உங்கள் ஜனன ஜாதகத்தில் முடக்கு ராசியை கண்டறிவது எப்படி?

 

🌹உங்கள் ஜனன ஜாதகத்தில் முடக்கு ராசியை கண்டறிவது எப்படி?
அனைவருக்கும் அனைத்தும் கிடைத்து விடாது. ஒன்று எளிதாக கிடைத்தால் மற்றொன்று கிடைக்க தாமதம் அல்லது கிடைக்காமலே போகும்.
இதையே முடக்கம் என்கிறோம்
✴ முடக்கு நட்சத்திரம் எப்படி அறியலாம்?
உங்கள் ஜனன ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திரத்தில் இருந்து மூலம் நட்சத்திரம் வரை எண்ணிக் கொள்ள வேண்டும்
எத்தனை நட்சத்திரம் உள்ளதோ அந்த எண்ணிக்கையை பூராடம் நட்சத்திரத்தில் இருந்து எண்ணினால் கிடைக்கும் நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம் ஆகும்.
முடக்கு நட்சத்திரம் நின்ற ராசி முடக்கு ராசி ஆகும்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🔯உதாரணம்:
விருச்சிக ராசியில்
கேட்டை நட்சத்திரத்தில் ஒருவருக்கு சூரியன் இருந்தால்
கேட்டை நட்சத்திரத்திலிருந்து மூலம் நட்சத்திரம் வரை எண்ணினால்
வரும் விடை 2
பூராட நட்சத்திரத்திலிருந்து 2 நட்சத்திரம் வரை எண்ணினால்
உத்திராம் வரும் .
ஆகவே கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு உத்திராடம் முடக்கு நட்சத்திரம் ஆகும்
🔴முடக்கு ராசி எது?
(உத்திராடம் 1ம் பாதம் தனுசுவிலும்
2,3,4 பாதங்கள் மகரத்திலும் வருவதால்)
சூரியன் 1ஆம் பாதத்தில் இருந்தால் தனுசு ராசி முடக்கு ராசி.
முடக்கு ராசி தனுசு
முடக்கு ராசி அதிபதி குரு
முடக்கு நட்சத்திரம் உத்திராடம்
முடக்கு நட்சத்திராதிபதி சூரியன்
சூரியன் 2,3,4பாதங்களில் ஏதேனும்
ஒரு பாதங்களில் நின்றால்
முடக்கு ராசி மகரம்
முடக்கு ராசி அதிபதி சனி
முடக்கு நட்சத்திரம் உத்திராடம்
முடக்கு நட்சத்திர அதிபதி சூரியன்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
✴முடக்கு ராசி எப்படி பாதிக்கும்?
உதாரணத்திற்கு கன்னி லக்கனத்தில் பிறந்தோருக்கு
தனுசு முடக்கு ராசியாக இருந்தால்
🌹தனுசுவில் நின்ற கிரகம் சரிவர இயங்காது.
🌹ஜனன ஜாதகத்தில் உத்திராடம் நட்சத்திரத்தில் நின்ற கிரகம் சரிவர இயங்காது.
🌹தனுசு ராசி அதிபதியான குரு நின்ற பாவகம் நல்ல முறையில் இயங்காது.
கன்னி லக்னத்திற்கு முடக்கு ராசி அதிபதி குரு நான்கிற்கும், ஏழிற்கும் அதிபதியாக இருப்பதால்
வீடு,மனை,வாகனம்,தாயார்,தனது ஆரோக்கியம் போன்ற காரகத்துவங்களில் தடங்கல் வரும்.
மனைவி,நண்பர்கள்,பங்குதாரர்கள் போன்றவரிடம் இணக்கமான சூழ்நிலை இருக்காது.
✴ எப்போது முடக்கம் வரும்?
முடக்கு நட்சத்திரத்தில் நின்று ஒரு கிரகம் தசாவோ,புத்தியோ நடைபெறும் போதும்,
முடக்கு ராசியில் ஏதேனும் ஒரு கிரகம் நின்று நடைபெறும் கிரக தசா அல்லது புத்திலும்
முடக்கு ராசி அதிபதி தசா அல்லது புத்தி நடக்கும்
அத்தகைய கால கட்டங்களில் இந்த முடக்கம் உருவாகும்.
முடக்கு ராசியே லக்கனமாக அமைந்து லக்னத்தில் ராகு அல்லது கேது நின்று
அதன் திசை நடைபெற்றால் தசா காலம் முழுவதும் முடங்கி மிகுந்த துன்பத்துக்கு உள்ளாவார்கள்.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பரிகாரம்
🌹முடக்கு நட்சத்திரத்திற்கு உரிய கோவிலுக்கு சென்று வழிபடுவது.
🌹அன்னதானம் செய்வது.
🌹நட்சத்திற்கு உரிய மரம் நட்டு பாராமரிப்பது.
🌹முடக்கு ராசி அதிபதியின் கோவிலுக்கு சென்று வழிபடுவது.
🌹ராசி அதிபதிக்கு உரிய பொருட்களை அன்னதானம் செய்வது.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
அடுத்த பதிவு யோகி, அவயோகி பற்றிய விபரங்கள் பதிவிடுகிறேன்.

Raajalu 93847 60464
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.