நிலவை துல்லியமாக புகைப்படம் எடுத்து… புனே மாணவன் சாதனை… குவியும் பாராட்டு…!!

நிலவை துல்லியமாக புகைப்படம் எடுத்துபுனே மாணவன் சாதனைகுவியும் பாராட்டு…!!

புனேவை சேர்ந்த சிறுவன் ஒருவன் 50 ஆயிரம் படங்களை எடுத்து நிலவின் துல்லியமான படத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.


புனேவை சேர்ந்த 16 வயது சிறுவன் பிராதமேஷ் ஜாஜூ. இவர் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார், வானவியல் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் கொண்டவர். கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் கிடைத்த நேரத்தை பூமியின் துணைக்கோளான நிலவை துல்லியமாக படம் எடுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளார். 5 மணி நேரம் டெலஸ்கோப், கேமராவை பயன்படுத்தி பல்வேறு கோணங்களில் நிலவை துல்லியமாகப் படம் எடுத்துள்ளார். தெளிவான முப்பரிமான நிலவின் படத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவதுநான் நிலவை சுமார் 38 வீடியோக்கள் எடுத்தேன். ஒவ்வொரு வீடியோவும் ஒரு நிமிடம் நீளம் உள்ளது. இதில் ஒரு வீடியோவில் இருந்து எனக்கு 2000 படங்கள் கிடைத்தன. 38 வீதமான கோணங்களில் எடுக்கப்பட்ட 38 வீடியோக்களில் இருந்து 50,000 புகைப்படங்களை தேர்வு செய்து அதில் தான் முழு நிலவின் தெளிவான படத்தை உருவாக்கினேன்என்று அவர் கூறினார்.


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.