தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

 

  தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள்

 1. ஐரோப்பிய மொழிகள் தவிர்த்து அச்சில் ஏறிய முதல் மொழி எது? தமிழ்
 2. அச்சுத் தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் புத்தகம் எது? தம்பிரான் வணக்கம் 1578 கோவாவில் வெளியிடப்பட்டது
 3.  தமிழ்நாட்டில் முதன் முதலாக எங்கு அச்சுக் கூடம் அமைக்கப்பட்டது? தரங்கம்பாடி 1709
 4. திருக்குறள் முதன்முதலாக அச்சில் வெளியிடப்பட்ட ஆண்டு எது? 1812
 5. தொல்காப்பியத்தை பதிப்பித்தவர் யார்? சி.வை தாமோதரனார்
 6. பத்துப்பாட்டு பதிற்றுப்பத்து ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர் யார்? உ வே சாமிநாதன்
 7. சி வை தாமோதரனார் பதிப்பித்த நூல்கள் யாவை? தொல்காப்பியம் வீரசோழியம் இறையனார் அகப்பொருள் இலக்கண விளக்கம் கலித்தொகை மற்றும் சூளாமணி
 8.   உ வே சாமிநாதன் பதிப்பித்த நூல்கள் யாவை? சீவக சிந்தாமணி பத்துப்பாட்டு சிலப்பதிகாரம் புறநானூறு புறப்பொருள் வெண்பாமாலை மணிமேகலை ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து
 9. சிலப்பதிகாரம் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது? 1892
 10. புறநானூறு பதிப்பிக்கப்பட்ட ஆண்டு எது? 1894
 11. தென்னிந்திய மொழிகள் தனிப்பட்ட மொழிக்குடும்பத்தைச் சார்ந்தவை யாவை? இந்தோ-ஆரிய குடும்ப மொழிகளோடு தொடர்பில்லாதவை என்னும் கோட்பாட்டை உருவாக்கியவர் யார் F.W எல்லிஸ்
 12. திராவிட அல்லது தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலை வெளியிட்டவர் யார்? ராபர்ட் கால்டுவெல்
 13. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது? 1856
 14. தமிழ் தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல் எது? மனோன்மணியம்
 15.  மனோன்மணியம் என்னும் நூலை எழுதியவர் யார்? பி சுந்தரனார்
 16. தமிழிசை வரலாறு குறித்த நூல்களை வெளியிட்டவர் யார்? ஆபிரகாம் பண்டிதர்
 17. தமிழில் 14 வரிசையில் வடிவத்தை அறிமுகம் செய்தவர் யார்? பரிதிமாற்கலைஞர்
 18. தமிழ் மொழியின் தூய்மை வாதத்தின் தந்தை என்று போற்றப்படுபவர் யார்? மறைமலை அடிகளார்
 19. தனித்தமிழ் இயக்கத்தை அல்லது தூய தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் யார்? மறைமலை அடிகள்
 20. மறைமலையடிகள் எந்த நூலுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார்? முல்லைப்பாட்டு பட்டினப்பாலை
 21. மறைமலை அடிகள் எந்த பத்திரிக்கையில் பணி புரிந்தார்? சித்தாந்த தீபிகை
 22. மறைமலை அடிகளாரின் ஆசிரியர் யார்? பி சுந்தரனார் சோமசுந்தர நாயகர்
 23. தனித்தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு? 1916
 24. ஞானசாகரம் அல்லது அறிவு கடல் என்னும் பத்திரிக்கையினை தொடங்கியவர் யார்? மறைமலை அடிகள்
 25. பொதுநிலை கழகத்தை உருவாக்கியவர் யார்? மறைமலை அடிகள்
 26. சமரச சன்மார்க்க சங்கம் எனும் நிறுவனத்தை நிறுவியவர் யார்? மறைமலை அடிகள்
 27. மதராஸ் பிராமணரல்லாதோர் சங்கம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது? 1909
 28. மதராஸ் ஐக்கிய கழகம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்? டாக்டர் நடேசனார் 1912
 29. மதராசு பிராமணரல்லாதோர் சங்கம் பின்னாளில் எவ்வாறு அழைக்கப்பட்டது? மதராஸ் ஐக்கிய கழகம்
 30. சென்னை திருவல்லிக்கேணியில் திராவிடர் இல்லம் எனும் தங்கும் விடுதியை நிறுவியவர் யார்? டாக்டர் நடேசனார்
 31. தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் உருவாக்கியவர் யார்? டாக்டர் நடேசனார் சர் பிட்டி தியாகராயர் டி எம் நாயர் மற்றும் அலமேலுமங்கை தாயார் அம்மாள் 
 32. தென்னிந்திய நல உரிமை சங்கத்தின் கொள்கைகளை பரப்புரை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட செய்தித்தாள்கள் யாவை? திராவிடன் (தமிழ்)  ஜஸ்டிஸ் (ஆங்கிலம்) ஆந்திரப் பிரகாசிகா (தெலுங்கு)
 33.  இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் எப்போது நடைபெற்றது? 1920
 34. இந்தியாவிலேயே முதன்முதலாக தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரவையை அமைத்த மாநிலம் எது? மதராஸ்
 35.  சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சர் யார்? சுப்பராயலு ரெட்டியார் 
 36. தேர்தல் அரசியலில் பெண்களை பங்கு பெறச் செய்த முதல் கட்சி எது? நீதிக்கட்சி
 37. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்? டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1926
 38.  பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு எது? 1924
 39.  பொதுப் பணியாளர் தேர்வாணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது?  1929
 40. இந்து சமய அறநிலையச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு எது? 1926
 41. துருக்கியைச் சேர்ந்த இஸ்லாம் சமூகத்தில் சேர்த்து எடுத்த உன் முயற்சி மேற்கொண்டவர் யார்? முஸ்தபா கமால் பாட்சா
 42. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இஸ்லாம் சமூக சீர்திருத்தவாதி யார்? அமானுல்லா
 43. சுயமரியாதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்? ஈவேரா
 44. வைக்கம் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தமிழகத்தைச் சேர்ந்த போராட்ட வீரர் யார்? ஜார்ஜ் ஜோசப்
 45. சேரன்மாதேவி குருகுலப் பள்ளியை நடத்தியவர் யார்? வ.வே.சு ஐயர்
 46. சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1925
 47. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தாள் எது? குடியரசு
 48. ஈவேரா எந்தப் புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினான்? சித்திரபுத்திரன்
 49. குடியரசு இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1925 
 50. ரிவோல்ட் பத்திரிக்கை தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1928 
 51. புரட்சி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1933 
 52. பகுத்தறிவு இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1934 
 53. விடுதலை நாளிதழ் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 1935
 54.  பர்மாவில் 1954ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தரின் 2500 ஆவது பிறந்தநாள் விழாவில் கலந்து  கொண்டவர் யார்? ஈவேரா
 55. தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமைவாதி யார்? சிங்காரவேலர்
 56. சாதி ஒழிப்பு என்னும் நூலை எழுதியவர் யார்? பி ஆர் அம்பேத்கர்
 57. அம்பேத்கர் எழுதிய சாதி ஒழிப்பு எனும் நூலை ஈ.வே.ரா எந்த ஆண்டு பதிப்பித்தார்? 1936
 58. முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது? 1937 முதல் 1939 வரை
 59. நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு எது? 1944
 60. தமிழ்நாட்டில் பள்ளிகளில் தொழில் கல்வி பயிற்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்? ராஜாஜி
 61.  தமிழ்நாடு இந்து வாரிசுரிமை சீர்திருத்தச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு எது? 1989
 62. தாத்தா என பரவலாக அறியப்பட்ட தமிழக சீர்திருத்தவாதி யார்? இரட்டைமலை சீனிவாசன்
 63.  ராவ் சாகிப் ராவ் பகதூர் திவான் பகதூர் ஆகிய பட்டங்களைப் பெற்ற தமிழக சீர்திருத்தவாதி யார்? இரட்டைமலை சீனிவாசன்
 64.  இரட்டைமலை சீனிவாசனின் சுயசரிதை யாது? ஜீவிய சரித சுருக்கம் 1939
 65. ஆதிதிராவிட மகாஜன சபை உருவாக்கியவர் யார்? இரட்டைமலை சீனிவாசன் 1893
 66. இரட்டைமலை சீனிவாசன் சென்னை மாகாண சட்டசபை உறுப்பினரான ஆண்டு எது? 1923
 67. முதல் மற்றும் இரண்டாம் வட்டமேஜை மாநாடுகளில் கலந்து கொண்ட தமிழக சீர்திருத்தவாதி யார்?இரட்டைமலை சீனிவாசன்
 68. 1932 ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தமிழக கையெழுத்திட்ட தமிழக சீர்திருத்தவாதி யார்? இரட்டைமலை சீனிவாசன்
 69. சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் உறுப்பினர் யார்? எம் சி ராஜா
 70. ஆதிதிராவிடர் மற்றும் ஆதி ஆந்திரர் என்னும் வார்த்தைகளை பயன்படுத்துமாறு பரிந்துரைத்தவர் யார்? எம் சி ராஜா
 71. 1928ஆம் ஆண்டு அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார்? எம் சி ராஜா
 72. சென்னை மாகாணத்தில் தொழிலாளர் சங்கங்களை அமைப்பதில் முயற்சி மேற் கொண்டவர்கள் யார்? பிபி வாடியா, ம.சிங்காரவேலர், திரு. வி.க
 73. இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் எது? சென்னை தொழிலாளர் சங்கம் 1918
 74. அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் முதல் மாநாடு எங்கு எப்பொழுது நடைபெற்றது? பம்பாய் 1920
 75. சென்னை மாகாண தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் யார்? சிங்காரவேலர்
 76.  காரல் மார்க்ஸ் சார்லஸ் டார்வின் ஹெர்பர்ட் ஸ்பென்சர்  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்  ஆகியோரின் கருத்துக்களை தமிழில் வடித்தவர் யார்?  சிங்காரவேலர் 
 77. முதன் முதலாக மே தின விழாவை ஏற்பாடு செய்தவர் யார்? சிங்காரவேலர் 1923
 78. 1912 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் சங்கீத வித்தியா மகாஜன சங்கம் எனும் அமைப்பை ஏற்படுத்தியவர் யார்? ஆபிரகாம் பண்டிதர்
 79. முதல் தமிழிசை மாநாடு எப்பொழுது நடத்தப்பட்டது? 1943
 80.  இந்திய பெண்கள் சங்கம் யாரால் தொடங்கப்பட்டது? அன்னிபெசன்ட் டோரதி சின்ன ராசா மார்க்கெட் கசின்ஸ் ஆகியோர்களால் சென்னை அடையாறு பகுதியில் 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

Choose the correct answer:

 1. இந்தியாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிகளின் முன்னோடி யார்? ராஜாராம் மோகன்ராய்
 2. 1709 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சகத்தை நிறுவியவர் யார்? சீகன் பால்கு
 3. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தாள்கள் எது? குடியரசு
 4. சமயம் அகற்றப்பட்டு அவ்விடத்தில் எது வைக்கப்பட வேண்டுமென ஈவேரா விரும்பினார்? பகுத்தறிவுவாதம்
 5. 1893ஆம் ஆண்டு ஆதிதிராவிட மகாஜன சபையை நிறுவியவர் யார்? இரட்டைமலை சீனிவாசன்
 6. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் எந்த ஆண்டு உருவாக்கப்பட்டது? 1918 
 7. அரசு அதிகாரிகளை தேர்வு செய்ய நீதிக்கட்சியில் நிறுவப்பட்டது? பணியாளர் தேர்வு வாரியம்
 8.  சென்னை மாகாணத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து முதன் முறையாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்? எம் சி ராஜா
Fill in the blanks:


 1. முதன் முதலாக ஆச்சரிய ஐரோப்பிய மொழி அல்லாத மொழி எது? தமிழ்
 2. புனித ஜார்ஜ் கோட்டை கல்லூரியை உருவாக்கியவர் யார்? F.W எல்லீஸ்
 3. தமிழ் மொழியின் தூய்மை வாதத்தின் தந்தை எனக் கருதப்படுபவர் யார்? மறைமலை அடிகள்
 4. தேர்தல் அரசியலில் பெண்கள் பங்கு இருப்பதை முதலில் அங்கீகரித்த கட்சி எது? நீதிக்கட்சி
 5.  சூரிய நாராயண சாஸ்திரி எனும் பெயர் எவ்வாறு மாற்றம் பெற்றது? பரிதிமாற் கலைஞர்
 6. தமிழ் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் யார்?ஆபிரகாம் பண்டிதர்
 7. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் யார்?டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.