TNPSC GROUP 2 - 50 QUESTIONS AND ANSWER

 

🔹தலைப்பு - டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பாடத்திட்டம் அலகு 8-ல் முதல் பகுதியிலுள்ள, தமிழ் சமுதாய வரலாறு அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்ககாலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு பகுதிகள்.
🔹கேள்விகள்
தயாரிப்பு - Mahesh Raja மற்றும்
அரசு அதிகாரி
🔹தேர்வு நாள் - 16.05.2021
🔹தேர்வு நேரம் - நண்பகல் 12 மணி
முதல் 1.00 மணி வரை
🔹மொத்த கேள்விகள் - 50
🔹மொத்த மதிப்பெண்கள் - 50
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀
1. தமிழகத்தில் முதன்முதலில் மட்பாண்டங்களும் வேளாண்மை செய்வதற்கான சான்றுகளும் எங்கு கிடைத்துள்ளன?
A. பையம்பள்ளி✅
B. கீழடி
C. பொருந்தல்
D. ஆதிச்சநல்லூர்
2. 'இந்தியாவின் முதல் பேரங்காடி' என மூத்த பிளினி எதை குறிப்பிடுகிறார்?
A. தொண்டி
B. கொற்கை
C. முசிறி✅
D. அரிக்கமேடு
3. பொருத்துக:
அ. பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல் - திருக்குறள்
ஆ. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே - கலித்தொகை
இ. பண்புடையார் பட்டுண்டு உலகம் - தொல்காப்பியம்
ஈ. மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி - அகநானூறு
A. 3 4 1 2
B. 1 2 4 3
C. 2 3 1 4✅
D. 4 1 3 2
4. ஐ.நா சபை நுழைவு வாயிலில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் எந்த வரி பதிக்கப்பட்டுள்ளது?
A. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
B. யாதும் ஊரே யாவரும் கேளிர்✅
C. திரைகடலோடியும் திரவியம் தேடு
D. செல்வத்து பயனே ஈதல்
5. கொள்வதூஉம் மிகை கொளாது, கொடுப்பதூஉம் குறை கொடாது' எனும் பட்டினப்பாலை வரி எதன் சிறப்பை உணர்த்துகிறது?
A. செல்வம்
B. கொடை
C. வணிகம்✅
D. விருந்து
6. "வடகலை, தென்கலை, வடுகு, கன்னடம்
இடமுள பாடையர் தோன்றினர் ஆயினும்" என்று கூறியவர்?
A. இளங்கோவடிகள்
B. சீத்தலை சாத்தனார்
C. கம்பர்✅
D. தொல்காப்பியர்
7. பதிணென் கீழ்க்கணக்கு நூல்களில் பின்வருவனவற்றுள் 'அறம் சார்ந்த நூல்களில்' பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
A. இன்னா நாற்பது
B. கார் நாற்பது✅
C. இனியவை நாற்பது
D. ஆசாரக்கோவை
8. சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் பெயர்களுள் பொருந்தாத ஒன்றை தேர்வு செய்க.
A. நாடகக்காப்பியம்
B. முத்தமிழ்க் காப்பியம்
C. சீர்திருத்த காப்பியம்✅
D. தேசியகாப்பியம்
9. தவறான இணையைக் காண்க
A. முத்து மீனாட்சி - அ.மாதவையா
B. கமலாம்பாள் சரித்திரம் - ராஜம் அய்யர்
C. பிரதாப முதலியார் சரித்திரம் - வேதகிரியார்✅
D. பஞ்சும் பசியும் - தொ.மு.சி.ரகுநாதன்
10. சங்ககால மக்கள் முதன்மைக் கடவுளாக யாரை வழிபட்டனர்?
A. சிவன்
B. மாயோன்
C. சேயோன்✅
D. இந்திரன்
11. தமிழ்மொழியானது ஏனைய மொழிகளின் செல்வாக்கிற்கு உட்படாமல் முற்றிலும் சுதந்திரமான மொழியாக உருபெற்று எழுந்துள்ளது என கூறியவர் யார்?
A. ஷேஹல்
B. மார்க்ஸ் முல்லர்
C. ஜார்ஜ் எல் ஹார்ட்✅
D. கால்டுவெல்
12. சங்ககாலத்தில் ஆட்சிப்பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்ததின் அடிப்படையில் சரியான வரிசையைக் தேர்வு செய்க:
A. நாடு - மண்டலம் - கூற்றம் - ஊர்
B. நாடு - கூற்றம் - மண்டலம் - ஊர்
C. மண்டலம் - நாடு - கூற்றம் - ஊர்✅
D. மண்டலம் - கூற்றம் - நாடு -ஊர்
13. கூற்று 1: சங்ககாலத்தில் சமூக வாழ்வில் பெண்களுக்கென கட்டுப்பாடுகள் இருந்தன.
கூற்று 2: சங்க காலத்தில் பெற்றோரின் சொத்துகளில் மகனும் மகளும் சமமான பங்கைப் பெற்றிருந்தனர்
இவற்றுள் சரியான ஒன்றைத் தேர்வு செய்க:
A. கூற்று 1 மட்டும் சரி
B. கூற்று 2 மட்டும் சரி✅
C. இரண்டு கூற்றுகளும் தவறானவை
D. இரண்டு கூற்றுகளும் சரியானவை
14. 1863-இல் சர்.இராபர்ட் ஃபூட் தமிழகத்தில் முதன்முதலாக பழங்கற்காலக் கருவிகளை எங்கு கண்டுபிடித்தார்?
A. அதிரம்பாக்கம்
B. பல்லாவரம்✅
C. குடியம் குகை
D. பாரிகுளம்
15. பள்ளிசந்தை திடல் எதனுடன் தொடர்புடையது?
A. பையம்பள்ளி
B. பொருந்தல்
C. கீழடி✅
D. கொடுமணல்
16. பாண்டிய மன்னன் முதுகுடுமி பெருவழுதி பிராமணர்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார் எனக் கூறும் செப்பேடு எது?
A. வேள்விக்குடி செப்பேடு✅
B. தளவாய்புரச் செப்பேடு
C. சிவகாசி செப்பேடு
D. மாங்குளம் செப்பேடு
17. "தான் பெற்ற இன்பும் பெறுக இவ்வையகம்" எனும் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
A. புறநானூறு
B. குறுந்தொகை
C. திருமந்திரம்✅
D. பெரியபுராணம்
18. மதுரகவியாழ்வார் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்க
1. இவர் மதுரையில் பிறந்தமையால் 'மதுரகவியாழ்வார்' என அழைக்கப்படுகிறார்
2. இவர் திருமால் மீது கொண்டிருந்த பக்தியின் காரணமாக 'கண்ணிநுண் சிறுதாம்பு' என்ற பாசுரத்தை பாடினார்.
இவற்றுள்
A. 1 மட்டும் சரி
B. 2 மட்டும் சரி
C. இரண்டும் சரியானவை
D.இரண்டும் தவறானவை✅
19. காரைக்கால் அம்மையார் பற்றிய கூற்றுகளில் தவறான ஒன்றைத் தேர்ந்தெடுக்க:
A. இவருடைய இயற்பெயர் 'புனிதவதி'
B. இவர் தமிழுக்கு 'அந்தாதி' என்ற இலக்கிய முறையை அறிமுகம் செய்தார்.
C. இவர் 'அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்தத் திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை' ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
D. இவர் எழுதிய நூல்கள் ஒன்பதாம் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன.✅
20. தவறான இணையைத் தேர்ந்தெடுக்க:
A. புதிய தரிசனங்கள் - எம்.வி.வெங்கட்ராம்✅
B. ஒரு காவிரியைப் போல - லட்சுமி
C. இலையுதிர்காலம் - நீல பத்மநாபன்
D. இலக்கியச் சுவடுகள் - ஆ.மாதவன்
21. 'மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்' என கூறும் செப்பேடு எது?
A. வேள்விக்குடி செப்பேடு
B. மாங்குளம் செப்பேடு
C. சின்னமனூர்ச் செப்பேடு✅
D. தளவாய்புரச் செப்பேடு
22. 'அணிமயிற் பீலி சூட்டி பெயர்ப் பொறித்
தினிநட் டனரே கல்லும்' என நடுகல் பற்றி குறிப்பிடும் நூல் எது?
A. அகநானூறு
B. புறநானூறு✅
C. தொல்காப்பியம்
D. குறுந்தொகை
23. தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்தவற்றை அவற்றுக்கான இடங்களுடன் பொருத்துக
1. தாழிகளுடன் நெல்லும் - கொடுமணல்
2. இரும்பு உருக்கு ஆலைகள் - கொடுமணல், குட்டூர்
3. நூல் நுற்கும் கதிர்கள் - அரிக்கமேடு, குடிக்காடு
4. கண்ணாடிமணி செய்யும் தொழிலகங்கள் - ஆதிச்சநல்லூர், பொருந்தல்
A. 4 2 1 3✅
B. 4 3 2 1
C. 1 2 3 4
D. 2 1 3 4
24. சாகித்ய அகடமி விருது பெற்ற காவல் கோட்டம் என்ற நூலின் ஆசிரியர் யார்
A.சு வெங்கடேசன்✅
B.எஸ் ராமகிருஷ்ணன்
C.சு சமுத்திரம்
D.ராஜம் கிருஷ்ணன்
25.சித்திரப்பாவை என்ற நூலுக்காக அகிலன் ஞானபீட விருது பெற்ற வருடம்
A.1975✅
B.1985
C.1976
D.1986
26.முற்றுப் பெறாமல் முதல் பாதியிலே முடிந்துவிட்ட பாரதியின் புதினம் எது
A.தராசு
B.சந்திரிகையின் கதை✅
C.ஞானரதம்
D.திண்டி சாஸ்திரி
27.அசோகர் கல்வெட்டு சத்தியபுத்திர என்று குறிப்பிடப்பட்ட மன்னன்
A.பாரி
B.ஆய்
C.இருங்கோ
D.அதியமான்✅
28. அ.நெடுஞ்செழியன் சேரர் சோழர் உட்பட்ட 11 வேளிர் குல வேந்தர்களை தலையாலங்கானத்துச் செருவென்ற போரில் வென்றதாக குறிப்பிடப்படுகிறது
ஆ. கொற்கை தலைவன் பரதவர்களின் தலைவன் என்று புகழப்படுகிறார்
A. இரண்டும் சரி
B. அ மட்டும் சரி
C. ஆ மட்டும் சரி✅
D. இரண்டும் தவறு
29.பாண்டியர்கள் குறித்த கூற்றுகளில் சரியானது
1.வைகை நதி வங்காள விரிகுடாவில் கலக்கும் இடத்தில் கொற்க்கை அமைந்துள்ள கொற்கை அவர்களின் முக்கிய துறைமுகம்
2.அவர்களுடைய நாணயத்தில் ஒருபுறம் மீன் ஒருபுறம் யானை பிடிக்கப்பட்டுள்ளது
3.மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு நெடுஞ்செழியனைப் பற்றி குறிப்பிடுகிறது
A.1,2,3 சரி
B.2,3 சரி✅
C.1,3 சரி
D.அனைத்தும் தவறு
30.கூட்டு உழைப்பால் பெற்ற உணவினை எவ்வித பாகுபாடுமின்றி சமமாக பகிர்ந்து கொண்டனர் என்பதை எந்த நூல் குறிப்பிடுகிறது
A.பெரும்பாணாற்றுப்படை✅
B.சிறுபாணாற்றுப்படை
C.பட்டினப்பாலை
D.புறநானூறு
31.அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் இக்குறளில் எடுத்தாளப்படும் பொருள்
A.அறனறிந்து திறனறிந்து நடந்து கொள்ளல் வேண்டும்
B.திறன் உள்ளவர்களின் நட்பினை பெறவேண்டும்
C. மூத்தோரான அறிவுடையவரின் நட்பை ஏற்க வேண்டும்✅
D.பகை இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும்
32.பால் வளம் சுரப்பதையும் எருமைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் கூறும் நூல்
A.அகநானூறு
B.பதிற்றுப்பத்த
C. ஐங்குறுநூறு✅
D.புறநானூறு
33.இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதெனத் தமியர் உண்டலும் இலரே
A.தொல்காப்பியம்
B.அகநானூறு
C.புறநானூறு✅
D. திருக்குறள்
34. அ. முதுவாய்ப் பெண்டிர்-நெடுநல்வாடை
ஆ. பேரில் பெண்டு-மதுரைக்காஞ்சி
இ. தொன்முது பெண்டிர்-புறநானூறு
ஈ. செம்முக செவிலியர்-அகநானூறு
அ ஆ இ ஈ
A. 3 4 2 1
B. 4 3 2 1✅
C. 1 2 3 4
D. 2 1 4 3
35. “நரகன் உயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி இழக்கும் பண்பீங் கில்லை“
A.மணிமேகலை சிறை காட்சி
B.சிலப்பதிகாரம் கற்பனை காட்சி✅
C.வளையாபதி அறம் காட்சி
D.சீவக சிந்தாமணி மனக்காட்சி
36.போற்றா ஒழுக்கம் புரிந்தீர் என கண்ணகி யாரை குறிப்பிடுகிறார்
A. சேரன் செங்குட்டுவன்
B.கோவலன்✅
C. மாதவி கோவலன்
D.நெடுஞ்செழியன்
37. பகைவர் நாட்டின் மீது படை எடுத்து செல்வது எத்திணை ஆகும் எந்த பூவை சூடுவார்
A.கரந்தைப் பூ மாலை
B.காஞ்சி பூமாலை
C.வஞ்சி பூ மாலை✅
D.நொச்சி பூ மாலை
38. 1.முல்லைத் திணையின் ஒழுக்கம் ஆற்றியிருத்தல்
2. நெய்தல் திணையின் ஒழுக்கம் இரங்கல்
3. பாலைத் திணையின் ஒழுக்கம் பிரிவு
A. 1,2,3 தவறு
B. 1,2,3 சரி✅
C. 2,3 சரி
D. 3 சரி 1,2 தவறு
39. கூற்று :கபிலரும் பரம்பு மலை தலைவன் பாரி நட்பாய் இருந்தனர்
காரணம் :பாரிமகளிர் இருவரையும் பாரி இறந்தபின் கம்பர் மணமுடித்து வைத்தார்
A.கூற்று சரி✅
B.கூற்றும் காரணமும் சரி
C.கூற்றும் காரணமும் தவறு
D.காரணம் சரி
40. இதயத்தை தொட்டு விடும் இசை "காதுகளுக்குப் போர்த்து விடுகின்ற கவுரவ மேலாடை "என்று கூறியவர்
A. மு மேத்தா✅
B.அப்துல் ரகுமான்
C.இன்குலாப்
D.பாவேந்தர்
41.நீதிதேவன் மயக்கம் என்ற நூலின் ஆசிரியர்
A.மு வரதராசனார்
B.கிருஷ்ணமூர்த்தி
C.அண்ணா✅
D.கருணாநிதி
42.“ திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் பொங்கு கடல் இவற்றோடும் பிறந்த தமிழ் ”
A.தேசிய கவி
B.புரட்சிக்கவி✅
C.பகுத்தறிவு கவிராயர்
D.அரசவை கவி
43. ஒரு சொல் இரு குறல்
அறவினை யாதுஎனின் ------ கோறல்
பிறவினை எல்லாம் தரும் என்றும்
நல்ஆறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் ------
குழும் நெறி
A.கேளாமை
B.பிரியாமை
C.கொல்லாமை✅
D.நிலையாமை
44.நாணயங்கள்
1.சங்க காலத்தில் செப்பு வடிவ நாணயங்கள் வழக்கத்தில் இருந்தன
2.பல்லவர்கால நாணயத்தின் மீன் நந்தி கப்பல் இடம்பெற்றிருந்தது
3.ராஜேந்திரன் வெளியிட்ட நாணயங்களில் மீனும் புலியும் இடம்பெற்றிருந்தது
4.முதலாம் வரகுணன் இன் தங்க நாணயம் அவருடைய பெயருடன் கிரந்த எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது
A.அனைத்தும் சரி
B.1,2 சரி
C. 3,4 சரி
D. அனைத்தும் தவறு✅
45.உலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை துறைமுகம்
A.ஹரப்பா
B.மொகஞ்சதாரோ
C. காலிபங்கன்
D. லோத்தல்✅
46.சங்கமுக தமிழ் என்று குறிப்பிட்டவர் யார்
A.மங்கையர்கரசியார்
B.திருமங்கையாழ்வார்✅
C.பொய்கை ஆழ்வார்
D.மாணிக்கவாசகர்
47.நம்மாழ்வார் ஒரு நாட்டிற்கோ, ஒரு
சமயத்திற்கோ, ஓர் இனத்திற்கோ
மட்டும் உரியவர் அல்லர். அவர் எல்லா
நாட்டிற்கும், எல்லா சமயத்தார்க்கும்,
எல்லா இனத்தா ர்க்கும் உரியவர்;
எல்லாரும் ‘நம்மாழ்வார்‘ என்று போற்றும்
ஒரு பெரியாரை அளித்த தமிழ்நாட்டை
மனத்தால் நினைக்கிறேன்; வாயால்
வாழ்த்துகிறேன்; கையால் தொழுகிறேன்“
A. மூ.வ
B. திரு வி க✅
C. அண்ணா
D. கலைஞர்
48.‘வெல்லுமா
மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்‘ என்று
திருத்தொண்டத்தொகை யாரை கூறுகிறது.
A.கண்ணப்ப நாயனார்
B.அதிபத்த நாயனார்
C.மெய்ப்பொருள் நாயனார்✅
D.காரைக்கால் அம்மையார்
49.களவழி நாற்பது
1.பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த ஒரே நூல்
2.பொய்கையார் பாடியது
3.பள்ளு என்ற சிற்றிலக்கிய வகை தோன்றக் காரணமானது
4.அட்டக்களத்து என்று முடியும் சிறப்பு கொண்டது
A.1,2,3 சரி
B.2,3,4 சரி
C.1,2,4 சரி✅
D.அனைத்தும் சரி
50.பாண்டவர் பூமி என்ற புதுக்கவிதையை எழுதியவர்
A.பாரதியார்
B.கண்ணதாசன்
C.வாலி✅
D.சுரதா

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.