Current Affairs in Tamil - 01 June 2020தமிழ்நாடு
 • பிரதமரின் பாராட்டைப் பெற்ற தமிழக சலூன் கடைக்காரர் சி.மோகன்  : தனது மகளின் படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை   கொரோனா காலத்தில் பாதிப்படைந்த ஏழைகளுக்கு வழங்கிய மதுரையைச் சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் சி.மோகன் என்பவரின் சேவையை   பிரதமர் மோடி அவர்கள்   31-5-2020 அன்றைய தனது மான்கிபாத் வானொலி உரையில் பாராட்டியுள்ளார். 
 • தமிழக அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக பேடிஎம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா
 •  ”எனது வாழ்க்கை எனது யோகா” (“My Life My Yoga”) என்ற பெயரில்  வீடியோ போட்டியை   பிரதமர் மோடி அவர்கள் 31-5-2020 அன்று தொடங்கி வைத்துள்ளார்.  இந்த போட்டியை மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இந்திய மருத்து ஆராய்ச்சி கவுண்சில் (ICMR (Indian Council of Cultural Research) ஆகியவை இணைந்து நடத்துகின்றன. 

உலகம்
 • ஜூன் மாதம்  10 ஆம் தேதி  நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை டொனால்டு டிரம்ப் செப்டம்பர் 2020 மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். மேலும், ஆஸ்திரேலியா, ரஷ்யா, தென்கொரியா , இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஜி 7 மாநாட்டில் பங்கேற்க தாம் அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 
  • கூ.தக. : அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 அமைப்பு 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 • ஜியார்ஜ் பிளையாட் (George Floyd) எனும் ஆப்பிரிக்க அமெரிக்க மனிதர்  அமெரிக்காவின் மின்னசோடா மகாணத்தில் போலிஸ் அதிகாரி ஒருவரால் மனிதாபிமானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அந்நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்துள்ளன. 

நியமனங்கள்
 • இந்தியா உட்கட்டமைப்பு நிதி நிறுவனத்தின் (India Infrastructure Finance Company Limited (IIFCL))  மேலாண் இயக்குநராக PR ஜெய்சங்கரை மத்திய நிதி அமைச்சகம் நியமித்துள்ளது. 
 • இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் (Food Safety and Standards Authority of India (FSSAI)) முதன்மை செயல் அதிகாரியாக அருண் சிங்கால் (Arun Singhal) நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வமைப்பின் தலைவராக ரீட்டா டியோடியா(Rita teotia ) உள்ளார். 

புத்தகங்கள்
 • ‘நரேந்திர மோடி-வளமையின் முன்னோடி மற்றும் உலக அமைதியின் தூதர்’ ("Narendra Modi – Harbinger of Prosperity & Apostle of World Peace") என்ற பெயரிலான பிரதமர் மோடி பற்றிய புதிய வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை அகில இந்திய பார் அசோசியேசன் தலைவர் ஆதிஷ் சி.அகர்வாலா, அமெரிக்க எழுத்தாளர் எலிசபெத் ஹோரன் ஆகியோர் இணைந்து எழுதி உள்ளனர்.

விளையாட்டு 
 • இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை  கிரண்ஜீத் கவுர் (Kiranjeet Kaur)  ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக  நான்கு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.