பெரியாரிடமிருந்த அருங்குணங்கள் 01

 பெரியாரிடமிருந்த அருங்குணங்கள்

 சிக்கனத்தின் சின்னமாக விளங்கிய பெரியார் எப்போதும்

புகைவண்டியில் மூன்றாம் வகுப்பில்தான் பயணம் செய்வார். அதை

அவரிடம் கேட்டால் நான்காம் வகுப்பு என்று ஒன்று இல்லையே

என்றார்.

பயணத்தின் போது ரோட்டு ஓரக் கடைகளிலேயே சாப்பிடுவார்.

வரவுக்கு மீறி செலவு செய்வதை விபசாரத்திற்கு ஒப்பிடுவார்.

பொதுக் கூட்டங்களில் மாலை அணிவிப்பதை பொருள் விரயம்

என்றார். அது எதற்கும் பயன்படாது என்றார். இருந்தாலும் அவருக்கு

அணிவிக்கப்பட்ட மாலைகள் அனைத்தையும் தனது மனித நேயப்

பணியாக திருச்சியில் நடந்து வருகிற நாகம்மையார் குழந்தைகள்

இல்லத்து குழந்தைகளுக்கு கொண்டு வந்து கொடுப்பார்.

மேடையில் பெரியார் பேசும்போது நடந்த சுவையான சம்பவங்கள்

 ஒரு மேடையில் பேசும்போது பார்ப்பனர் ஒருவர் கேள்விகளை

எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவர் எழுதிக்

கொண்டிருந்த பென்சிலில் பல்ப்பம் உடைந்து விட்டதை கண்ணுற்ற

பெரியார் தன் பையில் இருந்து பேனாவைக் கொடுத்து கேள்விகளை

எழுதச் சொன்னார்.

 இந்து மதத்தை ஒழித்து விட்டு அந்த இடத்தில் எதை வைக்கப்

போகிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு “வீட்டில் அசிங்கம் இருக்கிறது

நாற்றம் அடிக்கிறது எடுட்து எறியுங்கள் என்றால் அதற்கு மாற்றாக

அந்த இடத்தில் எதை வைக்கலாம் என்பது சரியா?” என்றார். எல்லா

மதங்களுமே ஒழிய வேண்டும் என்று சொன்ன பெரியார் மனிதனை

மனிதன் இழிவுபடுத்தும் நிலை இந்து மதத்தில் அதிகம் இருப்பதால்

இந்து மதத்தை அதிகமாகச் சாடினர்.

 கடவுள் இல்லை என்கிறீர்களே கடவுள் வந்துவிட்டால் என்ன

செய்வீர்கள் எனக் கேட்டதற்கு “வந்து விட்டால் உண்டு என்று ஏற்றுக்

கொள்வேன்” என்றார்.

பெரியார் தன்னுடைய தள்ளாத வயதிலும்

இராஜகோபாலாச்சாரியரின் இறுதிச் சடங்கில் சக்கர நாற்காலியில்

சென்று கலந்து கொண்டது மட்டுமல்லாமல் குடியரசு தலைவருக்கு

மரியாதை கொடுக்கும் வண்ணம் சக்கர நாற்காலியில் இருந்து எழுந்து

அதனை தரையில் உட்கார்ந்திருந்த குடியரசுத் தலைவர் வி.வி.கிரி

அவர்களுக்கு நாற்காலியை கொடுத்தார்.

மக்கள் விரும்பியதை கூறாமல் மக்களுக்கு வேண்டியதைக்

கூறினார்.

அவருடைய சமுதாயப் பணியானது பெரும்பகுதி மக்களுக்கு

எதிராக இருந்ததால் “நான் மயிரைக் கட்டி மலையை இழுக்கிறேன்.

வந்தால் மலை போனால் மயிறு” என்பார். வேட்டியைக் கூட

கைலியாகக் கட்டினால் அதிக நாட்கள் உழைக்கும் என்பார்.

‘ஒரு பெண்ணை விதவையாக வைத்து சாகாமல் பாதுகாப்பது ஒரு

உயிரை பட்டினியோடு சாகடிப்பதை விடக் கொடுமையானது’ என்றார்.

இந்து மதம் என்பது மனித நேயத்திற்கு எதிரானது. எனவே அதை

ஒழிக்க வேண்டும் என்றார்.

 ஒரு தெருவில் உள்ள ஒரு வீட்டில் “இது பதிவிரதை வீடு” என்று

எழுதினால் பக்கத்து வீடுகள் தேவடியாள் வீடுகள் என்பது போல்

பிராமணாள் ஹோட்டல் என்று எழுதினால் மற்றவர்கள் சூத்திரர்கள்

என்றுதான் அர்த்தம் என்றார்.

அனைவரும் கல்வி அறிவு பெற 6 மாதத்தில் கையெழுத்துப் போட

தெரியாதவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனை என சட்டம்

கொண்டு வரவேண்டும் என்றார்.

மனுதர்மத்தில் ஜாதிக்கு ஒரு நீதி இருந்ததைக் கண்டித்து தாடிக்கு

ஒரு சீயக்காய் தலைக்கொரு சீயக்காய் என்றார்.

கல்வி அறிவும் சுயமரியாதை எண்ணமுமே மனிதனை மாண்புரச்

செய்யும் என்றார். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்றார்.

பொதுக் கூட்டங்களில் தான் சொல்ல வந்த கருத்துக்கள்

அனைத்தையும் சொல்லித்தான் முடிப்பார். மயிலாடுதுறையில் நடந்த

பொதுக்கூட்டத்தில் நாலரை மணி நேரம் பேசினார்.

பெரியார் 78ஆம் பிறந்த நாள் விழாவில் பெரியாருக்கு குன்றக்குடி

அடிகளார் அவர்கள் “தன்மான வீரர்” என சிறப்பு பெயர் வைத்தார்.

நன்றி உணர்வென்பது உதவியை பெற்றுக் கொண்டவர்

காட்டவேண்டிய கடமையே தவிர உதவி செய்தவன் அதை

எதிர்பார்க்கக் கூடாது என்றார். தோழர்கள் கொடுத்த உணவு மிகவும்

காரமாக மோசமாக இருந்தாலும் “அன்போடு கொடுத்த தோழர்கள்

மனம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அந்த உணவினை

சாப்பிட்டு” பாராட்டுவார். செல்வராகப் பிறந்து செல்வராக வாழ்ந்து

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.