நட்சத்திரம் -அன்பு உறவுகள்
நட்சத்திரம் -அன்பு உறவுகள்

 

ஜோதிடம் சார்ந்த புதிய தொடர், வாரம் இரண்டு நாட்கள் எழுதவிருக்கிறேன்

ஒவ்வொரு பதிவிலும் ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடர்பான பதிவு.. அஸ்வினி தொடங்கி ரேவதி வரை

இன்று அஸ்வினி

நடுப்பகல் வெளிச்சத்துக்கும் நள்ளிரவின் இருளுக்கும் தொடர்பு கொண்ட சிந்தனை இவர்களுடையது.

பளிச்சென்று இருப்பார்கள். சுறுசுறுப்பானவர்கள், வசீகரமானவர்கள். திறந்த மனது. எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு கொண்ட திறந்த மனது அதே சமயம், ஆழ் மனதில் ஏதோ மறைத்து வைத்துக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது என்று இவர்களைக் குறித்து ஓர் எண்ணம் அடுத்தவருக்கு வர வழைப்பார்கள்

புதிதாகத் தன்னிடம் பழக வருகின்றவர்களுடன், ரொம்ப fresh energy கொண்டு தொடங்குவார்கள், அவர்களைக் குறித்து தெரிந்து கொள்வதில் ஒரு துறு துறு தன்மையும் உணர்ச்சி வசப்படுதலும் இருக்கும் .. அந்த ஆழமான மனதில் ஒரு கட்டுப்பாடு சிக்னல்நிதானம் நிதானம்என்று ஒலித்துக் கொண்டே இருக்கும்

நிறைய ஆசைகள் வைத்திருப்பார்கள். அதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் தெரிந்திருக்கும்

இன்னமும் கொஞ்சம் இவர்களைக் குறித்துப் பார்க்கலாம்

உறவுகள் /நட்புகள் மீது நல்ல ஈடுபாடும், possessiveness அதிகம் கொண்டிருப்பார்கள். ஆனால் இவர் இப்படி நடக்க வேண்டும் என்பதில் அதிக எதிர்பார்ப்பும் அதாவது perfection அதிகம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். அதனால் பல முறை ஏமாற்றம் . இந்த எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் ஒரு மாதிர் நிரந்தர வளையம் போல இவர்கள் வாழ்க்கைச் சக்கரம் இருக்கும்

தற்காப்பு நினைப்பு எப்போதும் மேலோங்கி இருக்கும். இதோ ஓர் ஆபத்து தனக்கு வரப் போகின்றது என்பது போல இருப்பார்கள்

புதிய முயற்சிகள் இவர்களுக்கு இனிப்பானவை. துணையினை அன்பினைத் தேடுவதில் கொஞ்சம் வேகம் இருக்கும். ஆனால் அதே சமயம் தன் சுய அடையாளத்தை விட்டு விடக் கூடாது என்று நினைத்துக் கொண்டே மெல்ல மெல்ல அதை இழப்பார்கள். உறவுகளைத் தேடுவதும், சின்ன சின்ன காரணங்களுக்காக சண்டையிட்டு அவர்களிடம் இருந்து விலகுவதும். பின்னர் புதிய உறவுகளை நட்புகளைட் தேடுவதும் இயல்பாகக் கொண்டவர்கள்

இப்படி உறவுகளின் மீது தீர்மானம் இல்லாத தன்மை காரணமாக நிறைய மனச் சுமைகளை வலுவில் சுமப்பார்கள்

இவர்கள் புதிதாக நட்பு / உறவு ஏற்படுத்திக் கொண்டவர்கள் இவர்களின் குற்ற உணர்ச்சிகளைத் தூண்டி சீண்டி வேடிக்கை பார்க்கும் போது என்ன செய்வது என்று தெரியாது இருப்பார்கள்..

ஆனாலும் தன்னிச்சையாக இயங்குவதும் சுதந்திரமாக இருப்பதும் இவர்களின் அடிப்படை, இவர்களுடன் பழகுகின்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டால் இவர்களுடம் சரியாகப் பயணிக்க முடியும்

கேதுவின் நட்சத்திரம் அஸ்வினி என்பதால், ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை , ஸ்வாதி, சதயம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் கூடுதல் ஈர்ப்பு / சர்ச்சை இருக்கும்


Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.