பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?

 


கடவுள் ஒருவனே , என்கிறது பிற மதங்கள். ஆனால், இந்து மதத்தில் மட்டும் எதற்கு இத்தனை கடவுள்கள் , என்கிற கேள்வி நம் எல்லோர் மனத்திலும் நிகழும். மும் மூர்த்திகள் என்று கருதப்படுபவர்கள் கூட , ஒரு யோக நிலையில் இருப்பது போல நாம் எத்தனை படங்களில் பார்த்து இருக்கிறோம். அவர் யாரை எண்ணி தவம் செய்கிறார். மும்மூர்த்திகளுடன் . சதாசிவம், ருத்ரன், என்று - ஐந்து மூர்த்திகள் இருக்கின்றனராம்.

உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய அந்த கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும் , யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே. மீதி நாம் வணங்கும் அனைவரும், தேவதைகள் , தெய்வங்கள் - அவதாரங்கள் , ஒரு சில காரண , காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள். சித்தர்களுக்கு மேல் இருக்கும் உயர்ந்த நிலை , இந்த தெய்வங்கள்.

 

 முருகனும், விநாயகரும் கூட - சித்தர்கள் போன்று வாழ்க்கை நடத்தி, பின் சிவனின் மைந்தனானவர்கள் என்கின்றனர். பலப்பல யுகங்கள் கடந்து , நாமும் இறைநிலை அடைய விருக்கிறோம். அதை இன்றிலிருந்தே தொடங்குவது , நமக்கு இன்னும் நல்லது.

 

 எப்படி இறைவனுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றனவோ, அதே போல மனிதர்களுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 

 

ஒரு பெரிய தொழிற்சாலை இருப்பதாக எடுத்துக்கொள்வோம். நாமெல்லாம் தொழிலாளர்கள். நம்மை சூப்பர்வைஸ்  செய்ய - நவ கிரகங்கள். நவ கிரகங்கள் - பக்காவாக நம்மை கண்காணித்து , நம்மை வேலை வாங்குகின்றன. பஞ்ச பூதங்களை - ரா மெட்டீரியலாக கொண்டு , பஞ்ச பூத கலவையாலான அந்த உடலைக் கொண்டு இந்த பிரபஞ்ச தொழிற்சாலை இயங்குகிறது.

 

 

இந்த சூபர்வைசர்களுக்கு  மேலே மேலாளர்கள். அவர்களுக்கும் மேலே - பொது மேலாளர்கள் . அவர்களையும் இயக்குவது இயக்குனர்கள். அந்த இயக்குனர்களுக்கும் மேலே - சேர்மன் என்கிற முதலாளி.

 

 

 செய்யும் வேலை , திறமை , அவர்கள் செய்து முடிக்கும் திறன் , என்று ஒவ்வொருவரின் உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உழைக்க வேண்டும். அதாவது , வாழ வேண்டும் - வாழ்ந்து அவரவர் கடமையை செய்ய வேண்டும். இப்படியே , ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த நிலை தீர்மானிக்கப் படுகிறது. ஒரு செக்சனிலிருந்து  , மற்றொரு  பிரிவுக்கு அவர் மாற்றப்படுவர்.  நல்ல திறமையுடன், நல்லவராக இருந்தவருக்கு - அடுத்த பிரிவு , கொஞ்சம் மேன்மையானது

 

இந்த அப்ரைசல் தான் - மரணம்  , அடுத்த பிறவி. நீங்கள் திரும்ப உழைப்பதற்கு வசதியாக , திரும்ப இளமை கிடைக்கிறது. மோசமான வேலை செய்தவர்களுக்கு - கடினமான செக்க்ஷனும் கிடைக்கும்.

நீங்களே ஒண்டியா, தனித்தனியே வேலை செய்ய முடியாததால் - உங்களுடன் இணைந்து செயலாற்ற உங்கள் குடும்பம் , நண்பர்கள் , சமுதாயம் என்று ஒரு குழுவே இருக்கிறது.

 

குடும்பத்தில் யாரோ ஒருவர் , ஓவராக ஆட்டம் போட்டாலும், திடு திப் பென்று ( அகால மரணம்) டிபார்ட்மென்ட் மாற்றமும் நிகழும். இதனால் , அவரும் பாதிக்கப் படுகிறார். அந்த குடும்பமும் வேலைப் பளுவால் முழி பிதுங்கும்.

 

இவை அத்தனையும் சமாளித்து , நரை மூப்பெய்தி - என்னை கூட்டிக்கோப்பா என்று  , நீங்கள் எழுப்பும் ஒரு மன ஓலம் , உங்களுக்கு அடுத்த கதவை திறக்க வைக்கும்.

 

 

 நீங்கள் கதவு திறந்து , அடுத்த அறைக்கு வந்ததும், அதே சூப்பர்வைசர்கள். அவர்களுக்கு தெரியும், நம்மோட அருகதை. இதில், பாரபட்சம் பார்க்காது - நமக்கு கிடைக்க வேண்டிய கூலியை , அவர்கள் மேலிடத்திலிருந்து நமக்கு கிடைக்க செய்கின்றனர்.

 

 

ஒரு ப்ரோமோஷன் கொடுக்கும் முன், உங்கள் சகல திறமையும் பரிசோதிப்பது போல - உங்களுக்கு பலப்பல கஷ்டங்கள், சோதனைகள் வைக்கப்படுகின்றன. இதிலும் தாக்குப் பிடித்து , உங்கள் அணியிலுள்ள சக தொழிலாளர்களையும் அரவணைத்து , உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க வேண்டும்.

 

உங்கள் அணியிலும், சமூகத்திலும் , ஒருவர் மனம் கூட கோணாது , அவர்களுக்கும் ஒத்தாசை செய்து , ஒரு குழுவாக கூடி - உங்கள் கடமையை செய்து முடிக்கவேண்டும். அவர்களை பகைத்துக் கொண்டால், சமயத்தில் சொதப்பிவிடுவார்களே.

 

 

 உங்களை நீங்கள் , உங்கள் ஆன்ம ஒளியை உணர்ந்து கொள்ளுதல் தான் - முதல் படி. உங்கள் பலம் என்ன வென்று அதன் பிறகுதானே உணர முடியும்?  ஹனுமனை போல நீங்களும் கடலை தாண்ட முடியும். மலையையும் தூக்க முடியும்.

 

 

 உலகம் ஒரு நாடக மேடைதான். அந்த இறைவன் இயக்குகிறான். திறமையாக , நடித்தால் - நீங்களும் ஒரு நாள் ஹீரோ வைக்கலாம். இல்லையெனில், சாதாரண துணை நடிகர் தான். ஒரு நாடகம் முடிந்ததும் , அடுத்த நாடகம் ஆரம்பிக்கும். அப்போது ஹீரோவும், இரண்டாம் நிலைக்கு தள்ளப்படலாம், தனது பொறுப்பை உணர்ந்து ஜொலிக்காவிடில்.

 

  ..நமது பிறப்பின் நோக்கம் என்ன, நாம் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் என்பது மிக முக்கியம்.

 

 

இப்போது நாம் எங்கு இருக்கிறோம் ? நமக்கு ஏன் இத்தனை தெய்வங்கள் என்று புரிகிறதா?  எப்படி சூரியனிலிருந்து - தெறித்து வந்த , உஷ்ணத் துளிதான் பூமி என்று விஞ்ஞானம் நிரூபித்ததோ, அதைப் போல ஏராளமான சூரியன்களும் இருப்பது உண்மையோ, அந்த பிரபஞ்சத்திற்கும் மூலப் பொருள் ஒன்று இருக்கும். அந்த மூலத்திலிருந்து வெளியான , துகள்களின் , அணுக்களில் , அணுக்களில் உள்ள அணுதான் , நாம் அனைவரும்.

 

 

என்னில் உள்ள அந்த ஜீவ ஒளி தான் , உங்களிலும் உள்ளது. நம் அனைத்து உயிர்களிலும் உள்ளது. இயற்கையிலும் உள்ளது.

 

 

 எனவே , ஜாதி மத . இன துவேஷத்தை மறப்போம். சக மனிதர்களை நேசிப்போம். இயற்கையை ஆராதிப்போம். நம் வாழ்வாதாரத்தை வணங்குவோம். குழந்தைகளையும், திறமை இல்லாதவர்களையும், வழி நடத்துவோம். நாம் அனைவரும் கடவுளாவோம்.

 

 அடி மனத்தில் பரவும் எண்ணம், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறையாது. முதலில் நம் மனம் முழுவதும் நல் எண்ணங்களால் நிறையட்டும்.

 

பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம். பிற உயிர்களை கொன்று புசிக்க வேண்டாம். நடந்தவை மறப்போம். இனியும் மனதறிந்து எந்த பாவமும் செய்யாமல் , நிம்மதியாக வாழ்வோம்.

 

 

தோல்விகளை கண்டு துவளாத மனமும், வெற்றிகளைக் கண்டு மமதை கொள்ளாத மனப் பக்குவமும், கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனப்    பக்குவமும், வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் !

 

 

கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்...    மனிதம் வளர்ப்போம் !

 

 

 

காரியம் நடக்க

விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்

செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்

நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி

வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்

ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்

மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்

கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி

திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை

மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி

புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி

தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி

புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி

விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி

உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி

வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்

சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்

பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்

பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்

அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி

நோய் தீர

முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி

கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்

காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்

ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு

மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை

அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்

நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்

பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி

மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்

வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்

பித்தம்- முருகன்

வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்

எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்

ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்

குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்

அம்மை நோய்கள்- மாரியம்மன்

தலைவலி, ஜீரம்- பிள்ளையார்

புற்று நோய்- சிவபெருமான்

ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.