பொது அறிவு வினா-விடைகள் - 3

 பொது அறிவு வினா-விடைகள்:

-------------------------------------------------
1. தமிழ்நாட்டில் யாருடைய முன்னோர் காலத்தில் கரும்பு சீனாவிலிருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டது? - அதிகன்
2. ஹெலன் கில்லர் அமெரிக்காவில் எந்த மாகாணத்தில் பிறந்தார்? - அலபாமா
3. "திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்(து) அரனல்ல செய்யாமை நன்று" என்ற குரளில்
தற்பிறர் - ஏழாம் வேற்றுமைத் தொகை, செய்யினும் - இழிவுச் சிறப்பும்மை
4. மல்லல் - வளம்
5. "ஆனந்தரங்கருடைய நாட்குறிப்புகள் அவரது காலத்தில் யாருமே புரிந்திராத அரியதொரு இலக்கியப்பணி" என்று கூறியவர் - கே.கே.பிள்ளை
6. சொல்லணி அமைத்துச் சுவை வளம் செழிக்கப் பாடுபடுபவர் - சித்திரக்கவி
7. சீனிவாசக் கவியால் படைக்கப்பட்ட ஆனந்தரங்க விஜயசம்பு என்ற நூல் எழுதப்பட்ட மொழி - வடமொழி
8. உலகம் யாவையும் தாமுள வாக்கலும் நிலைபெ றுதலும் நீக்கலும் நீங்கலா - இப்பாடல் இடம்பெற்றுள்ள கம்பராமாயண காண்டம் - பாலகாண்டம்
9. "ரூபாயத்" என்பது - நான்கடிச் செய்யுள்
10. இந்திய நாட்டை "மொழிக்காட்சிச்சாலை" என்றவர் - ச.அகத்தியலிங்கம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.