குடும்ப வாழ்க்கையும் தம் வரலாறும் - தோற்றமும் இளமையும்:

 குடும்ப வாழ்க்கையும் தம் வரலாறும்

தோற்றமும் இளமையும்:தந்தை பெரியார் அவர்கள் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்

17Ýஆம் தேதி ஈரோட்டில் வெங்கட்ட நாயக்கர், சின்னத்தாய் அம்மாள்

ஆகியோர்க்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பெரியாரின்

பெற்றோர்கள் தொடக்கத்தில் வறுமையில் வாழ்ந்ததாலும் கல்தச்சராக

வேலை பார்த்ததாலும் கடின உழைப்பாலும் துணைவியாரின் விடா

முயற்சியாலும் ஈரோட்டில் நாயக்கர் என்றாலேயே வெங்கட்ட நாயக்கர்

என தெரியும் அளவிற்கு செல்வந்தராக, சிறந்த வணிகராக, தான

தர்மங்கள் செய்பவராக வாழ்ந்தார். வெங்கட்ட நாயக்கருக்கு இரண்டு

மகன்கள், இரண்டு மகள்கள். பெரியாருக்கு தாய் தந்தையர் வைத்த

பெயர் ராமசாமி. இவர் சிறுவயது முதலே துடுக்காகவும், குறும்புகள்

நிறைந்தவராகவும், எதற்கும் ஏன் எதற்கு என்று கேள்வி

கேட்பவராகவும் வளர்ந்தார். சிறுவயதில் குழந்தை இல்லாத

அவருடைய சிறிய பாட்டிக்கு தத்து கொடுக்கப்பட்டு அங்கு

யாருடைய கட்டுப்பாடுமின்றி சுயசிந்தனையாளராக வளர்ந்ததால்

திரும்பவும் தாய் தந்தையிடம் வந்துவிட்டார். 5 வயதில் திண்ணை

பள்ளிக்கூடட்தில் சேர்க்கப்பட்டார்.

பெரியாருக்கு நேர்மாறாக அவரின் மூத்த சகோதரர்

ஈ.வெ.கிருஷ்ணசாமி எல்லோராலும் பாராட்டப்படும் பிள்ளையாக

இருந்தார். பெரியார் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ள பெட்டிக்கடை

ராமநாத அய்யரிடம் மூடப்பழக்கங்கள்பற்றி விவாதம் செய்வார்.

ஒருநாள் ராமநாத அய்யர் எது நடந்தாலும் அதற்குக் காரணம்

“தலைவிதிதான்” என்று கூறினார். அவருக்கு பாடம் புகட்டுவதற்காக

அவரது கடைக்கு முன்னால் நிழலுக்காக போடப்பட்டிருந்த

கீற்றுட்தட்டியின் முட்டுக்கம்பை தட்டிவிட்டார். அந்த தட்டி ராமநாத

அய்யரின் தலையில் விழுந்தது. ஏன் இப்படி செய்தாய் என ராமநாத

அய்யர் கேட்டதற்கு எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்கும் என்றீர்கள்.

இதுவும் உங்கள் தலைவிதிப்படிதான் நடந்துள்ளது என பெரியார்

கூறிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

பெரியார் 10 வயது இருக்கும்போது மிகவும் குறும்பு செய்பவராகவும்

புழங்கக்கூடாத ஜாதியினருடன் புழங்கி அவர்கள் வீட்டிலேயே

உணவும் உண்டதாலும் கோபமுற்ற அவரது தந்தை அவருடைய

இரண்டு கால்களிலும் விலங்கு கட்டைகளை பூட்டிவிட்டார்.

பெரியாருக்கு பத்தொன்பது வயதாகும்போது 13 வயது நிரம்பிய

நாகம்மையாரை திருமணம் செய்து வைத்தார்கள். நாகம்மையார்

அவர்கள் பெரியார் செய்கிற அனைத்து காரியங்களுக்கும் துணையாக

நின்றார். மேலும் வீட்டிற்கு வரும் அனைவரையும் வரவேற்று

விருந்தளித்தார். நாகம்மையாருக்கும் பெரியாருக்கும் ஒரு குழந்தை

பிறந்து 5 மாதத்தில் இறந்து விட்டாலும் நாடெங்கும் குடும்பக்

கட்டுப்பாட்டை பரப்பினார்.

“நாகம்மையார் அவர்கள் வாழ்ந்ததும் வாழ நினைத்ததும்

எனக்காகவே அன்றி தனக்காக அல்ல” என்று பெரியாரால்

பாராட்டப்பட்ட நாகம்மையார் 1933இல் காலமானார். நாகம்மையாரின்

மறைவிற்குப் பின் தீவிரமாக பொதுப்பணி செய்ய வாய்ப்பு

கிடைட்துள்ளது என்றார் பெரியார். நாகம்மையார் மறைவுற்ற மறுநாளே

திருச்சியில் 144 தடை உத்தரவை மீறி சீர்திருத்த திருமணத்தை செய்து

வைத்து சிறை சென்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.