விடைபெறுகிறது ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

 
விடைபெறுகிறதுஇன்டர்நெட் எக்ஸ்புளோரர்மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு

மைக்ரோசாப்ட்நிறுவனத்தின்இன்டர்நெட் எக்ஸ்புளோரர்அடுத்த ஆண்டு ஜூன் 15ம் தேதியுடன் விடைபெறுகிறது.இது குறித்து, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11’ பிரவுசருக்கு பதிலாகமைக்ரோசாப்ட் எட்ஜ்பயன் படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.கடந்த 1995ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் ஆனது இன்டர்நெட் எக்ஸ்புளோரர். இப்போது கால் நூற்றாண்டு கடந்துவிட்டது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு அது தன் ஓட்டத்தை நிறுத்திக் கொள்ள இருக்கிறது.

விண்டோஸ் 95’ அறிமுகம் ஆகும்போது, அதனுடன் சேர்த்து இன்டர்நெட் எக்ஸ்புளோரரும் அறிமுகம் ஆனது. அப்போதிருந்த இன்னொரு தேடுபொறியான, நெட்ஸ்கேப் நேவி கேட்டருடன் போட்டியிட்டு, அதனை வீழ்த்தி 2000மாவது ஆண்டில், தனியொரு தேடுபொறியாக சிகரம் தொட்டது.

கடந்த, 2000 – 2005 வரையிலான காலத்தில், கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் இந்த தேடு பொறியை பயன்படுத்தி வந்தனர்.ஆனால், அடுத்து வந்த ஆண்டுகளில் வீழ்ச்சி காணத் துவங்கியது. பின் 2010ம் ஆண்டில், கிட்டத்தட்ட 50 சதவீதம் அளவுக்கும் மேலாக தன்னுடைய சந்தை பங்களிப்பை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்தது. தற்போது இன்னும் வீழ்ச்சி கண்டு 5 சதவீதம் அளவுக்கு தரைதட்டி நிற்கிறது.

இதன் இடத்தை, கூகுள் நிறுவனத்தின்குரோம்பிடித்து, அது தற்போது 69 சதவீதம் சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது.இணைய தள குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை எதிர்கொள்ளும் வகையிலான திறனுடன்மைக்ரோசாப்ட் எட்ஜ்அறிமுகம் ஆனதால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் விடைபெற வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

மேலும், நவீன கால இணையதளங்களுக்கு ஏற்றதாக, ‘எட்ஜ்இருக்கிறது.மைக்ரோசாப்ட் எட்ஜுக்கு வாடிக்கையாளர்கள் மாறிக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட், எட்ஜ் தேடுபொறியை மிக எளிமையானதாகவும் மாற்ற இருப்பதாக தெரிகிறது.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.