ராகு-கேது தொடர் -5

 

இந்த  தொடரில் ( ராகு-கேது தொடர்) இது ஐந்தாம் பாகம்.

முந்தைய பாகங்கள் லிங் வேண்டுமென கேட்போர் என் முந்தைய பதிவுகளை வரிசையாக ஸ்க்ரோல் செய்தால் வாசிக்க கிடைக்கும்

consciousness க்கும்  Subconscious க்கும் எப்போதுமே ஒரு யுத்தம் பலமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்த யுத்தத்தின் காரணமாக ஜாதகருக்கு உருவாகும் fear of rejection தோல்வி குறித்த அச்சம், தயக்கம் தடுமாற்றம்.. இது தான் கேது என்பதாக சென்ற பதிவில் வாசித்தோம்

அதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்

மனப் போராட்டத்தின் போது, கேது கர்ம அச்சின் ஒரு புள்ளியாக ( axis point in Karmic Axis) இயங்கி சில தடைகளை முன் வைப்பார்.

அவற்றிற்கான விடைகளை ஜாதகருக்கு உதவியாக  அளிக்க ஜாதகரின் லக்னாதிபதி துணை வருவார்.  இங்கே ஜாதகரின் லக்னாதிபதியும் ராகுவும் ஒரு கட்சியாக இருந்து கொண்டும், கேது மறுபுறம், தடைகள், தடைக்கற்கள், சுற்றுப் பாதை மாற்று வழி இதெல்லாம் முன் வைப்பார்.

ஆச்சரியமான விஷயம், ராகுவும் கேதுவும் இணைந்து இந்த சந்தர்ப்பத்தில் ஜாதகரை இந்த தடைகளுக்கான விடைகளை, material world ல் தேடும் முறைகளைச் சொல்லிக் கொடுக்கத் தொடங்குவார்கள். அத்தோடு நில்லாது divine support seeking எனும் மற்றுமொரு பலமான வழியினை கேது ஜாதகருக்கு alternative method ஆக எடுத்து வைப்பார்

இந்த உதவியைக் கேது தரும் போது கேது செவ்வாய்க்கு நிகரான வலிமையுடன் முன் வருவார்

எதிரிகளை, மனச் சோர்வுகளை, தடைகளை வெல்லும் தந்திரமான மன வலிமையினை, கேது வழங்கும் இடம் இது தான்

கேது வழங்கும் இந்த பலம், ஒரு residual energy மாதிரி நீண்ட நாள் உடன் வரும்

ஜோதிடத்தில் இரண்டு குரு ஒன்று தேவ குரு எனும் பிரஹஸ்பதி, இன்னொருவர் சுக்கிரன் எனும் அசுர குரு

ஒரு ஜாதகருக்கு கேது தசை எனும் ஏழாண்டுகள் கழித்து அசுர குருவான சுக்கிரனின் தசை வருவது இதனால் தான்

  எதிரிகளை, மனச் சோர்வுகளை, தடைகளை வெல்லும் தந்திரமான மன வலிமையினை, கேது வழங்கி, தயார் செய்த நிலையில் சுக்கிரனின் தசை

அதே போல ராகு தசைக்குப் பின்பு குரு தசை

இந்த தொடரின் நோக்கம் கர்ம அச்சு எனும் Karmic Axis

அதனை அறிமுக அளவில் அடுத்த இரண்டு பதிவுகளில் பார்க்க இருக்கின்றோம்

பலர் தங்களது ஜாதகத்தில் ராகு & கேதுவின் இருப்பிடத்தைக் கூறி எப்படி இருக்கும் என பொதுவான கேள்விகளை இன்பாக்சில் , SMS , whatsapp, mail ல் எழுப்புகின்றார்கள்.

அவர்களுக்கு பொதுவான பதில் மட்டுமே சொல்ல இயலும். காரணம் ஜாதகம் என்பது இந்த இரண்டு கிரஹங்களால் மட்டுமே அமைந்தது அல்ல

கர்ம அச்சு எனும் Karmic Axis  தொடர்பான அறிமுகப் பதிவுகள் இரண்டு அதன் பிறகு ஜாதகத்தில் ராகு & கேது இருப்பிடங்களைக் கொண்டு பொது இயல்புகள் பலன்கள் குறித்து 12  பதிவுகள்

பிறகு ராகு & கேதுவின் சாரம் என்பதாக சில பதிவுகள் என்று தொடர இருக்கின்றேன்



Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.