கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவை ஆண்ட சமயத்தில் அவர்கள் பல எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்நது. 18-ம் நூற்றாண்டு வரை சிறு மன்னர்கள் மற்றும் குறு ஆட்சியார்கள் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது உதாரணத்திற்க்கு தமிழகத்தில் பாளையக்கார்ர்கள் மற்றும் மருது சகோதர்கள் நடத்திய போர்கள். திப்பு சுல்தானின் பிரிட்டீஷ் எதிரப்பு போராட்டம் போன்ற பல உதாரணங்கள் இருக்கின்றன.
18 நூற்றாண்டின் தொடக்கத்தில் முதல் முதல் அறுபது ஆண்டுள் வரை பிரிட்டீஷ் ஆட்சிக்கு மிகப்பெரிய பிரட்சனையாக அமைந்த்து சிப்பாய்களின் புரட்சி. கடைசியாக 1857 –ல் நடந்த மிகப்பெரிய சிப்பாய் புரட்சி அல்லது முதல் இந்திய சுதந்திர போர் என்று அழைக்கப்படும் சிப்பாய்களின் கலத்திற்க்கு பிறகு இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
குறிப்பு ;-
பாபரால் தோற்றுவிக்கப்ட்ட முகலாய ஆட்சி சிப்பாய் புரட்ச்சிக்கு தலைமையேற்றதன் விளைவாக இரண்டாம் பகதூர் ஷாவுடன முடிவுக்கு வந்தது.
சிப்பாய் கலகம் அல்லது முதல் இந்திய சுதந்திரப்போர்க்கு விதை தமிழக மண்ணில் தூவப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம் 1806 சூலை 10 நள்ளிரவு இந்தியாவின் வரலாற்றில் ஒரு மிக முக்கியமான் நாள் பிரிட்டீஷ் ஆட்சிக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் தங்கள் வாள்களை உயர்த்திய தருணம்.
வேலூர் சிப்பாய கலகம்
வேலூர் சிப்பாய கலகத்திற்க்கான காரணங்களை வரலாற்று ஆய்வாளர்கள் இரண்டாக பிரிக்கின்றனர்
1. அரசியல் காரணங்கள்
2. உடனடி காரணங்கள்
அரசியல் காரணங்கள் :-
கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பணியாற்றி இந்திய சிப்பாய்கள் பெரும்பாலும் இந்துக்கள் மற்றும் மூஸ்ஸம்கள். இவர்கள் சிறு மன்னர்கள் மற்றும் பிரட்டீஷால் தோற்றகடிக்கப்பட்ட இந்திய சமஸ்தான அரசர்களின் படைகளில் பணிபுரிந்தவர்கள்.
தங்கள் அரசர்களிடம் பணியாற்றிய போது தங்களுக்கு கிடைத்த மரியாதை கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பணியாற்றும் போது அவர்களுக்கு கிடைக்கவில்லை. சிப்பாய்களிடம பாகுபாடு காட்டப்பட்டது பிரிட்டீஷ் சிப்பாய்களுக்கு அளிக்கப்படும ஊதியத்திற்க்கும் இந்திய சிப்பாய்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்திற்க்கும் பெரிய அளவு வித்தியாசங்கள் இருந்தன.
ராணுவத்தில் உயர்ந்த பதவிகளும் இநதிய வீர்களுக்கு வழங்கப்படவில்லை அவர்கள் எவ்வளவு திறமையுடையவர்களாக இருந்தாலும் சுபேதார் என்ற பதவி மட்டுமே வழங்கப்பட்டது அதற்க்கு மேல் அவர்களுக்கு பதவி மறுக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தியில இந்திய சிப்பாய்கள் இருந்தனர்
மேலும் இந்திய சிப்பாய்களில் பலர் திப்பு சுல்தானின் படைப்பிரிவில் பணியாற்றியவர்கள் அவர்களுக்கு திப்புவின் பிள்ளைகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டிருந்த்து கடும் கோபத்தில் ஆழ்த்தியது மேலும் திப்புவின் மரணத்திற்க்கு பழி வாங்கவும் துடித்துக்கொணடிருந்தனர்.
அவர்கள் திப்புவின் பிள்ளைகளை மீட்டு மீண்டும் இசுலாமிய ஆட்சியை கொண்டு வர விரும்பினர். அதே சமயம திப்புவின் மகன் பதேர் ஹைதர் மராட்டியர்கள் மற்றும் பிரஞ்சுகார்களும் தொடர்பில் இருந்தார் முகமது மாலிக் என்பவர் இந்த ரகசிய பரிமாற்றத்திற்க்கு உதவினார் அவர் மூலமாக பல ரகசிய பரிமாற்றங்கள் நிகழ்ந்தன.
திப்புவின் பிள்ளைகள் பதேஹைதர மற்றும மொய்சுதீன் இருவரும் இணைந்து புரட்சிக்கு திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர்.
அதே சமயம தான் கலகத்திற்க்கு காரணமான உடனடி காரணத்தை பிரிட்டீஷ் செயல்படுத்தியது.
உடனடி காரணங்கள்:
1805 –ம் ஆண்டு சென்னை மகாண் ராணுவத்தளபதி ஜான் கிராடக் ராணுவச்சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார் அதன்படி
வீர்ர்கள் அனைவரும் தாடி மீசை போன்றவற்றை மழித்து முகச்சவரம் செய்து கொள்ள வேண்டும்
நெற்றியில் பொட்டு, காதில் கடுக்கன் போன்ற மதச்சின்னங்கள் அணியக்கூடாது
தலைப்பாகையுடன் கூடிய சீருடை அணிய வேண்டும்
-என்று வற்புறுத்தப்பட்டனர்
எரிந்து கொண்டிருந்த தீயில் எண்ணெய்ளை ஊற்றினர் பிரிட்டீஷ்க்காரர்கள்
இதில் தலைப்பாகையாக அணியப்படும் தொப்பி மாடு மற்றும் பன்றியின் தோலினால் ஆனது
இந்துக்கள் மாடுகளை புனிதமாகவும இசுலாமியர்கள் பன்றிகளை தீண்டத்தகாத்தாகவும் கருதினர். சர்ச்சைக்குரிய இந்த்த தொப்பியை அறிமுகப்டுத்தியவர் தளபதி அக்னியூ
இந்திய சிப்பாய்கள் 1806-ம் ஆண்டு மே மாதம் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ அதிகார்களிடம் இந்த சீர்திருத்தங்களை ஏற்க்க முடியாது என்று முறையிட்டனர் இதனால் அவரக்ளுக்கு 600 -900 வரை சவுக்கடிகள் கொடுக்கப்பட்டதுடன் வேலையில் இருந்தும் நீக்கப்பட்டனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான சிப்பாய்கள் புரட்சிக்கு தயாரகிக்கொண்டிருநதனர்.
வரலாறு நெடுக நோக்கும் போது வீரம் அனைத்தும் துரோக்கத்தினால் தான் தோற்றிருக்கும் அதே போனறு ஒரு துரோகியும் இருந்தான் அவன் பெயர் முஸ்தபா பெக்
1806 சூன் 17 தியதி அவன் பிரிட்டீஷ் அதிகாரி போர்ப்ஸ் என்பவரிடம் கலகம் நடக்கப்போகிறது என்று கூறுகிறான் ஆனால் அப்போது அவரக்ள அதை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை உதாசினப்படுத்தினர்
1806 –ம் ஆண்டு சூலை 9 நாள் திப்பு சுல்தானின் மகள் திருமணம் அதில கலந்து கொள்ள இந்திய வீரகள் அனுமதி கேட்கினறனர் அனுமதியும் வழங்கப்படுகதிறது.
1806 –ம் ஆண்டு சூலை 10 அதிகாலை இரண்டு மணிக்கு புரட்சி வெடிக்கிறது மெட்ராஸ் ரெஜிமண்ட் 23 –வது படைப்பிரிவை சார்ந்த இந்திய வீர்ர்கள் சுபேதார் ஷேக் காசிம், ஷேக் காதர் மற்றும் ஷேக் ஹுசைன் தலைமையில் அணிவகுத்து உறங்கிக் கொண்டிருந்த பிரிட்டீஷ் வீர்ர்கள் அனைவரையும் கொன்றனர்
வீர்ர்கள் ஆயுதக்கிடங்கை கைப்பற்றி அதன் அதிகார் கர்னல் பான்கோட் என்பவர்ரை கொலை செய்தனர் மற்றும ஆயுதப்படை அதிகாரி கர்னல் மீகேரஸ் என்பரும் கொல்லப்பட்டார் மேலும் மேஜர் ஆம்ஸ்ட்ராங் உள்பட 12 ஆங்கிலேய அதிகார்கள் கொல்லப்பட்டனர்
கோட்டை கைப்பற்றப்படுகிறது கோட்டையில் பிரிட்டீஷ் கொடி இறக்கப்பட்டு திப்பு சுல்தானின் புலிக்கொடி ஏற்றப்படுகிறது மற்றும் பதே ஹைதரை மன்னராக அறிவிக்கின்றனர்
அதே சமயம கோட்டைக்கு வெளியே காவலுக்கு இருந்த மேஜர் காட்ஸ் நிலைமையை புரிந்து கொண்டார் உடனடியாக பதினான்கு மைல் தொலைவில் உள்ள ராணிப்பேட்டைக்கு புறப்பட்டு சென்று அங்கிருந்த படைத்தளபதி “ஜில்லப்ஸியிடம் “ நிலைமையை விவரிக்கின்றார். காலை 7 மணிக்கு ஜில்லப்ஸி தலைமையில் ஆங்கிலப்படை புறப்பட்டு சென்றது.
காலை 9 மணியளவில் ஜில்லப்ஸி தலைமையில் கர்னல் லெப்ட் வுட் ஹவுஸ் மற்றும் கென்னடி ஆகியோர் வேலூர் கோட்டையை முற்றுகையிடுகின்றனர் வெற்றியின் களிப்பில் ;இந்திய சிப்பாய்கள கோட்டை கதவை கூட அடைக்க மறந்தனர் எனவே அது பிரிட்டீஷ்க்கு சாதகமாக அமைந்தது நண்பகலுக்கு முன்பாகவே கலகம் அடக்கப்படுகிறது. கலகத்தில் ஈடுப்பட்ட வீர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர் சிலர் பீரங்கிகளின வாய் பகுதியில் கட்டப்ட்டு உடல் சிதறடிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
கலகத்திற்க்கு காரணமான திப்புவின் பிள்ளைகள் கல்கத்தாவிற்க்கு நாடு கடத்தப்பட்டனர்
இந்த கலகத்தினால் மதராஸ் (சென்னை) மாநில ஆளுநர் வில்லயம் பெண்டிங் பிரபு மற்றும ராணுவத்தளபதி ஜான் கிராடக் திருப்பி அழைக்கப்பட்டனர்.
50 வருடங்கள கழித்து நடக்கப்போகும் மிகப்பெரிய சிப்பாய் புரடச்சிக்கு ஒரு முன்னோடியாக அமைந்தது.
2006 –ம் ஆண்டு மத்தய அரசு வேலூர் புரட்சியை கௌரவிக்கும் வகையில் அஞ்சல் தலை வெளியீட்டு சிறப்பித்த்து.
0 Comments: