பெரியாரிடமிருந்த அருங்குணங்கள் 02

 பெரியாரிடமிருந்த அருங்குணங்கள்

செல்வச் செழிப்பிலே செல்வக் களிப்பிலும் சிக்கி சீரழியாது தான்

கண்ட சொத்துக்கள் அனைத்தையும் அறக்கட்டளை மூலம் பொதுச்

சொத்தாக்கினார்.

1954இல் இராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வி

திட்டட்தை எதிர்த்து பிரச்சாரம் செய்து வெற்றிகண்டார். பெரியாரின்

வாதத்திறமையை கண்டு வியந்த “இராஜகோபாலாச்சாரியார் நல்ல

வேளை நீங்கள் வக்கீலாகாமல் போனீர்கள் வந்திருந்தால்

வழக்கறிஞர்கள் பாடு திண்டாட்டம்தான் என்றார்.

19.12.1973இல் சென்னை தியாகராய நகரில் தனது உடல் வலியையும்

பொருட்படுத்தாது தனது இறுதி சொற்பொழிவை நிகழ்த்தினார்.

மக்களுக்காக போராடி 88 முறைகள் சிறைக்குச் சென்றார். தன்னுடைய

பிறந்த நாட்கள் கொள்கை விளக்க நாட்களாக கொண்டாட அனுமதி

அளித்தார்.

வெண்தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவுப் பகலவன் என

எல்லோராலும் பாராட்டப்பட்ட தந்தை பெரியார் வேலூர் சி.எம்.சி

மருத்துவமனையில் 24.12.1973இல் காலமானார். கடவுள் இல்லை மருத்துவமனையில் 24.12.1973இல் காலமானார்

என்று சொன்ன பெரியார் 94 வருடம் 3 மாதங்கள் 7 நாட்கள் வாழ்ந்தார்.

தனது வாழ்நாளில் 8200 நாட்கள் சுற்றுப்பயணம் செய்தார். 10700 பொது

நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பூமியின் சுற்றளவைப் போல 33

மடங்கு தூரம் வாழ்நாளில் சுற்றுப்பயணம் செய்தார்.

பெரியார் வாழ்ந்த காலத்தில் 1970இல் பெரியாருக்கு யுனெஸ்கோ

விருது வழங்கப்பட்டது. முதன்முதலில் அவர் வாழும் காலத்திலேயே

திருச்சியில் பெரியாரின் முழு உருவச் சிலை வைக்கப்பட்டது.

பெரியாருக்கு 76 வயதில் 76 பவுன் தங்கம் நாகப்பட்டினத்தில்

வழங்கப்பட்டது.

தன்னுடைய கருத்துக்கள் பல திருக்குறளில் உள்ளதால்

திருக்குறளை மக்களிடம் பரப்பினார். இருந்தாலும்

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை” போன்ற திருக்குறளை மிகவும்

சாடினார்.

பெரியாருக்குப் பணி செய்வதற்காகவே பெரியாருடன்

சுற்றுப்பயணம் செய்து பெரியாரை நன்றாகப் பார்த்துக் கொண்டார்

மணியம்மையார். அவரின் இயற்பெயர் காந்திமதி. தன்னுடைய

சொத்துக்கள் அனைத்தும் தனிப்பட்ட யாருக்கும் சென்றுவிடக் கூடாது.

பொது உடைமையாக்க வேண்டுமென நினைத்த பெரியார் அதற்கான

ஓர் ஏற்பாட்டை செய்தார். பெரியாரின் மறைவுக்குப் பிறகு பெரியாரை

95 ஆண்டுகாலம் பாதுகாத்த மணியம்மையார் அவர்கள் இந்த

இயக்கத்தை வழிநடத்தினார்கள். மணியம்மையாரின் மறைவுக்குப்

பிறகு காங்கிரசின் மூத்த தலைவர் ழு.மு.மூப்பனார் அவர்களால்

“பெரியாரின் பிள்ளை” என பாராட்டப்பட்ட தமிழர் தலைவர்

கி.வீரமணி அவர்கள் திராவிடர் இயக்கத்தை சிறப்புடன் வழி நடத்திச்

செல்கிறார். பெரியாரை பெரியாரின் உலகமெங்கும் எடுத்துச்

செல்கிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.