ஜூன் 2021-இல் நடத்தப்பட உள்ள துறைசார் தேர்வுகளில் கணினி வழியாக நடத்தப்பட்டும்

 ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் டிசம்பர் மாதங்களில் துறை சார்ந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு ஆண்டிற்கு இருமுறை நடக்கும் இத்தேர்வுகளின் நடைமுறையினை சீரமைக்கும் பொருட்டு சில மாற்றங்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

அதன்படி ஜூன் 2021-இல் நடத்தப்பட உள்ள துறைசார் தேர்வுகளில் கணினி வழியாக நடத்தப்பட்டும் தேர்வினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம், தேர்வு முறை ஆகியன TNPSC-யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாற்றங்கள் என்னென்ன?

  • கொள்குறிவகை தேர்வுகளுக்கான துறைசார் தேர்வுகள் கணினிவழித் தேர்வாக நடைபெறும்.
  • விரித்துரைக்கும் வகையிலான துறைசார் தேர்வுகளைப் பொறுத்தமட்டில் தற்போதுள்ள நடைமுறையான எழுத்துத் தேர்வு முறையே தொடரும்.
  • கணினி வழி தேர்வுகள் 22.06.2021 லிருந்து 26.06.2021 வரை நடைபெறும்.
  • விரித்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகள் 27.06.2021 லிருந்து நடைபெறும்
  • கொள்குறி வகை மற்றும் விரித்துரைக்கும் வகை எழுத்துத் தேர்வுகளை ஒருங்கிணைத்து எழுதவிருக்கும் தேர்வர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இரு வேறு தினங்களில் எழுத வேண்டும்.

தேர்வாணையத்தின் இணையதளத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும்

இந்த தேர்வை எழுதவிருக்கும் தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தினை தொடர்ந்து கண்காணிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.