முக்கிய நடப்பு நிகழ்வுகள் !!

 

💥 கிருஷ்ணகிரியில் உள்ள கும்பகோணம் மெட்டல் மார்ட் கடை சார்பில் உருவாக்கப்பட்ட பஞ்சலோக சிவன் சிலை 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" மற்றும் 'ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
💥 கேரள மாநிலம் கண்ணூரில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. இதன் மூலம் 4 சர்வதேச விமான நிலையங்கள் கொண்ட ஒரே மாநிலம் என்ற பெருமையை கேரளம் அடைந்துள்ளது.
💥 ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்தியா-ரஷ்யா விமான கூட்டு பயிற்சி தொடங்குகிறது.
💥 பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 6-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான், குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.
💥 தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இணைந்து நடத்திய விருது வழங்கும் விழாவில் தொல்லியல் ஆய்வாளர் செந்தீ நடராசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பேராசிரியர் ராம.சுந்தரத்திற்கு தமிழியல் ஆளுமைக்கான ம.பொ.சி. விருது உள்பட வழங்கப்பட்டது.
💥 முக அடையாளம் மூலம் மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் நவீன தொழில்நுட்ப முறை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அதிநவீன வருகை பதிவு திட்டம் Smart Attendance Scheme என்று பெயரிடப்பட்டுள்ளது.
💥 சர்வதேச ஒலிம்பிக் குழுவானது (International Olympic Committee - IOC) 'ஜியித் ராத் அல்-ஹீசைன்" தலைமையில் மனித உரிமைகளுக்கான ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
💥 நீர்வள ஆதாரங்கள், நிதி மேம்பாடு மற்றும் கங்கை மறுசீரமைப்பு அமைச்சர் நிதின் கட்கரி புது டெல்லியில் இந்தியா நீர்வாழ் உச்சி மாநாடு 2018-ஐ தொடங்கி வைத்தார்.
💥 பொருளாதார நுண்ணறிவு பிரிவு மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பரில்லா மையத்தால் வெளியிடப்பட்ட 2018-க்கான உணவுக்கான குறியீட்டில் (Food Sustainability Intex) இந்தியாவானது 67 நாடுகளில் 33வது இடத்தைப் பிடித்துள்ளது. பிரான்ஸ் நாடானது முதலிடத்தில் உள்ளது.
💥 குறைந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் 'யாசிர் ஷா" படைத்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.