ராகு-கேது தொடர் -1

 

ராகு-கேது தொடர் -1

அச்சில் சுற்றுவதைக் கணக்கில் எடுத்துக் கொள்வது ஜோதிடம்

பூமி தன் அச்சில் தன்னைச் சுற்றுகிறது. வேறோர் அச்சில் சூரியனையும் சுற்றுகிறது.  தன்னைத் தானே ஒரு சுற்று பூர்த்தி செய்வதை நாள் என்றும், சூரியனைச் சுற்றுவதை வருஷம் என்றும் சொல்லுகின்றோம்

புதன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கிரஹம். சூரியனை இரண்டு சுற்று சுற்றும் காலத்தில் தன்னைத் தானே மூன்று சுற்று சுற்றியிருக்கும்

சுக்கிரன் தன்னைத் தானே சுற்றுவதில் விநோதம் அதிகம். ஏனைய கிரஹங்களில் இருந்து மாறுபட்டது . சூரியனைச் சுற்ற 243 நாட்கள் ஆகும் . தன்னைத் தானே சுற்ற 117 நாட்கள் !! 

சுக்கிரன் எல்லோரிலும் மாறுபட்டது. காரணம் தன்னைத் தானே தன் அச்சில் சுற்றும் திசை, அது சூரியனைச் சுற்றும் திசைக்கு எதிர் திசையில். அதுமட்டுமில்லை. சுக்கிரனின் சுற்றுப் பாதை கிட்டத்தட்ட வட்டம்..almost perfect circle ஏனைய கிரஹங்களின் சுற்றுப் பாதை நீள்வட்டம்

குரு தன் அச்சில் தன்னைத் தானே சுற்றுவதில் மிக வேகமானவர்.. ஆம் 10 மணி நேரத்தில் தன் அச்சில் தன்னைத் தானே சுற்றும் கிரஹம். சூரியனைச் சுற்ற 12 ஆண்டுகள் பூமியின் கணக்கில் 4333 நாட்கள்

சனி மிகவும் நிதானமாக சூரியனைச் சுற்றுகின்றவர். சுமார் 30 வருடங்கள் ஒரு சுற்றுக்கு. முடவன், சனைஸ்வர என்ற பெயர் இதனால். ஆனால் தன்னைத் தானே சுற்றுவதில் ஸ்பீட் அதிகம் 10.7 மணி நேரத்தில் ஒரு சுற்று

ராகு / கேது விபரங்களை பல முறை எழுதிவிட்டேன். மீண்டும் சுருக்கமாக

பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையும், சந்திரன் பூமியைச் சுற்றும் நீள்வட்டப் பாதையும் இரண்டு இடங்களில் ஒன்றை ஒன்று வெட்டுமல்லவா அப்படி வெட்டும் இடங்கள் ( Nodes ) தான் ராகுவும் கேதுவும்.

இவை இரண்டும் நாம் கண்ணால் பார்க்க முடிந்த கிரஹங்கள் இல்லை என்பதால் நிழல் கிரஹங்கள் என்று சொல்லுகின்றோம்

ஒருவரின் ஜாதகத்தில் ராகுவும் கேதுவும் ஒருவருக்கு ஒருவர் 180 டிகிரி வித்தியாசத்தில் அதாவது ஆறு ராசிகள் இடைவெளியில் அமைந்திருக்கும்.

இந்த இரண்டு நிழல் கிரஹங்களின் அமைப்பினை ஓர் அச்சாக ( I mean axis ) ஒரு ஜாதகத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதை பூர்வ கர்மாவின் அச்சு என்பதாக தொடக்கத்தில் ஒரு புரிதலுக்கு எடுத்துக் கொள்வோம். for and understanding in the begining taking the axis , the shadow planets Rahu and Kethu make in a horoscope as Karmic Axis

பெரும்பாலும் ஜோதிடத்தில் பலன்கள் சொல்லும் போது ராகு & கேது என்று இணைத்தே சொல்லப்பட்டாலும், இரண்டு கிரஹங்களுக்கும் தனிப்பட்ட அம்சங்களில் நிறைய வித்தியாசங்களும் தனித் தன்மைகளும் உண்டு என்பதை ஒரு மினி தொடராகப் பார்க்கலாம்

பூர்வ புண்ணியத்தின் ( பாவம் உட்பட)  நீட்சியாக அதனைக் கொண்டு நிகழ்காலத்தில் என்ன சாதிக்க ஒரு ஜாதகர் விரும்புகிறார் என்பதையும் அதனால்  அவர் மனதில் என்ன எண்ணங்கள் உருவாகின்றன என்பதையும் ஒரு ஜாதகத்தில் ராகு வின் position ஐக் கொண்டு எப்படி சொல்ல முடியும் என்பதை அடுத்து வரும் பதிவுகளில் சுருக்கமாவும் அதே சமயம் சற்றே ஆழமாகவும் சொல்ல முயற்சி செய்கின்றேன்

ஒரே நாகத்தின் தலை மற்றும் வால் பகுதிகளாக அடையாளமிடப்பட்டிருக்கும் ராகு கேது கூட்டணியில் ராகுவின் பிரதான அடையாளம் என்பது மிஸ்டர் லட்சியம் என்பது.

ராகு பலமாக அமைந்திருக்கும் ஜாதகங்களை உதராணமாச் சொல்வதென்றால் , உயர்ந்த இலக்கினை நோக்கமாகக் கொண்டு அதைச் சீராகத் திட்டமிட்டு அடையும் வைராக்கியம், தீர்மானம், பிடிவாதம் இருக்கும். அதே சமயம். பரிபூர்ணமாக அந்த இலக்கினை அடைந்து விட்ட பிறகு உடனே இரண்டு நினைப்புகள் ஜாதகருக்கு வரும்

1. அடச் சீ.. இவ்வளவு தானா ?? ஓகே இந்த இடத்தை அடைந்துவிட்டோம்

2. அடுத்த ஓர் உயரமான, அடைவதற்கு சற்றே கடினமான இலக்கினை / நோக்கத்தினை உடனே யோசிக்கவும் & திட்டமிடவும்

ராகு வலுவாக இருப்பவர்கள், தங்கள் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் இப்படி goal seek செய்து அதனை உயரத்துக் கொண்டு போவதைச் செய்து கொண்டே இருப்பார்கள்

 ராகு-கேது குறித்து தொடர்ந்து வாசிப்போம் !Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.