Current Affairs in Tamil - 02 June ,03 June 2020

தமிழ்நாடு
 • இந்தியாவிலேயே அதிக வென்டிலேட்டர் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3 ஆயிரத்து 371 வென்டிலேட்டர்கள் உள்ளன.
 • தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
 • தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக அஜய் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
 • சென்னை தரமணியில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் இரா.சந்திரசேகரன் (47) நியமிக்கப்பட்டுள்ளார்
 • திருவள்ளுர் மாவட்டம், ஆவடி தாலுகா பட்டாபிராமில் தொழில்துறை சார்பில் ரூ.235 கோடி மதிப்பில் புதிதாக டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு 1-6-2020 அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்தியா

 • ’கிஷான் கடனட்டை திட்டத்தின்’ (Kisan Credit Cards(KCC)) கீழ் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் (ஜூன் - ஜூலை 2020) நாடெங்கிலுமுள்ள பால் தயாரிப்பு தொழிலாளர் ஒன்றியங்கள் மற்றும் பால் உற்பத்தி செய்யும் நிறுவனங்களைச் சேர்ந்த 1.5 கோடி பால் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டைகளை வழங்கவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு திட்டம் மத்திய அரசின் சுய சார்பு இந்தியா திட்டத்தின் (Atma Nirbhar Bharat) ஒரு பகுதியாக அமல்படுத்தப்படுகிறது.
 • கொரோனாவுக்கு சிகிச்சைக்கு ரெம்டெசிவர் ( Remdesivir) மருந்தினை பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.ஜூன் 1 முதல் கொரோனா அவசர சிகிச்சையின் போது நோயாளிக்கு நாள் ஒன்றுக்கு 5 டோசுகள் வரை இம்மருந்தினை வழங்க இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.
 • ”ஒரே தேசம் ஒரே குடும்ப அட்டை” (One Nation One Card Scheme) திட்டத்தில் சிக்கிம் , ஒடிஷா மற்றும் மிஷோராம் மாநிலங்கள் 1 ஜீன் 2020 ல் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் அறிவித்துள்ளார். இதன் மூலம் இத்திட்டத்தில், 1-6-2020 வரையில் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 • ”பிரதான் மந்திரி ஸ்வாநிதி திட்டம்” (Pradhan Mantri SVANidhi - PM Street Vendors Atmanirbhar Nidhi) என்ற பெயரில் தெருவோர வியாபாரிகளுக்கான நலத்திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.10,000 கடனுதவி நகர்புற மற்றும் ஊர்ப்புற தெருவோர வியாபாரிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
 • "நிஷார்கா புயல்” (NISARGA Cyclonic Storm) அரபிக்கடலின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகி 3-6-2020 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் வட பகுதி மற்றும் குஜராத் மாநிலத்தின் தென் பகுதிகளைக் கடக்கவுள்ளது.
  • கூ.தக. : நிஷார்கா புயலுக்கு பெயர் சூட்டிய நாடு - வங்காளதேசம்
 • பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளா் வாஜித் கான் 1-6-2020 அன்று கரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தாா்.
வெளிநாட்டு உறவுகள் 
 • ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் தொலைபேசியில் அழைப்பு விடுத்தார்.ஜி-7 நாடுகள் அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளின் அதிபர்கள், தலைவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி பொருளாதாரம், வர்த்தகம், வியாபாரம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசுவர். இந்த மாநாட்டை இந்த அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் அடுத்தடுத்து நடத்தும்.அதன்படி இந்த ஆண்டுக்கான (2020) மாநாடு செப்டம்பர் மாதத்தில் (ஜீன் மாதத்தில் நடைபெறவிருந்தது) நடத்த முடிவு செய்வதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, ரஷ்யா, தென்கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களையும் அழைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பொருளாதாரம்
 • தொழில் துவங்க உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 23 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. StartupBlink நிறுவனம் வெளியிட்டுள்ள Ecosystem Rankings 2020 எனும் தரவரிசைப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் பெற்றுள்ளன.
நியமனங்கள்
 • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (Micro, Small & Medium Enterprises(MSME)) அறிவிக்கப்பட்டிருந்த ரூ.3 இலட்சம் கோடி கடனுதவி திட்டத்தை அமல்படுத்துவதற்கான சிறப்பு குழுவை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பிரதமர் மோடி 31-5-2020 அன்று அமைத்துள்ளார்.

புத்தகங்கள்
 • ‘One Year of Modi 2.0 – Towards A Self-Reliant India’ என்ற பெயரிலான பிரதமர் மோடி அவர்களின் இரண்டாம் ஆட்சி காலத்தின் முதலாண்டு சாதனைகளை உள்ளடக்கிய மின் - புத்தகத்தை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
விளையாட்டு 

 • ”கேலோ இந்தியா இ-பாத்ஷாலா” ( ‘Khelo India e-Pathshala‘) என்ற பெயரில் இந்தியாவில் முதல் தேசிய அளவிலான ஆன்லைன் விளையாட்டுக் கல்வி பயிற்சி திட்டத்தை இந்திய விளையாட்டு ஆணையம் (Sports Authority of India (SAI)) மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பு ( National Sports Federations (NSF)) ஆகியவை இணைந்து 1 ஜீன் 2020 அன்று தொடங்கியுள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.