திருமணம் தடைபடும் ஜாதக காரர்களுக்கு

 

என்ன தான் முயற்சி செய்தாலும் சிலருக்கு திருமணம் என்பது கைகூடி வராது. அப்படியே கைகூடி வந்தாலும் ஏதாவது இடையூறு ஏற்பட்டு தடைபட்டுவிடும். அவர்கள் கோவில் கோவிலாக சென்று பூஜைகள், பரிகாரங்கள் செய்தாலும் ஒன்றும் பலன் அளிக்காது. திருமண யோகம் தடைபட ஜாதகத்தில் பிரச்சனைகள் இருக்கலாம். குரு நீசம் அடைந்திருக்கலாம். தோஷங்கள் இருக்கலாம். முன் ஜென்ம சாபம் இருக்கலாம். இப்படி சில காரணங்களால் திருமணம் தொடர்ந்து தடைபடும். திருமண குறை நீங்க ஆண்கள் இந்த மந்திரத்தை தினமும் கூறி வந்தால் போதும். விரைவில் நல்ல தகவல் வந்து சேரும். அந்த சக்தி வாய்ந்த மந்திரம் பற்றி இப்பதிவில் காணலாம்.

திருமணம் தடைபடும் ஜாதக காரர்களுக்கு இருக்கும் கவலையை விட அவர்களது பெற்றோருக்கு மன வேதனை அதிகமாக இருக்கும். தங்கள் பிள்ளைக்கு வயதாகிக் கொண்டே போகிறதே!! இன்னும் திருமண யோகம் கூடி வரவில்லையே!! என்று வேதனைபடும் பெற்றோர்கள், தங்கள் மகனுக்கு எப்படியாவது நல்ல நேரம் வந்துவிடாதா? என்று பார்த்து கொண்டிருப்பார்கள். அவர்களின் மனவலி சொல்லில் அடங்காதவை.

அவர்களின் குறை நீங்க இறைவனை சரண் அடைவதை தவிர வேறு வழி இல்லை. நீங்கள் எப்போதும் செய்யும் வழிபாடுகள், பூஜைகள், பரிகாரங்கள் இவற்றை தொடர்ந்து செய்து வாருங்கள். அதனை நிறுத்த தேவையில்லை. எந்த பரிகாரமும் முழு பக்தியுடன், நம்பிக்கையுடன் செய்தால் தான் பலன் கிடைக்கும்.

உங்கள் செல்ல மகனின் திருமணம் எந்த தடையும் இன்றி நிறைவேற அவரை இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்க செய்யுங்கள். முழு நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை உச்சரித்து வந்தால் விரைவில் உங்கள் துயர் நீங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த மந்திரம் காலை, மாலை என இரு வேளையிலும் திருமணம் நடக்க வேண்டிய ஆண் மகன் பக்தியுடன் உச்சரிக்க வேண்டும். எந்த அளவிற்கு பக்தி சிரத்தையுடன் அவர்கள் உச்சரித்து வருகிறார்களோ அந்த ஆளவிற்கு பலனும் விரைவில் கிடைக்கும்.

மந்திரம்: விதேஹி தேவி கல்யாணம்

விதேஹி விபுலாம் ச்ரியம்

ரூபம் தேஹி ஜயம் தேஹி

யசோ தேஹி த்விஷா ஜஹி!!

பத்னீம் மனோரமாம் தேஹி

மானோவ்ருத்தனு ஸாரீனீம் தாரினீம் துர்கஸம்ஸார ஸாகரஸய குலோத்பவாம்!! விதேஹி தேவி கல்யாணம் விதேஹி விபுலாம் ச்ரியம் ரூபம் தேஹி ஜயம் தேஹி யசோதேஹி த்விஷா ஜஹி!!

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.