ராகு-கேது தொடர் எனும் தொடர் கட்டுரைகளில் இது மூன்றாவது பாகம்.

 

ராகு-கேது தொடர் எனும் தொடர் கட்டுரைகளில் இது மூன்றாவது பாகம்.

ஏனைய கிரஹங்களைக் காட்டிலும் இந்த சர்ப்ப கிரஹங்களுக்கு வாசிப்பவர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதைக் கவனிக்க முடிகின்றது.

பலர் தங்கள் தனிப்பட்ட ஜாதகங்களில் ராகு கேது இருப்பிடங்களைத் தெரிவித்து இன்பாக்சில் கேள்விகள் எழுப்பியிருக்கின்றார்கள்.

சிலர் ஜாதக ஆலோசனைக்கும் கேட்டு அதனைப் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்

இந்த தொடரில் ராகு & கேது இரண்டு கிரஹங்களைக் குறித்தும் தான் பார்க்கப் போகின்றோம்

ராகு குறித்து தொடர்ந்து எழுதுகின்றேன்

ராகுவைப் போல கொடுப்பவனில்லை எனும் பிரபல சொற்றொடரைச் சொல்லி ராகு என்ன கொடுப்பார் என சொல்லியிருந்தேன்

Intellect & emotional எனும் இரண்டு தன்மைகளில் ராகு தனியே planet role கொண்டது மட்டுமில்லை, அதனைத் தரும் ஏனைய கிரஹங்களின் நிலைகளிலும் தன் ஆளுமை ஆட்சியினைச் செலுத்த வல்லது

அதனால் ஒருவர் தன் வாழ்வை பூரணமாக அதாவது, எதை எடுத்துக் கொண்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க ராகுவின் துணை அவசியம் வேண்டும்

எடுத்துக் கொண்ட செயல்களின் மீது ஒருவருக்கும் இருக்கும் intensive care and focus ராகு ஜாதகருக்கு எப்படி அமைந்திருக்கின்றார் என்பதைப் பொறுத்ததே.

ஜாதகத்தில் லக்னத்திலிருந்து மூன்றாம் இடமாகிய தைரிய ஸ்தானம்/ முயற்சி ஸ்தானம் எவ்வளவு பலவீனமாக இருந்தாலும், அல்லது அந்த பாவகத்துக்கான கிரஹம் வலிமை குன்றியிருந்தாலும் அந்த ஜாதகரின் ராகு பலமாக அமைந்துவிட்டால் , அல்லது கோச்சாரத்தில் ( during transit ) பலமாக அமைந்துவிட்டால், விஷயங்கள் அவருக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் நடக்கும்

அதிலும் சில combination களில் இப்படி எக்ஸ்பிரஸ் வேகத்தில் யோகங்கள் வருமானம், பணம் புகழ் வரும் போது அவர் தடுமாறாமல் இருக்கும் அமைப்பினையும் ராகுவே சீரமைத்துத் தரும்படி இருக்கும்.

அப்படி சில ஆச்சரியமான காம்பினேஷன்களை அனுபவத்தில் கண்டு இருக்கிறேன்

அது போல ஐந்து கிரஹங்கள் மிக அதிகமான பலத்துடன் இருக்க ஜாதகருக்கு ஏன் எதிர்பார்த்த நன்மை அமையவில்லை என்று ஆராயும் போது ஒரு மும்முரமான  tug of war பந்தயம் போல ராகு ஒரே கிரஹமாய் ஐந்து கிரஹங்களுக்கு ஈடு கொடுத்து தடை போட்டிருப்பார்

அதே சமயம் ராகுவின் அனுகூலம் அமையும் காலம் வரும் போது, ஒரேடியாக lift செய்து சிம்மாசனத்தில் அமர வைப்பார்

இந்த process ல் உயர்வை அனுபவித்தவர்கள் பலரின் ஜாதகத்தில் பார்த்த அனுபவத்தில் சொல்ல வேண்டுமெனில்

knowledge and wisdom என்ற காம்பினேஷன். அதாவது அது வரை கற்றுக் கொண்ட வித்தை எங்கே செயல்படும் எங்கே வித்தையை இறக்க வேண்டும் எனும் அனுபவத்தை உண்டாக்குகின்ற தன்மை

ஒரு செயலின் மீது இச்சையினை உருவாக்கி அதனை வலுப்பெறச் செய்து வைராக்யம் எனும் will power ஆக மாற்றும் அருள்

வித்தியாசனமான முயற்சிகளை சிந்திக்கும் creative impulse , presence of mind  எனும் ரசவாதத்தினை சித்திக்க வைக்கும் செயல்

இதனை செய்து முடிக்க வேண்டிய பேசும் திறன், அடுத்தவருக்கு புரிய வைக்கும் திறன் எனும் presentation skill

இத்தனையும் ஒருங்கிணைந்த ஒரு positive energy resource ஜாதகருக்கு உருவாக்கித் தருகின்றவர் ராகு

இவ்வளவும் ஆக்கபூர்வமாகச் செய்யும் ராகுவைத் தான் ராகுவைப் போல கொடுப்பாரில்லை என சொல்லுகின்றோம்

கேது குறித்து வரும் பதிவுகளில் பார்ப்போம்Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.