PERIYAR HISTORY PART 11

 1970 ‘உண்மை’ எனும் பகுத்தறிஷி ஹிதழைத் துவக்கினார்.

முதலமைச்சர் கலைஞர் வேண்டுகோளுக்கு ஹிணங்கி கோஜீல்

கருவறை நுழைஷிப் போராட்டத்தை ஒத்ணிவைத்தார். சட்டநாதன்

தலைமைழீலான நிற்பட்டோர் நலக் குழுஜீனர் பெளீயாரைச்

சந்ணித்து அளீய ஆலோசனைகளைப் பெற்றனர். உலகநாடுகள்அவையைச் சேர்ந்த கல்வி , அறிவியல் பண்பாட்டுக் கழக21

மன்றத்தினரால் 27.06.1970 இல் (UNESCO) பெரியார் அவர்களுக்கு

‘விருது’ வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

 விருது வாசகம் வருமாறு: “பெரியார்-புது உலகின் தொலை

நோக்காளர்; தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த

இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற

பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின்

கடும் எதிரி ”.


தமிழ்நாடெங்கும், சிந்தனையாளர் கழகங்கள், பகுத்தறிவாளர்

கழகங்களைத் துவக்கினார். பம்பாயில் சுற்றுப்பயணம்

மேற்கொண்டு பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். டாக்டர்

எஸ்.சந்திரசேகர் பெரியாரைக் கண்டு குடும்பநலத் திட்டம் பற்றி

உரையாடினார்.

1971 “கலைஞர் ஆட்சியில்” அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்

எனும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

பெரியாரின் தங்கை ‘குடிஅரசு’பதிப்பாசிரியரான கண்ணம்மாள்

25.02.1971 இல் மறைந்தார்.

சேலத்தில் பெரியார் கூட்டிய மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில்

இராமன் உருவப் பொம்மை செருப்பால் அடிக்கப்பட்டது.

பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் பெருவெற்றி

பெற்று கலைஞர், மீண்டும் முதலமைச்சர் ஆனார். பெரியார்

மகிழ்ந்தார். “மாடர்ன் ரேஷனலிஸ்ட்” என்னும் ஆங்கில

இதழைத் துவக்கினார்.

1972 ஈழத் தந்தை செல்வநாயகம் பெரியார் திடலுக்கு வந்து பெரியாரை

22.02.1972 இல் சந்தித்து உரையாடினார். டில்லி அரசின் தாமிர

பத்திர விருதை இந்திரா காந்தி வழங்க, அதனை கலைஞர் மூலம்

பெற்றார். தமிழ்நாடு அர்ச்சகர் சட்டம் செல்லாது என்ற

உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் கண்டு பெரியார் வெகுண்டெழுந்தார்.

1973 பெரியார் பிறந்தநாளில் எம்.ஜி.ஆர் பெரியார் திடலுக்கு வந்து

பெரியாரைச் சந்தித்து நேரில் வாழ்த்தியதுடன் ரூ 5000/-

பணமுடிப்பும் அளித்தார். மதுரையில் கருஞ்சட்டைப்படை

மாநாடு நடத்தினார். கடும் குளிரில் தமிழகமெங்கும் பிரச்சாரத்

தொடர்பயணம் மேற்கொண்டார். சென்னையில் நடத்திய இழிவு

ஒழிப்பு மாநாட்டில் கோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சியை

24.01.1974 இல் நடத்தப்போவதாக அறிவித்தார்.

சென்னை தியாகராயர் நகர் சிந்தனையாளர் மன்றத்தின் சார்பில்

19.12.1973 இல் நடைபெற்ற கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க

இறுதிப் பேருரையை நிகழ்த்தினார்.

உடல் நலம் குன்றி சென்னை பொது மருத்துவமனையிலும் ,

பின்னர் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.

கவலைக்கிடமான நிலையை அடைந்து 24.12.1973 அன்று காலை

7.40 மணிக்கு இயற்கை எய்தினார்.

 பெரியார் மறைவுக்கு மாநில அரசே துயரத்தைக் கடைப்பிடிக்கும்

என்று முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அறிவித்தார்.

அரசுப்பதிவு இதழிலும் (ழுயணநவவந) பெரியார் மறைவுச் செய்தியை

தமிழக அரசு வெளியிட்டு தனிச் சிறப்புச் செய்தது. பெரியார்

இயற்கை எய்திய நாள் அரசு விடுமுறை நாளாக

அறிவிக்கப்பட்டது.

 இலட்சக்கணக்கானோர் தாங்கொணாத்துயரத்துடன் இறுதி

ஊர்வலத்தில் கலந்து கொள்ள அந்தத் துயரக் கடலின் ஊடே

பல்லாயிரக்கணக்கான கருஞ்சட்டைத் தொண்டர்கள் பெரியார்

வாழ்க! பெரியார் வாழ்க! என்று எழுப்பிய முழக்கம் சோகக்

கடலின் உணர்ச்சி வெள்ளம். வீரவணக்கமாக மாற்றப்பட்டது.

அரசு மரியாதையுடன் 25.12.1973 மாலை 5.05 மணிக்கு சென்னை

பெரியார் திடலில் அன்னாரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

பெரியார் மறைவுக்குப்பின் தலைவராகப் பொறுப்பேற்ற அன்னை

ஈ.வெ.ரா மணியம்மையார் அவர்களும், பொதுச் செயலாளரும்

‘‘விடுதலை’’ ஆசிரியருமான கி.வீரமணி அவர்களும் கொள்கை

விளக்கை ஏந்தி வழிகாட்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.