மோட்சம்..!

 

மோட்சம்..!

சுக்கிரனின் காரகங்கள் அலங்காரம், ஆடம்பரம், பெண் சுகம், வாழ்க்கை துணை, நல்ல வருமானம், இப்படி சுக்கிரனின் காரகங்களை முழுதாக அனுபவித்தவர்கள் கடைசியில் தேர்ந்தெடுக்கும் மார்க்கம் துறவு, இதனை குறிக்கவே காலபுருஷ 12ல் சுக்கிரன் உச்சமடைகிறார், இதனை தான் மோட்சம் என்போம், சில நபர்களை இதற்கு உதாரணமாக கூறலாம்,  புத்தர் சரியான உதாரணமாவார், ராஜாவாக இருந்தும் ராஜ்ஜியத்தை துறந்து மற்றவர்களுக்கு வழிகாட்டியானார், வெகு சிலருக்கே இவ்வாறான அமைப்பு சித்திக்கிறது, சிலரை நாம் காணலாம் தன் வேலை/தொழிலில் பல உயர்ந்த நிலையை அடைந்த பின்னர் அந்த நிலையை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிப்பார்கள், சிலர் தடாலடியாக விலகிவிடுவார்கள், பொதுவாக இவ்வாறு சுக்கிரனை முழுதாக அடைந்தவர் மற்றவருக்கு நன்மை செய்ய சித்தமாவார்கள், ஏனெனில் இவர்கள் அத்தனையும் அனுபவித்து வாழ்க்கையின் உண்மை நிலையை உணர்ந்தவர்கள், இதனை வெளியில் தெரியாமல் பார்த்து கொள்வார்கள், இவர்களின் செயல்கள் அனைத்தும் ரகசியமாக இருக்கும், பலரை வாழவைக்கும் இவர்களுக்கு சில நேரங்களில் வெளியில் மோசமான பெயர் அமைவதும் உண்டு, இப்படி ஒருவர் வாழ்வில் மிக உயரிய நிலையில் மற்றவருக்கு உதவிகளை செய்து அதனை விளம்பரப்படுத்தாமல் வாழ்கிறார் என்றால் அவர்களே வாழ்வில் முழுமை அடைந்தவர்கள் ஆவார்கள்..!

"உன்னிடம் இருப்பதை மற்றவருக்கு பகிர்ந்தளிக்க, நீ அதில் தன்னிறைவு பெற வேண்டும்..!"

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.