ஜூலை 05 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்328 - உருமேனியாவுக்கும் பல்கேரியாவுக்கும் இடையில் தன்யூப் ஆற்றின் மீதாக பாலம் கட்டப்பட்டது.
1594 - தந்துறைப் போர்: போர்த்துக்கீசப் படையினர் பேரோ லொபேஸ் டி சூசா தலைமையில் கண்டி இராச்சியம் மீது திடீர்த் தாக்குதலை ஆரம்பித்துத் தோல்வியடைந்தனர்.
1610 - நியூபவுண்ட்லாந்து தீவை நோக்கிய தனது பயணத்தை ஜோன் கை பிறிஸ்டலில் இருந்து 39 குடியேறிகளுடன் கடற்பயணத்தை ஆரம்பித்தார்.
1687 - ஐசாக் நியூட்டன் தனது புகழ்பெற்ற பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா நூலை வெளியிட்டார்.

1996-ம் ஆண்டு ஜுலை மாதம் 5-ந் தேதி எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் ரோஸ்லின் ஆராய்ச்சிக் கூடத்தில் முதன்முதலாக டோலி என்ற செம்மறியாடு குளோனிங் முறையில் பிறந்தது. சோதனைக்குழாய் மூலம் வளர்க்கப்பட்ட டோலி, எம்பிரியோ வளர்ச்சிக்குப் பிறகு ஒரு பெண் ஆட்டின் கர்ப்பப்பைக்குள் வைக்கப்பட்டு முழு வடிவம் பெற்றது. இதன் உருவாக்கத்தில் தலைமை வகித்தவர் லான் வில்மட் என்ற விஞ்ஞானி ஆவார். இவர் செம்மறியாட்டின் படைப்பாளி என புகழப்படுகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.