காசி பயணம் கற்ற பாடங்களும்:

 காசி பயணம் கற்ற பாடங்களும்:

உயர் ஜாதிக்காரர்களின் தில்லுமுல்லுகளை வெளிக் கொணர்ந்த

காரணத்தினாலும் ஆச்சாரங்களுக்கு எதிராக நடந்து கொண்டதாலும்

பெரியாரின் தந்தை அவர்மீது கோபம் கொண்டு செருப்பால் அடித்தார்.

கோபம் கொண்ட பெரியார் தனது 25 வயதில் வீட்டை விட்டு

வெளியேறி காசிக்குச் சென்றார். செல்வதற்கு முன்பாக தான்

அணிந்திருந்த தங்க நகைகளை தந்தையின் நண்பரிடம்

கொடுத்துவிட்டு சென்றார். அவரோடு இரண்டு பார்ப்பனர்களும்

தொடர் வண்டியில் காசிக்குச் சென்றனர்.


காசியைப் பற்றி

பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த பெரியாருக்கு அங்கு கண்ட

காட்சிகள் அதிர்ச்சியாக இருந்தன. அங்கு சத்திரங்களில்

பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவளித்தார்கள். அதனால் அவரோடு

வந்த பார்ப்பனர்கள் இருவரும் அவரைப் பிரிந்து சென்றனர். காசியில்

ஒழுங்கீனமும் விபசாரமும் மலிந்து கிடந்ததைக் கண்டார். ஒருவேளை

உணவிற்காக எச்சிலைக்கு ஏங்கி நிற்கும் நிலை ஏற்பட்டது. வெறுப்புற்ற

பெரியார் மீண்டும் தாய் தந்தையரிடம் வந்தார். கொடுத்து வைத்திருந்த

நகைகளையும் மீண்டும் கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்தார்.

மகன் திரும்பியதில் பெருமகிழ்ச்சி அடைந்த அவரின் தந்தை

தன்னுடைய வியாபார பொறுப்புகள் அனைத்தையும் மகனிடம்

ஒப்படைட்தார். காசியில் இருந்த காலத்தில் சாப்பாட்டுக்கு என்ன

செய்தாய் எனக் கேட்ட தந்தையிடம் “நீங்கள் செய்த தானங்களை

அங்கே வசூல் செய்தேன் என நகைச்சுவையாக சொல்லி விட்டார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.