Sunday, 28 June 2020

எதற்காக எழுதுகிறேன்? என்ற நூலின் ஆசிரியர் யார்?

91."கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு" இக்குறளில் 'கனவிலும் நினைக்காதது யாருடைய நட்பு' என திருவள்ளுவர் கூறுகிறார்?
A.தீஞ்செயல்களை புரிவோரது நட்பு
B.தான் செய்யும் குற்றத்தை மன்னிக்கும் குணம் இல்லாதோர் நட்பு
C.தகுந்த நேரத்தில் உதவி செய்யாதோர் நட்பு
D.செயல் வேறு சொல் வேறு என்று உள்ளவர் நட்பு😍
92. "தாயின் பசியை கண்டபோதும் சான்றோர் பழிக்கும் செயல்களை செய்யாதே" என்று திருவள்ளுவர் கீழ்காணும் எந்த திருக்குறள் மூலம் உணர்த்துகிறார்?
A. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்
B.நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய வாயினர் ஆதல் அரிது
C.ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை😍
D.ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்
93. "அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண்" குறிப்பிடப்படும் இரு ஐந்து சால்புகள் யாவை?
A.இணக்கமும் வானமும்
B.இணக்கமும் பிணக்கும்
C.வானமும் நாணமும்
D.நாணமும் இணக்கமும்😍
94. "ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவும்ஓர் நோய்" திருக்குறளில் திருவள்ளுவர், 'இறக்கும் வரை உள்ள நோய்' எது என்று கூறுகிறார்?
A.கொடிய குணம் உடையவன்
B.தான் செய்ய மனம் இருந்தும், தானம் செய்யாமல் இருப்பவன்
C.சொன்னாலும் செய்யாமல், தானாகவும் செய்யாமல் இருப்பவன்😍
D.மிகுதியாக உண்பவருக்கு உண்டாகும் நோய்
95. துன்பத்தில் மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால், இன்பத்தில் சிறந்த இன்பம் பெறலாம், என இன்பத்தையும் துன்பத்தையும் பற்றி ஒருங்கே திருவள்ளுவர் கூறும் திருக்குறள் எது?
A.பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
B.இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
C.இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்😍
D.மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
96. திருக்குறள் தெளிவுரை எழுதியவர்?
A.ஈவேரா
B.வ. உ. சிதம்பரனார்😍
C.கி. ராஜநாராயணன்
D.கு. சிவராமன்
97. "காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்" என்ற திருக்குறள் எந்த அதிகாரத்தில் பயின்று வந்துள்ளது?
A.மெய்யுணர்தல்😍
B.பெரியாரைத் துணைக்கோடல்
C.கொடுங்கோன்மை
D.கண்ணோட்டம்
98. "நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று" இக்குறட்பாவில் பயின்று வரும் அணி எது?
A.உவமையணி😍
B.பிறிது மொழிதல் அணி
C.எடுத்துக்காட்டு உவமையணி
D.தற்குறிப்பேற்ற அணி
99. எதற்காக எழுதுகிறேன்? என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.கண்ணதாசன்
B.காளமேகப்புலவர்
C.புதுமைப்பித்தன்
D.ஜெயகாந்தன்😍
100. மனவலிமை, குடிகளை காத்தல், ஆட்சிமுறையை கற்றல், நூல்களைக் கற்றல், விடாமுயற்சி ஆகிய ஐந்தும் சிறப்பாக அமைந்தவரே அமைச்சர் ஆவார் என்பதை எக்குறட்பாவின் மூலம் நாம் அறியலாம்?
A.கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்ட தமைச்சு
B.வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ டைந்துடன் மாண்ட தமைச்சு😍
C.மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம் யாவுள முன்நிற் பவை
D.செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் தியற்கை அறிந்து செயல்

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: