ராகு-கேது தொடர் -4

 

ராகு கேது தொடரில் இது நான்காம் பாகம்

ராகுவைப் போல் கொடுப்பாரில்லை என்பதை எப்படி என்பதை விரிவாகப் பார்த்தோம்.

ராகு பகவான் குறித்து மீண்டும் சில ஆச்சரியமான விஷயங்களுடன் சில நாட்கள் கழித்து பார்ப்போம்

இப்போது கேது பகவான் குறித்துப் பார்போம்

ஒரே நாகத்தின் தலை பகுதியாக ராகு வால்பகுதியாக கேது என்பதாக ஜோதிடம் அடையாளம் சொல்லுகிறதல்லவா

முன் வினைகளின் வழியே உண்டாகும் ஆசைகளின் தொடர்ச்சியினை நிகழும் பிறப்பிக் அடைவதற்கான வீரியத்தை ஆற்றலைக் கொடுப்பவர் ராகு என்று கவனித்தோம்.

இந்த  ஆற்றலுக்குத் தேவையான consciousness அதாவது புலன்களால் அறிந்து கொள்ளும் இயல்பு மற்றும் Subconscious அதாவது உள்ளுணர்வு.. அதாவது வெளியில் பிறரால் கண்டு கொள்ள இயலாத தெளிவு கொண்ட அறிவு இவை இரண்டையும் இணைக்கும் தன்மையினைத் தருகின்றவர் கேது

இந்த ஓர் அம்சத்தினால் கேதுவை ஞானகாரகன் கேது என்று சொல்லுகின்றோம்

அது சரி ! கேதுவைப் போல கெடுப்பாரில்லை என்ற சொலவடை ஏன் ?

  consciousness க்கும்  Subconscious க்கும் எப்போதுமே ஒரு யுத்தம் பலமாக நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்த யுத்தத்தின் காரணமாக ஜாதகருக்கு உருவாகும் fear of rejection தோல்வி குறித்த அச்சம், தயக்கம் தடுமாற்றம்.. இது தான் கேது

வினைப்பயனால் கிடைத்த வாழ்க்கையினை முழுதும் அனுபவித்து வாழத் தூண்டும் ராகு

fear of rejection காரணமாக அந்த முயற்சியில் இருக்கும் ஜாதகரின் நம்பிக்கையினைப் பின்னுக்கு இழுக்கும் கேது தான்இவரைப் போலக் கெடுப்பாரில்லைஎன்று பெயர் வாங்கிய கேது

வாழ்ந்தாக வேண்டும் எனும் தூண்டுதல், அப்படிச் செய்தால் கெடுதல் வருமோ எனும் அச்சம் இவை இரண்டும் தான் கர்ம அச்சு, Axis of Karma !!!!

ராகு தரும் அகங்காரம், பெருமையினைச் சோதிக்கும் எதிர்த் தரப்பு கேது.. பயம், தயக்கம், குழப்பம்

இந்த மயக்கத்தினை வெற்றி கொள்ளும் வழியைக் கேதுவே உருவாக்குவார் என்பது தான்  Axis of Karma ன் ஆச்சரியம்

தோல்வி அடைவோம் எனும் பயத்தை உருவாக்கும் கேது ராகுவுடன் எப்போது தொடர்பில் இருப்பதால் அந்த உந்துதலில் , தோல்வி தவிர்க்கும் முறைகளைத் தேடத் தொடங்குவது இயல்புதானே

கேதுவின் தேடல் எப்போது இறை சக்தி துணையுடனே அமைந்திருக்கிறது.. அது search for perfection.. கேது பலமான ஜாதகங்களில் குறிப்பாக கேது ஏதேனும் ஒரு வழியில் மூன்றாம் பாவகத்துடன் தொடர்பு கொள்ளும் வகையில் ஜாதகம் அமைந்திருந்தால் Mr. Perfection அதனால் Mr Versatile

  Perfection என்பது கிட்டத்தட்ட ஒரு மாயை .. அதைத் துரத்தும் போது, பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும் அதனால்     Mr Versatile  தானாக வரும் ..

ஒரு ஜாதகத்தில்  கேது எப்படி அமைந்திருந்தால் இந்த  Mr. Perfection அதனால் Mr Versatile  தன்மை கொண்டவராக ஜாதகர் இருப்ப்பார் என்று பின்னர் கவனிக்கலாம்

ஜாதகர் தன் வாழ்வில் பெரிய கனவுகளை, இலட்சியங்களை அடையும் படி Mr Ambition என்று இருக்க ராகு எப்படி காரணமோ அந்த big picture ன் வடிவமைப்புக்கு கேது தான் executor . காரணம் தோல்வி பயத்தினை கொடுத்து அதனைச் சரி செய்வதும் அவர் தானே

இதோ இவர் தனித் தன்மையானவர் என ஒருவருக்கு ஒளிவட்டம், பரிவட்டம் கொடுப்பவர் கேது தான் . இதை சிலர் லௌகீக வாழ்க்கைக்கும் சில தவ வாழ்க்கைக்கு நிகரான அல்லது தவ வாழ்க்கை போன்ற வாழ்க்கைக்கு போவதும் என்ற இரு துருவம் போன்ற நிலைகளை, தான் தரும் அந்த fear of rejection மூலம் உருவாக்குகின்றவர் கேது தான்

கேதுவின் சூட்சம இயல்புகள் குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.