நட்சத்திர குணாதிசயம்..!

 


நட்சத்திர குணாதிசயம்..!

சோதிடத்தி 27 நட்சத்திரங்கள் இந்த நட்சத்திரங்கள் அத்தனையும் 7 குணாதிசயமாக வகைபடுத்தபட்டுள்ளது, அவைகள் ஸ்திரம், சரம், திக்ஷன, மிருது, கலவை, உக்ர, லகு நட்சத்திரங்கள், பொதுவாக இந்த நட்சத்திரங்களை ஜென்ம நட்சத்திரமாக கொண்டவர்கள் இதன் குணாதிசயத்தை வெளிபடுத்துவார்கள், இதில் இன்னொரு முக்கிய விஷயமும் உள்ளது, இந்த நட்சத்திரங்களின் குணங்களை சாரியாக புரிந்துகொண்டால் இந்த நட்சத்திரங்களில் நின்ற கிரகங்களின் செயல்களும் நட்சத்திரங்களின் குணாதிசயத்தை சார்ந்தே நடைபெறுகிறது என்பதை கணிக்க இயலும், இவ்வாறு கணிக்கும் போது அந்த கிரகம் தன் காரகங்களை எவ்விதத்தில் வெளிபடுத்தும் என்பதை துல்லியமாக கணிக்கலாம், மீண்டும் சந்திப்போம்..!

ஸ்திர நட்சத்திரங்கள்: ரோகிணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி நட்சத்திரங்கள் ஸ்திர தன்மை கொண்டவை, இதன் செயல்பாடுகள் நிறுத்தி நிதானமாக சீராக இருக்கும்..!

சர நட்சத்திரங்கள்: புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம், அவிட்டம், சதயம் நட்சத்திரங்கள் சர தன்மை கொண்டவை, மாற்றங்களை விரும்பும் நட்சத்திரம் ஒரே நிலையில் இல்லாமல் தன்நிலையில் மாற்றங்களை தந்துகொண்டே இருக்கும்..!

திக்ஷண நட்சத்திரங்கள்: திருவாதிரை, ஆயில்யம், கேட்டை, மூல நட்சத்திரங்கள் கூர்மையான குணாதிசயம் கொண்டவை, பொதுவாக தாக்குதல்களில் வெற்றியை கொடுக்கும் நட்சத்திரம் ஆகும், எதிலும் கூர்மையாக சிந்தித்து செயல்படும் நட்சத்திரம்..!

மிருது நட்சத்திரங்கள்: மிருகசிரீஷம், சித்திரை, அனுஷம், ரேவதி நட்சத்திரங்கள் மிருதுவான குணாதிசயம் கொண்டது நட்பு கொள்ள ஏற்ற நட்சத்திரம், எதிலும் மிருதுவாக செயல்படும் தன்மை கொண்டது..!

உக்ர நட்சத்திரங்கள்: பரணி, மகம், பூரம், பூராடம், பூரட்டாதி நட்சத்திரங்கள் உக்கிர குணாதிசயம் கொண்ட நட்சத்திரங்கள், எதிர்ப்புகளை சமாளிக்கும் வல்லமை கொண்ட நட்சத்திரம் ஆகும், எப்போதும் ஏதாவது செயல்பாட்டை செய்து கொண்டே இருக்கும், ஆக்ரோஷமாக செயல்படும் நட்சத்திரங்கள்..!

கலவை நட்சத்திரங்கள்: கார்த்திகை, விசாகம் நட்சத்திரங்கள், கூர்மை தன்மையும், மிருதுவான குணாதிசயமும் கொண்ட கலவை நட்சத்திரம், சாமர்த்திய குணம் கொண்டது..!

லகு நட்சத்திரங்கள்: அஸ்வினி, பூசம், ஹஸ்தம் நட்சத்திரங்கள், லகுவான நட்சத்திரம் வியாபாரம் செய்ய ஏற்ற நட்சத்திரம், இதன் செயல்பாடு மிக லகுவாக இருக்கும்..!

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.