இந்தியாவின் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் மிகப் பெரிது – தி நியுயார்க் டைம்ஸ் ஆய்வில் முடிவு

 .savukkuonline.com : இந்தியாவில் அரசு சார்பில் வெளியிடப்படும் கொரோனா தொற்று, உயிரிழப்பு குறித்த புள்ளிவிவரங்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று நோய் பாதிப்பின் உண்மையான அளவை ஒட்டுமொத்தமாக குறைத்துக் காட்டுகின்றன.

மே 24ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவில் பதிவான உயிரிழப்புகள் என்பது உலகில் எந்த நாட்டிலும் பெருந்தொற்று காலத்தில் இல்லாததாகும். ஆனால், வெளியான புள்ளிவிவரங்கள் குறைத்துதான் காட்டப்பட்டிருக்கிறது

 

இந்தியாவில் உண்மையிலேயே ஒட்டுமொத்தமாக எத்தனைபேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பது குறித்த தெளிவான கணக்கீடு கிடைப்பது கடினம். ஏனென்றால், புள்ளிவிவரங்களை முறையாகப் பாதுகாக்காதது, பரிசோதனை அளவு பரவலாக இல்லாதது முக்கியக் காரணம்.

உயிரிழப்பு குறித்த உண்மையான எண்ணிக்கைக் கணக்கிடுவதற்கு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் குறித்த இரண்டாவது முறை கணக்கீடு, மதிப்பீடு தேவைப்படுகிறது.

ஒரு டஜனுக்கு மேற்பட்ட தொற்றுநோய் தடுப்பு வல்லுநர்களுடன் “தி நியூயார்க் டைம்ஸ்” நாளேடு ஆலோசித்தது. அந்த ஆலோசனையில், இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கையும், உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருக்கும் எனவும், பெரிய அளவிலான ஆன்டிபாடி பரிசோதனை முடிவுகள் மூலம் தெரிய வருகிறது. நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் வகையில்தான் உண்மையான கணக்கீடு இருக்கும்.

குறைந்தபட்ச பேரழிவாக எடுத்துக்கொண்டால்கூட, அரசாங்கம் வெளியிட்ட அதிகாரபூர்வ எண்ணிக்கையைவிட கணக்கிடப்பட்ட தொற்று எண்ணிக்கையும், உயிரிழப்பு  எண்ணிக்கையும் அதிகரிக்கும். உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் லட்சக்கணக்கிலான கொரோனா மரணங்கள் நடந்திருக்கலாம் தெரியவருகிறது.

மே 24-ம் தேதி இந்திய அரசாங்கம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள்படி, இந்தியாவில் அன்றைய தேதியில் மட்டும் ஒட்டுமொத்தமாக கொரோனாவில் 2 கோடியே 69 லட்சத்து 48ஆயிரத்து 800 பேர் தொற்றுக்கு ஆளாகினர், 3 லட்சத்து 7 ஆயிரத்து 231 பேர் மரணமடைந்திருந்தனர்.

இந்த பெருந்தொற்றுக் காலத்தில் அதிகமான அளவு கண்காணிப்பு இருக்கும் நாடுகளில் கூட, தொற்று எண்ணிக்கை என்பது, பெரும்பாலும் உறுதி செய்யப்பட்ட அதிகாரப்பூர்வ எண்ணிக்கையைவிட அதிகமாகவே இருக்கும். ஏனென்றால், மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்படவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை உலக சுகாதார அமைப்பு வெளியி்ட்ட ஓர் அறிக்கையில், கொரோனா முதல் அலையில் உலகளவில் கொரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை உண்மையான மதிப்பீட்டைவிட 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடுகிறோம் எனத் தெரிவித்தது.

ஆதலால், இந்தியாவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்து குறைந்த மதிப்பீடு நடந்திருக்கலாம். அதற்கு தொழில்நுட்ப ரீதியிலான, கலாச்சார, போக்குவரத்து ரீதியிலான காரணங்களைக் கூட கூறலாம்.

ஏனென்றால், பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளிக்க இடமில்லாமல் நிரம்பி வழிந்தன, கொரோனாவில் பாதிக்கப்பட்ட பலர் வீட்டிலேயே உயிரிழந்தனர், அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இதுபோன்ற மரணங்கள் அதிகம் நடந்தன.

இவையெல்லாம் அரசின் அதிகாரபூர்வ கணக்கீட்டிலிருந்து தவிர்க்கப்பட்டன. இறப்புக்கான காரணத்தைக் கூற வேண்டிய ஆய்வகங்களே நிரம்பி வழிந்தன என்று எமோரி பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்வியல் வல்லுநர் காயாகோ ஷிடோ தெரிவித்தார்.

மற்ற ஆய்வாளர்கள் சிலர் கண்டறிந்தவகையில், “ கொரோனா பரிசோதனை நிலையங்கள் குறைவாக இருந்திருக்கலாம், கொரோனாவில் உயிரிழந்த தங்களின் அன்புக்குரியவர்களை கொரோனாவில் உயிரிழந்தார் என்று கூற குடும்ப உறுப்பினர்கள் தயங்கியிருக்கலாம், இந்தியாவில் முக்கியமான ஆவணங்களை பாதுகாக்கும் முறையும் வலுவில்லை என்று உயிரிழப்பு அதிகரிப்புக்கான முறையான ஆதாரங்கள் இல்லாததற்கு காரணமாகக் கூறுகிறார்கள்.

கொரோனாவுக்கு முன்புகூட, 5 மரணங்களில் 4 மரணங்கள்கூட இந்தியாவில் மருத்துவ ரீதியாக எவ்வாறு நடந்தது என்று விசாரி்க்கப்படவில்லை.

இதுவரை இந்தியா கொரோனா காலத்தில் 3 செரோசர்வே ஆய்வை நடத்தியுள்ளது. அதில் உள்ள உண்மையான புள்ளிவிவரங்களைப் பார்த்தால், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, அரசால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ தொற்று எண்ணிக்கையைவிட மோசமாக அதிகரித்தது . இது அந்த நேரத்தில் கேள்வியாக இருந்தது.

 

ஒவ்வொரு ஸீரோ சர்வே குறித்த முடிவுகளை வெளியிட்ட அந்த நேரத்தில், தொற்றுநோய் காலத்தில் இந்தியாவில் இருந்த தொற்று பாதிப்பு  13.5 முதல் 28.5 மடங்கு அதிகமாக இருந்து.

கடைசி ஸீரோ சர்வே முடிந்ததில் இருந்து, அல்லது அதற்குபின்  இந்த குறைமதிப்பீட்டின் தீவிரம் அதிகரித்திருக்கலாம் அல்லது குறைந்திருக்கலாம். ஆனால், இது நிலையானதாக இருந்திருந்தால், இந்திய மக்கள் தொகையில் பாதிப்பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.

எமோரி பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்வியல் வல்லுநர் காயாகோ ஷிடோ கூறுகையில் “செரோசர்வேயில் தொற்றை அதிகப்படுத்தும் காரணிகள் கூட உண்மையான தொற்று எண்ணிக்கையை குறைத்து கணக்கிட்டிருக்கலாம். அதற்கு என்ன காரணமென்றால்,  நோய்த்தொற்று ஏற்பட்ட சில மாதங்களில் ஆன்டிபாடிகளின் செறிவு குறைகிறது, அவற்றைக் கண்டறிவது கடினம்.

உண்மையில், பாதிக்கப்பட்ட அனைவரையும் கணக்கெடுத்து கண்டறிய முடிந்தால், அந்த எண்ணிக்கை உண்மையான தொற்று எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும். ஆகவே இது உண்மையான பாதிப்புகளைவிட குறைத்து மதிப்பிடுவதாகும்” எனத் தெரிவி்்த்தார்

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய்வியல் வல்லுநர் ஜெஃப்ரி ஷமான் கூறுகையில் “தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் வேறுபட்ட மதிப்புகள் விகிதம் மற்றும் பரிசோதிக்கப்பட்ட உண்மையான தொற்றுள்ளவர்கள் எண்ணிக்கை விகிதம் ஆகியவற்றின் விளைவுகளை ஆராய்வதற்கு ஸ்லைடிங் கால்குலேட்டர் பயனுள்ளதாக இருக்கும். இரு அளவீடுகளையும் மதிப்பீடு செய்வது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இறப்புவீதம் கணக்கிடு 

பல தொற்று இறப்பு வீத மதிப்பீடு என்பது, சமீபத்தில் இந்தியாவில் வந்த இரண்டாவது அலைக்கு முன்பே கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால், ஒட்டுமொத்த தொற்று  இறப்பு விகிதம் என்பது சமீபத்திய அலைக்குப்பின் பார்த்தால் அதிகம்  இருக்கும். இந்த விகிதம் வயதுக்கு ஏற்றார்போல் மாறுபடும். குறிப்பாக முதியோரிடம் இதை அளவிடும் போது எண்ணிக்கை அளவு உயரும்.

ஆனால், இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் பெரும்பாலும் இளம்வயதினர் அதிகம், சராசரியாக 29 வயதுள்ளவர்கள்தான். ஆதலால், முதியோர்கள் அதிகமாக இருக்கும் நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் தொற்று இறப்பு விகிதம் குறைவாகவேத் தெரிகிறது.

உள்நாட்டளவில் தொற்று இறப்பு விகிதம் மற்றும் ஸீரோ பிரிவலன்ஸ் எனச் சொல்லப்படும் குறிப்பிட்ட மக்கள் தொகையில் தொற்றின் அளவு ஏராளமான மாற்றங்களைக் கொண்டிருக்கும்.

டார்ட்மவுத் கல்லூரியின் பொருளாதாரப் பிரிவு துணைப் பேராசிரியர் டாக்டர் பால் நோவாசத் கூறுகையில் “ இந்தியாவில் ஸீரொசர்வே புள்ளிவிவரங்கள் 3 இடங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையைப் பொறுத்து பெரிய அளவு மாறுபாடு இருந்தது. லாக்டவுனில் இடம்பெயர்ந்த புலம்பெயர்ந்து திரும்பியவர்களுக்கு இடையே வயது அடிப்படையிலான தொற்று இறப்பு விகிதம் பணக்கார நாடுகளைவிட அதி்கமாக இருக்கிறது.

இதற்கு நேர்மாறாக, தென் மாநிலங்களான கர்நாடகா, தமிழகத்தில் முதல் அலையில் தொற்று இறப்பு விகிதம் பணக்கார நாடுகளைவிட குறைவாக இருக்கிறது.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் தொற்றுபாதிப்பிலும், உயிரிழப்பிலும் சிறிய அளவு மாறுபாடு ஏற்பட்டாலும் அது உயிரிழப்புகளில் ஆயிரக்கணக்கான வேறுபாட்டை காண்பிக்கும்.

மதிப்பீடு என்பது ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்துக்கும், காலத்துக்கும் ஏற்ப மாறுபட்டாலும், ஒரு விஷயம் அனைத்து சந்தேகங்களுக்கும் அப்பாற்பட்டது.

இந்தியாவில் உள்ள கொரோனா பெருந்தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் உண்மையான அதிகாரப்பூர்வ கணக்கீடுகளைவிட மிகப்பெரியதாகும்.

 

நன்றி : தி நியூயார்க் டைம்ஸ்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.