய ரத்தினமான பவளத்தை அணிந்து கொள்ளலாம்

குறிப்பு :

வலுவிழந்து செவ்வாய் பரிவர்த்தனை பெற்றால் நன்மை உண்டு.

நன்றி

 பத்மபிரியா பிரசாத்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.