பொது அறிவு வினா-விடைகள்

 பொது அறிவு வினா-விடைகள்:

-------------------------------------------------
1. திருவள்ளுவரைப் படிக்கிறேன் - கருத்தாவாகு பெயர்
2. நன்னூல் கற்கப்போகிறேன் - காரியவாகு பெயர்
3. புதுக்கவிதை வளர்ச்சியில் .......ன் பங்கு போற்றத்தக்கது. - வல்லிக்கண்ணன்
4. மணிமேகலை கூறும் பத்தினி பெண்டிர், உலக உயிர்கள், உடல் அடக்க முறை, தீவினைகள் ஆகியவற்றின் எண்ணிக்கைகள் முறையே...
பத்தினி பெண்டிர் - 3
உலக உயிர்கள் - 6
உடல் அடக்க முறை - 5
தீவினைகள் -10
5. பரணி நாளில் பேய்கள் கூடி இரத்தமும் இறைச்சியும் கலந்த உணவு சமைத்த உண்டு மகிழ்ந்து ஆடிப்பாடி களிக்கும். - இதில் இரத்தமும் இறைச்சியும் கலந்த உணவு என்பது - நினச்சோறு
6. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இக்குறளில் பயின்றுவரும் அணி - நிரல் நிறை அணி
7. பெருந்தலைவர் காமராஜருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை வழங்கிய ஆண்டு - 1976
8. பரஞ்சோதி முனிவரின் நூல்கள் - திருவிளையாடற் போற்றிக்கலிவெண்பா, மதுரைப்பதிற்றுப் பத்தந்தாதி, வேதாரணிய புராணம்
9. "வேத காலத்து வடமொழியில் மூலத் திராவிட மொழிக்கூறுகள் பல கலந்துள்ளன" என்று கூறியவர் - ரைஸ் டேவிஸ்
10. வைத்தியநாத தேசிகர் இயற்றியது -பாசவதைப் பரணி

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.