ராகு-கேது தொடர் -2

 

ராகு-கேது தொடர் -2


எனது நட்பில் இருப்பவர் ! மிகுந்த மரியாதைக்கு உரியவர் ! பல நல்ல நூல்களை மொழியாக்கம் செய்தவர்.

ஒருமுறை என்னுடன் ஓர் உரையாடலில் பேசியதை நினைத்துக் கொள்கிறேன்

ஜோதிடம் சார்ந்த ஓர் ஆங்கில நூலினை அப்போது அவர் மொழி பெயர்த்துக் கொண்டிருந்ததாகச் சொல்லி, அதில் ஏனைய கிரஹங்களைக் காட்டிலும் ராகு கிரஹத்தினைக் குறித்து வாசித்த போது அதிகம் அச்சம் அடைந்ததாகச் சொன்னார்

இந்த தொடரில் ராகு கிரஹத்தைக் குறித்து முந்தைய பதிவில் கொஞ்சம் பார்த்தோம். .மேலும் பார்ப்போம்

பெரும்பாலும் ஜோதிட நூல்களில் ராகுவின் negative aspects வலியுறுத்திச் சொல்லப்படுகிறது .. ஆனாலும் ராகு கேது குறித்த மிகப் பிரபலமான சொலவடை ஒன்று உண்டு

ராகுவைப் போல கொடுப்பானில்லை

கேதுவைப் போல கெடுப்பானில்லை

ராகு என்ன கொடுப்பார்

ஒரு ஜாதகத்தில் அந்த ஜாதகரின் personality அதிகம் சொல்லுவது ஜாதகரின் லக்னாதிபதி, சந்திரன், சூரியன் என்று பொதுவாக ஜோதிடத்தில் சொல்லுவார்கள்

ஆனால் ஜாதகரின் personality and personality evolution, எந்த சந்தர்ப்பங்களில் ஜாதகரின் மனோபாவம் எப்படி இயங்கும் என்பதைச் சொல்லுகின்றவர் ராகு !

ஒருவர் தன் வாழ்வில் எதையெல்லாம் அனுபவிக்கின்றாரோ அதற்கெல்லாம் ஒவ்வொரு கிரஹங்களின் காரகத்துவம் எனும் planet role காரணம் என்றாலும் அதனை discipline செய்கின்றவர் ராகு !

மனிதரில் எல்லோருக்கும் புத்திசாலித்தனமும், மனிதாபிமானமும் இணைந்தே இயங்கும். இதில் எது எந்த சதவீதம் எத்தனை பங்கு இருக்க வேண்டும் என்பது சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப மாறுபடும்

இந்த combination நம் அனைவருக்கும் தருவது நம் ஜாதகத்தில் இருக்கும் ராகு

மனிதாபிமானத்தைக் குறைத்து புத்திசாலித்தனம் மட்டுமே இயங்க வேண்டிய intellectual and rational அவசியங்கள்

புத்திசாலித்தனத்தை சற்றே கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து ego அளவீடுகளில் மிகையில்லாமல், மனிதாபிமானத்தினை வலியுறுத்தும் அவசியங்கள்

இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ராகுவின் role தான் பிரதானம்

ஜாதகரின் மனக் கட்டுப்பாட்டுக்குள் அவரது அகங்கார நினைவுகள் இருக்கும் தன்மையினை நிர்ணயிப்பதும், மனக் கட்டுப்பாட்டினை மீறி செயல்வடிவமாக அகங்காரம் வெளிப்படுவதும் ராகுவின் அருளாட்சியே !

ஜாதகர் தனது ஆழ்மனதின் சக்திகளைக் கொண்டு அதன் செயல் திறனைக் கொண்டு மிகவும் contextual ஆக தனது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதும் ராகுவின் செயலால் தான்

ராகுவைக் குறித்து மேலும் வரும் பதிவுகளில் தெரிந்து கொள்வோம்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.