நித்ய யோகம்

 

ஜாதகம் கணித்துப் பலன் சொல்ல வேண்டும் எனக் கேட்பவர்களிடம் பெயர் , பிறந்த தேதி , பிறந்த நேரம், பிறந்த ஊர் சொல்லுங்கள் போதும் என சொன்னாலும் மறக்காமல் அவர்கள் பிறந்த நட்சத்திரம் சொல்லுவார்கள்

It is by default என்று சொல்லலாம்

சிலர் பிறந்த கிழமையும் எழுதுவார்கள்

சிலர் மட்டுமே லக்னம் சொல்லுவார்கள்

பலன் கணித்து பேசத் தொடங்கும் போது அவர்களின் பிறந்த நட்சத்திரம், லக்னம், திதி , கரணம் , யோகம் சொல்லுவது வழக்கம்

வாரம்

திதி

கரணம்

நட்சத்திரம்

யோகம்

இந்த ஐந்தும் தான் பஞ்ச ( ஐந்து ) அங்கம், பஞ்சாங்கம்

வாரம் என்பது கிழமை

இதில் பலரும் யோகம் என்பதை ஜாதகரிடம் சொல்வதில்லை

கிரஹங்களின் அமைப்புகளைக் கொண்டு கிடைக்கும் யோகங்கள் வேறு . இது நித்ய யோகம் என்று சொல்லுவோம்

பிறந்த குறிப்புகளைப் பொதுவாக இப்படி எழுதுவதைக் கவனித்திருக்கலாம்

தஷிணாயன காலத்தில் வியாழன் சிம்ம ராசியிலும், சனி மேஷ ராசியிலும் நிற்க தமிழ் வருடம்    ஆடி மாதம் 10 ம் தேதி வியாழக் கிழமை சூரிய உதயத்துக்குப் பின் 1 நாழிகை 42 விநாடி சென்ற பொழுது பூசம் நட்சத்திரத்தில் ஒன்றாம் பாதமும் க்ருஷ்ண பஷம் அமாவாசை திதியில் நாகவ கரணமும் வஜர நித்ய யோகமும் கூடிய தினம் கடக ராசியில் சிம்ம நவாம்சத்தில் சந்திரன் நிற்க கடக லக்கினத்தில் மத்திய த்ரேக்கானம் கொண்டு ஆண் குழந்தை ஜனனம்

இதில் காணப்படும் நித்ய யோகம் என்பது தான் இந்த பதிவின் பேசு பொருள்

எளிமையாக விளக்க முயற்சிக்கிறேன்

திதி என்பது நாம் எல்லோரும் அடிக்கடி பயன்படுத்தும் சொல் அதாவது அமாவாசை, பௌர்ணமி, ஏகாதசி, அஷ்டமி , நவமி.. இப்படி

திதி என்பது சந்திரனுக்கும் சூரியனுக்கும் இருக்கும்  தூரத்தை குறிக்கும். அதாவது அமாவாசையின் போது சந்திரனும் சூரியனும் 0 டிகிரி இடைவெளியில் இருக்கும்

ஒவ்வொரு நாளும் நிலவும் சூரியனும் ஒருவருக்கு ஒருவர் 12 டிகிரி விலக திதிகள் வளர்பிறையில்

பிரதமை ,துவிதியை, த்ரிதியை , சதுர்த்தி, பஞ்சமி , ஷஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி ,ஏகாதசி, துவாதசி, திரயோதசி சதுர்த்தசி என பதினான்கு நாட்கள் முடிந்து பதினைந்தாம் நாள் பௌர்ணமி

பதினைந்தாம் நாள் 180 டிகிரி வித்தியாசத்தில் சூரியனும் சந்திரனும் இருக்கும் அதாவது நாள் ஒன்றுக்கு 12 டிகிரி வீதம், 15 நாட்களுக்கு 180 டிகிரி., 

அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் இருக்க பௌர்ணமி அன்று சூரியனின் முழு பார்வையும் சந்திரனின் மீது இருக்கும் படி சூரியனிலிருந்து சந்திரன் ஏழாவது ராசியில் இருக்கும்

பௌர்ணமியில் இருந்து அமாவாசை எனும் தேய்பிறை காலத்திலும் அதே பதினான்கு திதிகளின் பெயர் கொண்டே அழைக்கின்றோம்

கரணம் என்பது திதியில் பாதி அதாவது  ஆறு டிகிரி.

15 திதிகளுக்கு என 30 கரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் 11 கரணங்கள் மட்டுமே நடைமுறை

குமாரஸ்வாமியம் எனும் ஜோதிஷ நூலில் கரணத்தைக் கொண்டு பலன் சொல்லும் முறை விளக்கப்பட்டுள்ளது

பவம், பாலவம், கௌலவம், தைதுலம், கரசை எனும் ஐந்து கரணங்களும் விவசாயத்துக்கானவை என்கிறது அந்த நூல்

ஏனைய ஆறு கரணங்களான நாகவம், சதுஷ்பாதம் , சகுனி, பத்திரை, கௌலவம், ,கிமிஸ்துக்கினம் என்பவை தீய கரணங்கள் என்கிறது அந்த நூல்

ஜாதக அலங்காரம் எனும் ஜோதிஷ நூல் ஒவ்வொரு கரணத்துக்கும் ஒரு பறவை / விலங்கினைக் குறியீடாகக் கொண்டு பலன் சொல்லியிருக்கிறது

நித்ய யோகங்களும் அப்படியே  சூரியனுக்கும் சந்திரனுக்கும் இருக்கும் இடைவெளி தான். ஆனால் சூரியனின் Longitude ( தீர்க்க ரேகை) சந்திரனின்  Longitude ( தீர்க்க ரேகை) கொண்டு கணக்கிடப்படும் முறை

ராசி மண்டலத்தில் 360 டிகிரியினை 27 ஆல் வகுக்க வருவது 13 டிகிரி 20 நிமிடங்கள்

சூரியனின்  Longitude + சந்திரனின் Longitude என கூட்டி வரும் தொகையினை இந்த 13 டிகிரி 20 நிமிடங்களால் வகுத்தால் வரும் 27 விடைகளைத்தான் நித்ய யோகங்களாக சூரிய சித்தாந்தம் எனும் ஜோதிட முறை அனுசரிக்கிறது

அவற்றின் பெயர்களை மட்டும் இப்போது தெரிந்து கொள்வோம்

விஷ்கும்ப யோகம்

ப்ரீதி யோகம்

ஆயுஷ்மான் யோகம்

சௌபாக்கிய யோகம்

சோபன யோகம்

அதிகண்ட யோகம்

சுகர்ம யோகம்

த்ருதி யோகம்

சூல யோகம்

கண்ட யோகம்

விருத்தி யோகம்

துருவ யோகம்

வியாகத யோகம்

ஹர்ஷன யோகம்

வஜ்ர யோகம்

சித்தி யோகம்

வியதி பாத யோகம்

வரியான் யோகம்

பரிக யோகம்

சிவ யோகம்

சித்த யோகம்

சாத்திய யோகம்

சுப யோகம்

சுக்ல யோகம்

பிரம்ம யோகம்

இந்திர யோகம்

வைத்திருதி யோகம்

நான் பிறந்த நேரத்து வஜ்ர யோகம் என்பது சூரியனின்  Longitude + சந்திரனின் Longitude என கூட்டி வரும் தொகையினை இந்த 13 டிகிரி 20 நிமிடங்களால் வகுத்தால் வரும் டிகிரியானது 186 டிகிரி 40 விநாடிக்கும் 200 டிகிரிக்கும்  இடையே வருகிறது

அது வஜ்ர யோகப் பிரிவு

இந்த யோகங்களில் சுப யோகங்கள் , அசுப யோகங்கள் என பிரிக்கப்பட்டுள்ளன . பழமையான ஜோதிஷ நூல்களில் எவை சுப யோகங்கள் எவை அசுப யோகங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளதில் நூலுக்கு நூல் வேறுபாடுகளும் உள்ளன

இந்த நித்ய யோகத்தினைக் கொண்டு சுருக்கமாகப் பலன் சொல்லும் முறையும் உண்டு

உங்கள் ஜாதகத்தில் இப்படி நித்ய யோகம் எழுதப்பட்டுள்ளதா என நீங்கள் நேரம் கிடைக்கும் போது எடுத்துப் பார்க்கலாம்Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.