கர்ம விளக்கம்..! சஞ்சித கர்மா..!

 


கர்ம விளக்கம்..!

சஞ்சித கர்மா..!

பல ஜென்மங்களில் தெரிந்தோ/தெரியாமலோ சேர்த்த கர்மத்தின் மொத்தம், தெரிந்த கர்மம் என்பதின் பொருள் ஒரு செயலின் விளைவை தெரிந்தே செய்வது, தெரியாமல் செய்த கர்மம் என்பதன் பொருள் ஒரு செயலின் விளைவை உணராமல் செய்தது, இதனை அடிதளமாக கொண்டதே மறுபிறப்பு, முன்னர் சேர்த்த கர்மத்தின் எதிர்விளைவை அனுபவிக்கவே பிறப்பு நிகழ்கிறது என்பதை பகவத் கீதையும் சுட்டிக்காட்டவே செய்திருக்கிறது, சட்டத்தை எளிதாக கற்ற பெண் கணவனை பெற இயலாமல் போவதேன், தன் பெற்றோருடன் நல்ல புரிதலை கொண்டுள்ள பெண்ணுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போவதேன், ஏனெனில் தான் முற்பிறவியில் செய்த செயலுக்கான விளைவுகளே(கர்மம்), இதனை அந்த பெண் மறந்து விட்டாள், முந்தைய செயலுக்கான எதிர்வினையே தற்போதைய நிலை என்பதை உணரவேண்டும், இந்த ஜென்மத்தில் புரியும் அத்தனை செயலின் எதிர்வினைகள் தனித்தே சேர்க்கபடுகிறது, இந்த ஜென்மத்தில் தான் செய்த செயலுக்கான பலனை எதிர்பார்த்து கிடைக்காமல் இறந்து போனால் அடுத்த ஜென்மத்தில் அதனை பெறவே மருபிறப்பு எடுப்பார், உங்களுக்கு மருபிறப்பில் நம்பிக்கை இல்லை என்றால், இந்த பிறவியில் (கருப்பையாக தோன்றியது முதல்) குழந்தை பருவத்தில் செய்த செயலுக்கு உண்டான எதிர்வினையே இந்த வாழ்க்கையில் நீங்கள் தற்போது அனுபவிக்கும் நல்ல அல்லது கெடுதியான நிலை என்று நினைத்துக்கொள்ளுங்கள்..!

பிராப்த கர்மா..!

சஞ்சித கர்மத்தின் ஒரு பகுதியே இந்த பிறவியில் ஒருவர் அனுபவிக்க வேண்டிய பிராப்த கர்மா, முந்தைய செயலுக்கான எதிர்வினையே இந்த ஜென்மத்தின் நடைபெறும் நிகழ்வுகள் அதையே நாம் தலைஎழுத்து என்கிறோம், உதாரணமாக ஒரு பெண் மகள், மனைவி, வக்கீல் என்று மூன்று நிலையில் செயல்பட்டாலும், அதனை எங்கே எவ்விதத்தில் வெளிபடுத்த வேண்டுமோ அங்கே தான் வெளிபடுத்துவார், தன் பெற்றோரிடம் மகளாக, தன் கணவரிடம் மனைவியாக, தன் தொழிலில் வக்கீலாக தன்னை வெளிபடுத்தி கொள்வார், இவ்வாறே  சஞ்சித கர்மத்தை ஒருவர் மொத்தமாக அனுபவிப்பதில்லை, அதர்க்கான காலம் கனியும் போது, சூழ்நிலையும்/தேவையும் எழும் போதே மருபிறப்பு எடுத்து அனுபவிக்கிறார் இதையே பிராப்த கர்மம் என்கிறோம்..!

கிரியமான கர்மா..!

தற்போதைய செயல்களுக்கான எதிர்வினையின் மொத்த வடிவமே கிரியமான கர்மா, மனிதன் தன் முந்தைய செயல்களின் எதிர்வினைகளால் இயந்திரத்தனமாக கையாளபடுகிறான், ஆனால் மனிதன் பொம்மை அல்ல, மனிதன் நினைத்தால் இதனை ஆத்ம பலம் கொண்டு புதிய செயல்களை உருவாக்கி மாற்ற இயலும், சஞ்சித கர்மா/பிராப்த கர்மா இரண்டும் ஏற்க்கனவே தீர்மானிக்கபட்ட/நிர்ணயம் செய்யபட்ட இலக்கு அதனை மாற்ற இயலாது, ஏனெனில் அது முந்தைய செயலுக்கான எதிர்வினைகள், கிரியமான கர்மா என்பது நாம் இப்போது செய்யும் செயல்கள், அது நமது கட்டுபாட்டில் உள்ளவை, அதனை நாம் நினைத்தால் மாற்றி அமைக்க இயலும்..!

உதாரணமாக: ஒரு பெண்ணுக்கு குழந்தை பெற்றுக்கொள்ள சிக்கலான நிலை அமைவது பிராப்த கர்மத்தின் பலன் அதாவது முந்தைய கர்மத்தின் எதிர்வினை எதிர்கொண்டே ஆகவேண்டும், இது சஞ்சித கர்மத்தின் ஒரு பகுதியும் கூட, ஆனால் சரியான அறுவை சிகிச்சை வழியே அதனை நீக்க முயல்வது அந்த பெண்ணின் கிரியமான கர்மா..!

ஆகாமிய கர்மா..!

ஒருவரின் உள்ளார்ந்த புரிதலால் ஏற்படும் சிந்தனையின் விளைவே ஆகாமிய கர்மா..!

உதாரணமாக: ஒரு பெண் தனக்கு குழந்தை பிறக்கும் சிக்கலில் இருந்து விடுபட அறுவை சிகிச்சை செய்ய சிந்திப்பது ஆகாமிய கர்மா, சிந்திப்பது ஆகாமிய கர்மா அதனை செயல்படுத்தினால் கிரியமான கர்மா..!

இந்த நான்கு வகை கர்மத்தின் பலனை ஒருவர் மூன்று வகையில் அனுபவிக்கிறார்கள் அவை என்ன?, தரித்தா, தரித்தா-அதரித்தா, அதரித்தா, இந்த மூன்று விதங்களின் விளக்கத்தை அடுத்த பதிவில் பார்க்கலாம், மீண்டும் சந்திப்போம்..!

தொடரும்..!

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.