கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் இலவசம்

 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் இலவசமாக வழங்கப்படுவதை அறிந்த கொரோனா நோயாளிகள் உள்ளிட்டோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

உலகையே அச்சுறுத்தி வரக்கூடிய கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் வேகமாக பரவி வருகிறது. பல நாடுகளில் தடுப்பூசி தயார் செய்யப்பட்டு அதனை போடுவதன் மூலமாகவும் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிவதன் மூலம் பல நாடுகள் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளது. ஆனால் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடு என்பதால் இங்கு கொரோனா தடுப்பூசி கிடைக்காமலும் படுக்கை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் இல்லாததால் பொதுமக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முக கவசம் அணியாமல் பொது இடங்களில் ஊரடங்கு தளர்வு நேரத்தில் அதிக அளவில் சுற்றி வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.

 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கும், ஆக்சிஜன் அளவு ரத்தத்தில் குறைந்தவர்களுக்கு ஆறு வகையான ஆயுர்வேத லேகியத்தை தயார் செய்து வழங்குவதாக நெல்லூரில் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனை அறிந்த பொது மக்கள் நெல்லூர் மட்டுமில்லாமல் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் தமிழகத்திலிருந்தும் கிருஷ்ணா பட்டினம் அடுத்த முத்துக்கூறு கிராமத்திற்கு வந்த படி உள்ளனர். மதியம் 12 மணிக்கு மேல் ஆந்திராவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயுர்வேத லேகியத்தை பெறுவதற்காக அதிகாலை 3 மணி முதலே பொதுமக்கள் முத்துக்கூறு கிராமத்தில் வந்தபடி உள்ளனர்.

 

மருந்துகளை பெறுவதற்காக ஒருவருக்கொருவர் முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நின்று லேகியத்தை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆயுர்வேத லேகியத்தை இலவசமாக வழங்கி வரக்கூடிய ஆனந்த் கூறுகையில் தனது ஆன்மீக குருவான குருவய்யா சுவாமி தனது கனவில் வந்து இந்த லேகியத்தை வழங்கும்படி கூறியதாக தெரிவித்தார். வேப்பிலை, மா இலை, வால்மிளகு, திப்பிலி, மஞ்சள், ஜாதிக்காய் உள்ளிட்ட பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு இந்த லேகியம் தயார் தயார் செய்யப்படுகிறது. இந்த இலக்கியத்துடன், கொரோனா வருவதற்கு முன்பு நுரையீரலை சுத்தம் செய்வதற்கும், வைரல் காய்ச்சல் போன்றவற்றை சரி செய்வதற்கும், இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தவர்களுக்கும், வாந்தி, மயக்கம் , வயிற்றுப்போக்கு போன்ற கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆறு விதமான லேகியம் வழங்கப்படுகிறது

 

இதுகுறித்து தகவலறிந்த நெல்லூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின் படி போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த கிராமத்தை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆயுர்வேத மருந்து வழங்கப்படுவதாக தெரிந்து நாங்கள் இங்கு ஆய்வு செய்தோம். பொதுமக்கள் அளித்த தகவலின்படி இவர்கள் வழங்கக்கூடிய லேகியம் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த லேகியத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு ஆய்வு செய்து அரசின் ஒப்புதல் குறித்தும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

 

அதுவரை இந்த லேகியத்தை விற்க தடை விதிக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவை மீறி உள்ளூர் தொகுதி எம்எல்ஏ காக்கானி கோவர்தன் ரெட்டி தலைமையில் மருந்து வழங்கும் பணி தொடங்கியது. இதனை வாங்க நெல்லூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்கள் உட்பட 40 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.