கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

 

கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

 

புதுடெல்லி:

கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

 

இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தினமும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தினசரி கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் இரண்டாயிரத்தை எட்டியுள்ளது. மேலும் சில மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

இந்தநிலையில் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்த ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் 'விராஃபின்' என்ற மருந்துக்கு, இந்தியாவின் மருந்துகள் தலைமைக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம் இன்று அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதியளித்துள்ளது. கொரோனாவால் ஓரளவு பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சையில் இந்த மருந்தைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கும் விவகாரம் - புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு கொரோனா பரவலை கட்டுப்படுத்த மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்காக சித்த மருத்துவ மையம் திறக்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.