கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமமானது?

1. ஓடும் மகிழுந்து வளைவுப்பாதையில் செல்லும்போது பயணியர் ஒருபக்கமாக சாயக் காரணம்?
A. ஓய்வில் நிலைமம்
B. இயக்கத்தின் நிலைமம்
C. திசைக்கான நிலைமம்🍭
D. நேர்கோட்டு உந்தம்
2. கீழ்க்கண்ட எந்த நிகழ்வின் போது மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடையின் மதிப்பு சுழியாகிறது?
A. மின்தூக்கி ஓய்வில் உள்ளது(a=0)
B. மின்தூக்கி புவியீர்ப்பு முடுக்க மதிப்பில் கீழே தடையின்றி விழுகிறது(a=g)🍭
C. மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் கீழே நகர்கிறது
D. மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் மேலே நகர்கிறது
3. கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமமானது?
A.உந்த மாற்று வீதம்
B.திசை மற்றும் கால மாற்று வீதம்
C.உந்த மாற்றம்🍭
D.நிறை வீத மாற்றம்
4. மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாக காட்சி அளிக்க காரணம்?
A.ராலே ஒளிச்சிதறல்
B.இராமன் ஒளிச்சிதறல்
C.டின்டால் ஒளிச்சிதறல்
D.மீ ஒளிச்சிதறல்🍭
5. புதிய அதிர்வெண்கள் கொண்ட நிறமாலை வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.ராலே வரிகள்
B.ராமன் வரிகள்🍭
C.ஸ்டோக்ஸ் வரிகள்
D.ஆண்டிஸ்டோக்ஸ் வரிகள்
6. லென்சின் குவிய தொலைவின் அலகு?
A.டயாப்டர்
B.மீட்டர்🍭
C.நியூட்டன் மீட்டர்
D.டைன் செ.மீ
7. வயது முதிர்வு தூரப்பார்வை என்றழைக்கப்படுவது?
A.ஹைபர் மெட்ரோபியா
B.அஸ்டிக்மேட்டிசம்
C.பிரஸ்பையோபியா🍭
D.மெட்ரோபியா
8. பொருளின் அளவிற்கு சமமான தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு?
A. f
B. ஈறிலாத்தொலைவு
C. 2f🍭
D. fக்கும் 2fக்கும் இடையில்
9. பரும விதி என்பது?
A. மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் வாயுவின் பருமனுக்கு எதிர் தகவல் அமையும்.
B. மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும்🍭.
C. மாறா வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் வாயுவின் பருமன் அதில் உள்ள அணுக்கள் அல்லது மூலக்கூறுகளால் நேர்த்தகவில் இருக்கும்.
D. மாறாத வெப்பநிலையில் அழுத்தத்தின் எண்ணிக்கைக்கு எதிர்த்தகவில் இருக்கும்.
10.1 வோல்ட் என்பது?
A.1கூலும்/1விநாடி
B.1வோல்ட்/1ஆம்பியர்
C.1ஜூல்/1கூலும்🍭
D.1கூலும்/1 ஜூல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.