பொது வாழ்க்கை:

 பொது வாழ்க்கை:

பெரியாரின் தந்தை 1911இல் மறைந்தார். தந்தையின் பணிகளை

ஊரில் செய்த பெரியார் பல தேவஸ்தானங்களுக்கு தலைவராக

இருந்தார். 1919இல் ஈரோட்டில் நகரமன்றத் தலைவராகத்

தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஈரோட்டில் பிளேக் என்னும்

உயிர்க்கொல்லி நோயால் பலர் மாண்டனர். பிணங்களைத் தொட

எல்லோரும் அஞ்சிய வேலையில் பெரியார் அநேக பிணங்களை தன்

தோல் மீது தூக்கிச் சென்று அடக்கம் செய்தார்.

ஈரோட்டில் நகரமன்ற தலைவராக இருந்தபோது 3 உறுப்பினர்கள்

கொண்ட வருமான வரி அலுவலகக் குழு உறுப்பினர் போன்ற 29

பொது நிறுவனங்களில் பொறுப்பேற்று சமுதாயப் பணி செய்தார்.

பெரியாருக்கு “ராவ் பகதூர்” பட்டமும் பரிந்துரை செய்யப்பட்டது.

பெரியார் ஈரோட்டில் நகரமன்ற தலைவராக இருந்தபோது

சேலத்தில் ராஜகோபாலாச்சாரி நகரமன்ற தலைவராக இருந்தார்.

இருவரும் உயிர் நண்பர்களாக இருந்தனர். ஈரோட்டில் இருக்கும்

சிறப்பான சுகாதார நிலையைக் கண்டு ஈரோட்டில் உள்ள சுகாதார

அதிகாரிகளை சேலத்திற்கு அனுப்புமாறு கேட்டார். இருவரும்

நண்பர்கள் எனினும் அவரவர் கொள்கையில் சிறிதளவும்

விட்டுக்கொடுக்கவில்லை.

ஈரோட்டிற்கு வருகை புரிந்த சிங்கம்பட்டி ஜமீன்தாருக்கு சாதாரண

கடை சாப்பாட்டை கொடுத்து தனது சிக்கனத்தைக் காண்பித்தார்.

ஈரோட்டில் பெரியாரின் வீட்டிற்கு மரியாதைக்குரிய மகாத்மா காந்தி,

ஜெயப்பிரகாஷ் நாராயண், இராஜகோபாலாச்சாரியார், திருவிதாங்கூர்

மன்னர் போன்றவர்கள் வந்து தங்கி பெரியாரோடு அளவளாவி

சென்றுள்ளார்கள்.

 அவரது சகோதரியின் மகள் சிறுவயதிலேயே விதவையானது

அவரது மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் காரணமாக

1909லேயே அவருக்கு விதவை திருமணம் நடட்தி வைத்தார்.

காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது நாடெங்கும் கடும் கலவரம்

நடந்தபோது பெரியாரின் போதனையால் தமிழகம் மட்டும் அமைதித்

தீவாக திகழ்ந்தது. இந்தியாவிற்கு ‘காந்தி தேசம்’ என பெயரிட

வேண்டும் என பெரியார் கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.