சனி - கர்மகாரகன்

 


ஸ்ரீ குருப்யோ நமஹ!!!

சனி - கர்மகாரகன்

சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய வெளிச்சுற்று கிரகமான சனி சூரியனை சுற்றிவர 29.6 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. சனி கோளிற்கு மொத்தம் 61 நிலவுகள் உள்ளது. இதன் உள் பகுதி இரும்பு மற்றும் நிக்கல் பாறைகளால்  அமைந்துள்ளது. அடர்த்தி மிகக்குறைவான ஒரு கருநீல தோற்றம் கொண்டது சனி .

ஜோதிடத்தில் சனியை சனைச்சரன் என்று அழைக்கப்படுகிறது. 'சனை' என்றால் மெதுவாகச் ' சரன்' நகர்த்தல். கோள்களில் மெதுவாக- ஒரு ராசியைக் கடக்க இரண்டரை வருடம் எடுத்துக்கொள்வது சனி கிரகம்.

புராணத்தில் சனி, சூரியனின் புதல்வனாக கருதப்படுகிறது. சனி கிரகம் நம் செயல்களுக்குரிய (கர்ம பதிவு) பலனை கொடுப்பதால் சனியை கர்மகாரகன் என்று அழைக்கிறோம். அந்த செயல் நன்மை/தீமை எதுவாகினும் அதற்குரிய பலனை அனுபவித்தே ஆக வேண்டும் .  சனி கிரகத்தை நினைத்தாலே பலருக்கும் பயம் ஏற்படும்.

சனியின் காரகத்துவம் :

மூத்த சகோதரர், பெரியப்பா,ஜீரண உறுப்பு,  வீட்டில் சாப்பிடும் அறை,  சேமிப்பு அறை, தொழில், உத்தியோகம்(வேலை),  முழங்கால், கடும் உழைப்பு, பொதுமக்கள், எண்ணைய், முதிர்ந்த தோற்றம், தாமதம், துப்புரவு பணி, …

பிருகு நந்தி நாடி:

------------------------------

ஜாதகத்தில்  சனி தன் சொந்த வீட்டில் மகரம் மற்றும் கும்ப ராசியிலும் இருந்தாலும்,  அல்லது அதனுடைய நட்சத்திரமான  பூசம் ,  அனுஷம் மற்றும் உத்தரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில்  சுய சாரம் பெற்றிருந்தாலும்  அல்லது துலாம் ராசியில் இருந்தாலும் சனி வலுவாக இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 மாறாக சனிக்கு(வக்கிரம் இல்லாத) 1,2,5,9,7ல் சந்திரன்/ செவ்வாய் இருந்தால் , சனி மேஷ ராசியில் இருந்தாலும்,  சனிக்கு (வக்கிரம் இல்லாத)1,2,5,9 கேது  இருந்தாலும் , சனி சூரியனுடைய மிக நெருங்கி(அஸ்தங்கதம்) இருந்தாலும், சனி வலு இழந்ததாக கருத வேண்டும். இதனால் வேலையில் அடிக்கடி மாற்றம்/ இடமாற்றம் , வேலையில் விரக்தி போன்றவை ஏற்படக்கூடும். சனி-செவ்வாய் தொடர்பால் அதிக கடன் சுமை கூடும். ஜாதகத்தில், மேலே கூறிய அமைப்பு இருப்பவர்கள் சுய தொழில் செய்வதை தவிர்ப்பது நல்லது.

 கோள்சாரத்தில் சனியுடன் கேதுவுடன் தொடர்பு கொண்டிருந்தால் தொழில் அல்லது உத்தியோகத்தில் விரக்தி நிலை காணப்படும்.  தொழிலில் புதிய முயற்சிகள் எடுக்க கூடாது.

 இவர்கள்

1. சனியின் அதிதேவதையான முனீஸ்வரன் , சாஸ்தாவை வழிபட வேண்டும் .

2. கடின உழைப்பாளி , வயதானவர்களை தேடி சென்று உதவ வேண்டும்.

3. கருப்பு வண்ணத்தைத் அடிக்கடி பயன்படுத்த வேண்டும்.  ரத்தினனத்தில் நீலக்கல் உபயோகிப்பதாலும் சனி பலம் பெறக் கூடும்.

4. காக்கைக்கு அன்னமிட வேண்டும்.

5. கால பைரவ வழிபாடு நல்ல பலனைக் கொடுக்கும்.

நன்றி

பத்மபிரியா பிரசாத்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.